ஆரோக்கியம் தரும் கம்பு: வீட்டிலேயே எளிதாகச் செய்யக்கூடிய 8 சுவையான உணவுகள்!

உடலுக்கு உடனடி ஆற்றலையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் தரும் கம்பு உணவுகளின் எளிய செய்முறை விளக்கம்.
கம்பு உணவுகள் - Pearl Millet Food
கம்பு உணவுகள் - Pearl Millet Food
Updated on

ம் பாரம்பரிய உணவுகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சிறுதானியங்களில் கம்பு முதன்மையானது. அதிக அளவிலான நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள கம்பு, உடலுக்கு உடனடியாக ஆற்றலைத் தருவதோடு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. கம்பைக்கொண்டு, சுவையாகவும் மிக எளிமையாகவும் செய்யக்கூடிய 8 சிறப்பான உணவு வகைகளை இங்கு காண்போம்.

கம்பு உணவுகள் - கம்பு கூழ்

செய்முறை: கம்பை ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீரை கொதிக்கவைத்து அரைத்த கம்பைச் சேர்த்து கட்டிபிடிக்காமல் வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் ஆறவைத்து, மோர், நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து பருகலாம்.

கம்பு தோசை

செய்முறை: கம்பு 2 கப், உளுந்து ½ கப், வெந்தயம் 1 ஸ்பூன் ஆகியவற்றை ஊறவைத்து மாவாக அரைக்கவும். 8 மணி நேரம் புளிக்கவைத்து, உப்பு சேர்த்து வழக்கமான தோசை போல சுட்டு எடுக்கவும்.

கம்பு அடை

செய்முறை: கம்பு மாவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, முருங்கைக்கீரை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தடிமனான மாவாக பிசையவும். தோசைக் கல்லில் அடை போல தட்டி இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

கம்பு உப்புமா

செய்முறை: சிறிதாக உடைந்த கம்பை ஊறவைக்கவும். கடாயில் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் தாளிக்கவும். தேவையான தண்ணீர் விட்டு கொதித்ததும் கம்பைச் சேர்த்து மிதமான தீயில் வேகவைத்து இறக்கவும்.

கம்பு லட்டு

செய்முறை: முழு கம்பு ஒரு கப், சிகப்பு அரிசி அரை கப் எடுத்து தனி தனியாக வறுத்து ஆறவைத்து நைஸ் மாவாக திரிக்கவும். பின்னர் அரை கப் வறுத்த நிலக்கடலை, அரை கப் பொரிக்கடலை சேர்த்து கரகரப்பாக அரைத்து, மொத்த மாவையும் கலந்து அதனுடன் 250 கிராம் வெல்லப்பாகு, ஏலக்காய் தூள் மற்றும் சூடான நெய் சேர்த்து சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

இதையும் படியுங்கள்:
குப்பையில் வீசும் உணவை அமுதமாக மாற்றும் 16 சமையலறை ரகசியங்கள்!
கம்பு உணவுகள் - Pearl Millet Food

கம்பு புட்டு

செய்முறை: கம்பு மாவில் லேசாக உப்புத் தண்ணீர் தெளித்து உதிரியாகப் பிசையவும். இட்லி பாத்திரத்தில் ஒவ்வொரு குழியிலும் தேங்காய் துருவல் போட்டு அதன் மேல் பிசைந்து வைத்த கம்பு மாவை ஒரு பிடி வைத்து அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து, சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பரிமாறவும்.

கம்பு உணவுகள் - Pearl Millet Food
கம்பு உணவுகள் - Pearl Millet Food

கம்பு பக்கோடா

செய்முறை: கம்பு மாவு ½ கப், ¼ கப் கடலை மாவு, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசையவும். சூடான எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுக்கவும்.

கம்பு சூப்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ்), இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வேகவைக்கவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி, குறுமிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்திற்கு சுடச்சுட மொறுமொறு பக்கோடா: எண்ணெய் குடிக்காமல் செய்ய இதோ வழி!
கம்பு உணவுகள் - Pearl Millet Food

இன்றைய நவீன காலகட்டத்தில் துரித உணவுகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்குச் சிறந்த மாற்றாக இந்த சிறுதானிய உணவுகள் அமைகின்றன. கம்பைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவுகள் சுவையானது மட்டுமல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் அல்லது வாரத்தில் சில நாட்களாவது கம்பை நம் உணவில் சேர்த்துக் கொண்டு, ஆரோக்கியமான மற்றும் பாரம்பரியமிக்க வாழ்க்கை முறையை நோக்கி அடி எடுத்து வைப்போம்.

இந்த பாரம்பரிய கம்பு செய்முறைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து, உடல் எடையை இயற்கையான முறையில் குறைத்து, நாள் முழுதும் சுறுசுறுப்பான ஆற்றலைப் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com