
பாரம்பரியமிக்க சோளப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
முழு சோளம் – ½ கிலோ
இட்லி அரிசி – 150 கிராம்
உளுந்து பருப்பு – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
மேலே குறிப்பிட்ட பொருட்களை எட்டு மணி நேரம் ஊறவைத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து புளிக்க விடவும்.
அடுப்பில் மிதமான தீயில் பணியாரக் கல் வைத்து, தேவையான எண்ணெய் விட்டு, அரைத்து வைத்துள்ள மாவை பணியாரக் குழியில் ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.
சோளப் பணியாரம் சூடாக தேங்காய் சட்னி அல்லது தக்காளி பஜ்ஜியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தக்காளி பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த தக்காளிப் பழங்கள் – 4
கத்தரிக்காய் – 2
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 4 (காரத்திற்கு ஏற்ப மாறுபடும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயம், தக்காளிப் பழங்கள், பூண்டு, கத்தரிக்காய் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் கத்தரிக்காய் சேர்த்து கிளறவும். அதனுடன் தக்காளிப் பழத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
கத்தரிக்காய் நன்றாக வெந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி வைத்து, பருப்பு கடையும் மத்தால் கடைந்து எடுக்கவும் அல்லது ஆறிய பின் மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் சுற்றி எடுத்து பாத்திரத்தில் கொட்டி மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சூப்பரான தக்காளி பஜ்ஜி ரெடி.