கடைகளில் இனி வாங்கவே மாட்டீங்க! வீட்டிலேயே செய்யக்கூடிய 3 ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபிகள்!

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் - Healthy Snacks
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் - Healthy Snacks
Updated on

ஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விருப்பமான உணவாகும். அதை கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் நாம் வீட்டிலேயே செய்வது மிகுந்த ஆரோக்கியம் உடையதாக இருக்கும். மேலும் இதில் எந்தவித ஃபுட் கலர் மற்றும் கஸ்டட் பவுடர் சேர்க்காமல் இயற்கையான முறையில் இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

மாம்பழ ஐஸ்கிரீம் 

தேவையான பொருட்கள்: 

பசும்பால்                  - 1 லிட்டர் 

மாம்பழம்                  - 2 

சர்க்கரை                  - தேவையான அளவு 

கான்பிளவர் மாவு   - தேவையான அளவு

செய்முறை: 

நன்கு பழுத்த இனிப்பு சுவை மிகுந்த மாம்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து மிகவும் மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தேவையான அளவு பசும்பால் ஊற்றி சிறிதளவு பசும்பாலை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்து அதனுடன் கான்பிளார் மாவை கட்டி இல்லாமல் கலந்து காய்ச்சிய பசும்பாலுடன் சேர்த்துகிளறி கொடுக்கவேண்டும். இது ஜெல்லி போன்ற பதத்தில் வந்தவுடன் நன்கு ஆறவிட்டு மாம்பழ கலவையுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மிகவும் மென்மையாக அரைத்துக்கொள்ளவும். இதனை ஒரு கண்டெய்னரில் சேர்த்து ஃப்ரிட்ஜில் நான்கு முதல் ஐந்து  மணிநேரம் ஃப்ரீசரில் வைக்கவேண்டும்.

இப்பொழுது அதனை எடுத்து குழந்தைகளுக்கு பரிமாறலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு விருப்பமான மாம்பழ ஐஸ்கிரீம் வீட்டிலேயே தயார். இதில் எந்தவித ஃபுட் கலரும் சேர்க்காததால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. 

இதையும் படியுங்கள்:
உடல் எடையைக் குறைக்க உதவும் அருமையான 5 வாழைத்தண்டு ரெசிபிகள்!
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் - Healthy Snacks

ரோஸ் மில்க் புட்டிங் 

ரோஸ்மில்க் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான குளிர்பானமாகும். அதனை புதுவிதமாக புட்டிங் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

பசும்பால்                - 1 லிட்டர் 

அகர் அகர்              - 50 கிராம் 

சர்க்கரை                - தேவையான அளவு 

ரோஸ் மில்க் எஸ்என்ஸ் - சிறிய துளிகள்

செய்முறை: 

வாணலியில் தேவையான அளவு நீர் ஊற்றி அகர் அகர் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு லிட்டர் பசும்பால்  மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு ரோஸ் எஸ்என்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒருமணி நேரம் நன்கு ஆறவிட வேண்டும். இவை நன்கு ஆரியவுடன் ஒரு கண்டெய்னரில் சேர்த்து ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும். புதுவிதமான சுமையில் ரோஸ் மில்க் புட்டிங் வீட்டிலேயே தயார். 

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே சுலபமாக செய்யப்படும் எக்லெஸ் பிளம் மற்றும் கப் கேக்!
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் - Healthy Snacks

ஆப்பிள் பேன் கேக் 

பேன் கேக் என்றாலே நாம் கடைகளில்தான் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக வீட்டிலேயே ஒரு புதுவிதமான சுவையில் ஆப்பிளில் பேன் கேக் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

ஆப்பிள்                 - 2

நாட்டு சர்க்கரை    - தேவையான அளவு 

கோதுமை மாவு    - தேவையான அளவு 

பசும்பால்               - தேவையான அளவு 

நெய்                      - தேவையான அளவு

செய்முறை: 

ஆப்பிளை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் தேவையான அளவு பசும்பால், நாட்டு சர்க்கரை சேர்த்து  மையாக அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். இதில் தேவையான அளவு கோதுமை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

தோசை பாத்திரத்தில் தேவையான அளவு நெய் ஊற்றி இந்த மாவை சிறிய வட்ட வடிவத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இரண்டு புறமும் நன்கு சிவந்து வந்தவுடன் எடுக்கவும். சுவையான கமகமக்கும் ஆப்பிள் பேன் கேக் வீட்டிலேயே தயார்.

logo
Kalki Online
kalkionline.com