உடலுக்கு வலிமை தரும் பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா மால்ட் மற்றும் ஆரோக்கிய சூப்கள்!

பாரம்பரிய சிறுதானியங்களால் உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பெறுங்கள்.
ஆரோக்கிய பானங்கள் - Traditional Drinks
ஆரோக்கிய பானங்கள் - Traditional Drinks
கல்பனா ராஜகோபால்

கல்பனா ராஜகோபால், பள்ளிப் பருவம் முதலே தமிழ் வாசிப்பிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது கவிதைக்கு டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து வாழ்த்துக் கடிதம் பெற்றுள்ளார். மங்கையர் மலர் வெள்ளி விழா மலரில் வெளியான இவரது கவிதை பரிசு வென்றது. பணி ஓய்வுக்குப் பின் கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஆரோக்கிய பானங்கள்:

வலிமை தரும் மாப்பிள்ளை சம்பா மால்ட்

பாரம்பரிய சிறுதானியங்களில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் கருப்பு உளுந்து சேர்த்து தயாரிக்கும் இந்த சத்து மால்ட், உடலுக்கு வலிமையையும் ஊட்டச் சத்தையும் வழங்கும் ஆரோக்கிய பானமாகும்.

தேவையான பொருட்கள்:

மாப்பிள்ளை சம்பா அரிசி – 1 கப்,

கருப்பு உளுந்து – 1 கப்,

கருப்பட்டி அல்லது கரும்புச் சர்க்கரை – தேவையான அளவு,

ஏலக்காய் – 4 No.

செய்முறை:

மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் கருப்பு உளுந்தை நன்றாகக் கழுவி, வெயிலில் உலர்த்தவும். பின்னர் ஏலக்காயுடன் சேர்த்து வாணலியில் மிதமான தீயில் நன்கு வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு கருப்பட்டியைப் பொடியாக நொறுக்கி, அதே சூடான வாணலியில் ஐந்து நிமிடங்கள் லேசாகச் சூடுபடுத்தவும். அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸியில் நைசாகப் பொடித்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமிக்கவும். தேவையான அளவு பவுடரை சூடான பாலில் கலந்து பருகலாம்.

காய்கறி பருப்பு நோய் எதிர்ப்பு சக்தி சூப்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – ½ கப்

கேரட் – 1 No

பீன்ஸ் – 10 No.

கீரை – 1 கப்

தக்காளி – 2 No

சின்ன வெங்காயம் – 10 No

பூண்டு – 4 பல்

இஞ்சி – 1 சிறிய துண்டு

மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி

மிளகு தூள் – ½ தேக்கரண்டி

சீரக தூள் – ½ தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

ஆரோக்கிய பானங்கள் - Traditional Drinks
ஆரோக்கிய பானங்கள் - Traditional Drinks

செய்முறை:

குக்கரில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, வெங்காயம் வதக்கவும். பின்னர் நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளி, கீரை சேர்த்து வதக்கி, பருப்புடன் மஞ்சள் உப்பு, மிளகு, சீரக தூள் சேர்க்கவும்

தண்ணீரை ஊற்றி 10 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும். இறுதியில் கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும். ஆரோக்கியமான, சுவையான நோய் எதிர்ப்பு சக்தி சூப் தயார்.

இதையும் படியுங்கள்:
மாதுளையோடு பாலா? உடலுக்குள் நடக்கும் விபரீதம் என்ன? - நியூட்ரிஷியன் எச்சரிக்கை!
ஆரோக்கிய பானங்கள் - Traditional Drinks

நோய் எதிர்ப்பு சக்தி தரும் முருங்கைக்கீரை–துளசி சூப்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை – 1 கப்,

துளசி இலை – ¼ கப்

புதினா – சிறிதளவு,

தக்காளி – 1,

பூண்டு – 4 பல்,

மிளகு – ½ டீஸ்பூன்,

சீரகம் – ½ டீஸ்பூன்,

நெய் – 1 டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு – சில துளிகள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

நெய்யில் மிளகு, சீரகம், பூண்டு வதக்கி, தக்காளி, முருங்கைக்கீரை, துளசி, புதினா சேர்த்து சிறிது தண்ணீருடன் வேகவிடவும். ஆறியதும் அரைத்து வடிகட்டி மீண்டும் கொதிக்கவைத்து உப்பு சேர்க்கவும். இறுதியில் எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும். சத்தும் சுவையும் நிறைந்த இந்த சூப் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

மணத்தக்காளி–பாதாம் இம்யுனிட்டி சூப்

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை – 1 கப்,

பாதாம் – 8,

சின்ன வெங்காயம் – 5,

பூண்டு – 4 பல்,

மிளகு – ½ டீஸ்பூன்,

சீரகம் – ½ டீஸ்பூன்,

நெய் – 1 டீஸ்பூன்,

பால் – ¼ கப் (விருப்பத்திற்கேற்ப), உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பாதாமை 15 நிமிடம் ஊறவைத்து தோல் நீக்கவும். நெய்யில் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் வதக்கி, மணத்தக்காளி கீரை சேர்த்து லேசாக வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, பாதாமுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். விருப்பமிருந்தால் சிறிதளவு பால் சேர்த்து இறக்கவும்.

கீரையின் சத்தும், பாதாமின் நல்ல கொழுப்பு மற்றும் புரதமும் நிறைந்த சூடாக அருந்த ஏற்ற ஆரோக்கியமான பானம்.

இதையும் படியுங்கள்:
உடலுக்குத் தெம்பு தரும் வெள்ளைச் சோளம்: பாரம்பரிய முறையில் 3 அருமையான ரெசிபிகள்!
ஆரோக்கிய பானங்கள் - Traditional Drinks