இட்லி, தோசைக்கு மட்டுமல்ல... சாதத்திற்கும் ஏற்ற 2 வகை 'ஹெல்தி' சட்னிகள்!

'Healthy' chutneys
'Healthy' chutneys
கல்பனா ராஜகோபால்

கல்பனா எனும் நான் பள்ளிப் பருவத்திலிருந்தே என்னுள் இருக்கும் தமிழார்வத்தால் புத்தகம் வாசிப்பதிலும் கவிதை எழுதுவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன். என் கவிதைக்கு முன்னாள் ஜனாதிபதி திரு அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் பெற்று உள்ளேன். என் கவிதை முதன் முதலில் மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியாகி அதற்கு பரிசும் பெற்றேன். பணி ஓய்வுக்கு பிறகு என் எழுத்துப் பணியை கல்கி ஆன்லைனில் தொடந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு நல்கிய. கல்கிக் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Updated on: 

வெள்ளரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1 no

பச்சை மிளகாய் – 3 no

வர மிளகாய் – 1 no

புளி – நெல்லிக்காய் அளவு

கடுகு – 1 ஸ்பூன்

துருவிய தேங்காய் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு, கடுகு – தலா 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

வர மிளகாய் – 1 no

செய்முறை:

முதலில் வெள்ளரிக்காயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கடுகு, வர மிளகாய், உப்பு மற்றும் புளி சேர்த்து அரைக்கவும்.

பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். வெள்ளரிக்காய் முழுவதும் அரையக்கூடாது. அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, உடைத்த வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்து நன்றாக கிளறவும்.

சுவையான வெள்ளரிக்காய் சட்னி தயார். இதை சூடான இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
எந்தெந்த காய்கறிகளை வேகவைத்து நீரை வடிக்க வேண்டும்? ஏன் தெரியுமா?
'Healthy' chutneys

நெல்லிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:

கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் – 5 no

பச்சை மிளகாய் – 1 no

வர மிளகாய் – 2 no

புளி – நெல்லிக்காய் அளவு

கடுகு – 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்

துருவிய தேங்காய் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் – 1/4 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு – தலா 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் நெல்லிக்காயை நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, வர மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.

பிறகு அதே கடாயில் நெல்லிக்காய், உப்பு, புளி சேர்த்து நன்றாக வதக்கவும். இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்துக்கிளறி இறக்கவும்.

ஒரு மிக்ஸியில் முதலில் வறுத்த பொருட்களை அரைத்து, பின்னர் வதக்கிய நெல்லிக்காயை சேர்த்து அரைக்கவும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.

தாளிக்க எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

சுவையான மற்றும் ஆரோக்கியமான நெல்லிக்காய் சட்னி தயார். இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com