ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்! ஹை-புரோட்டீன் மசூர் தால் டிக்கி செய்வது எப்படி? 

எண்ணெயில் பொரிக்காமல், அதிக புரதச்சத்துடன் மொறுமொறுப்பான மசூர் தால் (மைசூர் பருப்பு) டிக்கியை வெறும் 15 நிமிடங்களில் வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுங்கள்!
masoor dal tikki recipe
masoor dal tikki recipe
Updated on

மாலை நேரங்களில் தேநீருடன் தொட்டுக்கொள்ள கரகரப்பான ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் வரும். ஆனால், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பதாலும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து விடுவோம். 

இனி கவலையே வேண்டாம். உங்கள் நாவின் ருசியையும், உடலின் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்தும் ஒரு அருமையான ரெசிபிதான் 'ஹை-புரோட்டீன் மசூர் தால் டிக்கி'. மசூர் தால் எனப்படும் மைசூர் பருப்பில் அபரிமிதமான புரதச்சத்து உள்ளது. இதை எண்ணெயில் பொரிக்காமல், தோசைக்கல்லில் லேசாகச் சுட்டு எடுப்பதால் இது நூறு சதவீதம் ஆரோக்கியமானது. இதை எப்படிச் சுலபமாகச் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • மசூர் தால் (மைசூர் பருப்பு) - 1 கப்

  • பெரிய வெங்காயம் - 1

  • பச்சை மிளகாய் - 2 

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

  • சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்

  • மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்

  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

  • ஓட்ஸ் பொடி அல்லது கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

  • மல்லித்தழை - ஒரு கைப்பிடி

  • சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை!

முதலில் ஒரு கப் மைசூர் பருப்பை நன்றாக இரண்டு முறை கழுவி, சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். பருப்பு நன்றாக ஊறியதும், அதிலுள்ள தண்ணீரை முழுமையாக வடித்துவிட வேண்டும். கொஞ்சமாகத் தண்ணீர் இருந்தாலும் டிக்கி சரியாக வராது. இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் வடித்து வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, தண்ணீர் எதையும் சேர்க்காமல் சற்று கொரகொரப்பான பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சீரகத் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். 

இதையும் படியுங்கள்:
சமையல் கலையில் அசத்தலாம் வாங்க! உங்கள் கிச்சனை ஜொலிக்க வைக்கும் டிப்ஸ்!
masoor dal tikki recipe

டிக்கி உடையாமல் வர, பைண்டிங் ஏஜெண்டாக இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பொடி அல்லது கடலை மாவைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக நறுக்கிய மல்லித்தழையைத் தூவி, தண்ணீர் சேர்க்காமல் அனைத்தையும் சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளை எடுத்து, கைகளில் தட்டையாக வடை போலவோ அல்லது டிக்கி போலவோ தட்டிக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு இரும்புத் தோசைக்கல் அல்லது நான்-ஸ்டிக் பேன் வைத்து லேசாகச் சூடாக்கவும். 

இதையும் படியுங்கள்:
வயிறு சூட்டைத் தணிக்கும் சூப்பர் ரெசிபி... சத்துகள் நிறைந்த 'குலித் கலான்' செய்வது இவ்வளவு சுலபமா?
masoor dal tikki recipe

அதில் ஒரு ஸ்பூன் எண்ணெயைத் தடவி, தயார் செய்து வைத்துள்ள டிக்கிகளை வரிசையாக வைக்கவும். அடுப்பை முற்றிலும் மிதமான தீயில் வைத்து, இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொறுமையாகத் திருப்பிப் போட்டு வேகவைத்தால், அதிகப் புரதச்சத்து நிறைந்த, ஆரோக்கியமான 'மசூர் தால் டிக்கி' தயார். 

logo
Kalki Online
kalkionline.com