ரேஷன் அரிசி வாசனையும் பிசுபிசுப்பும் நீங்கி உதிரியாக வர... இந்த 5 ட்ரிக்ஸ் போதும்!

இரவில் சாப்பிட்டாலும் காலை சாதம் போல மணக்காமல் இருக்க சூப்பர் சமையல் குறிப்பு.
ரேஷன் அரிசி
ரேஷன் அரிசிGemini image
அகிலா சிவராமன்

அகிலா சிவராமன் 1995 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். கட்டுரைகளும் கதைகளும் கிட்டத்தட்ட 500க்கும் மேல் வெளி வந்துள்ளன. இறைவன் மீது பல பாடல்களை எழுதியுள்ள இவரது முதல் சிறுகதை 'புயலின் மறுபக்கம்' 2025 ஜனவரியில் மங்கையர் மலரில் வெளியானது. தொடர்ந்து கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். 'கல்கியில் எழுத ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய திறன் என்னவென்று எனக்கே தெரிய ஆரம்பித்தது' என்று கூறும் அகிலா, சமூக நலன் அடிப்படையிலும், தேச நலன் அடிப்படையிலும் தனது படைப்புகள் அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவர்.

Updated on: 

இன்றைக்கு நிறைய பேர் வீடுகளில் ரேஷன் அரிசியை வாங்குவதையே நிறுத்தி விட்டார்கள். ஏன்னென்றால் அதில் வருகின்ற வாசனை பலருக்கு பிடிப்பதே இல்லை. மேலும் சாதமும் உதிராக வராமல் தண்ணீர் ஊற்றிக் கொண்டது போல வரும். அதனால் பல பேர் கடையில் விற்கும் அதிக விலை அரிசியை தான் வாங்கி சமைக்கிறார்கள். சில பேருக்கு விலை உயர்ந்த அரிசியை வாங்கும் அளவிற்கு வசதி இருக்காது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் ரேஷன் அரிசியை தான் வாங்கி உண்ண வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுகிறது. அதுவும் காலையில் வடித்த சாதத்தை இரவில் உண்ணும் போது அந்த அரிசியின் வாசனை மிக அதிகமாகவே வரும். வேறு வழியில்லாமல் ஒரு சிலர் இன்றளவும் அதை உண்ணதான் செய்கிறார்கள். ஆனால், அந்த காலத்திலே நம்முடைய மூதாதையர்கள் ரேஷன் அரிசியில் கூட, கடையில் காசு கொடுத்து வாங்கும் அரிசியை போல, எந்த விதமான வாசனையும் இல்லாமல், வடிக்கத் தான் செய்தார்களா? இன்றும் அந்த முறையை பின்பற்றினால் அதைப் போன்றே வடிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? கண்டிப்பா முடியும். வாங்க. அதற்கான 5 வழிகளை இப்பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
இதய ஆரோக்கியம் தரும் தாமரை: இதழ் முதல் விதை வரை 5 அருமையான ஆரோக்கிய ரெசிபிகள்!
ரேஷன் அரிசி

1. முதலில் ரேஷன் அரிசியை முறத்தில் போட்டு, புடைத்து, தூசுகள், பூச்சு, இல்லாமல் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முறத்திலிருந்து ஒரு பெரிய பாத்திரத்தில், அரிசியை கொட்டி கொள்ளுங்கள்.

2. அடுத்த படியாக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைக்கவும். அரிசியில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு உப்பை போட்டு வெந்நீரை ஊற்றி ஒரு கரண்டியை வைத்து, கலக்கிய படி நன்றாக கழுவுங்கள். இவ்வாறு வெந்நீரை ஊற்றி நான்கு முறை அலச வேண்டும்.

ரேஷன் அரிசி
ரேஷன் அரிசிGemini image

3. அதற்கு பிறகு, சாதாரண தண்ணீரை ஊற்றி, இரண்டு முறை அலச வேண்டும். இப்போ சாதம் வைக்க, ரேஷன் அரிசி தயாராகி விட்டது.

4. உலைபானையில் தண்ணீர் நன்றாக கொதித்ததும் ரேஷன் அரிசியை போடவும். சாதம் முக்கால் பங்கு வேகும் வரை காத்திருக்கவும்.

இதையும் படியுங்கள்:
கிராமத்து சுவையில் மணமணக்கும் கொள்ளு பயறு 5 சூப்பர் ரெசிபிகள்!
ரேஷன் அரிசி

5. முக்கால் பாகம் வரை வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில், சிறதளவு தண்ணீரை சுட வைத்துக் கொள்ளுங்கள். சாதம் முக்கால் பாகம் வெந்ததும், அரிசி வெந்து கொண்டிருக்கும் அந்த பானையிலிருந்து தண்ணீரை மட்டும் வடித்து விடவும். இன்னொரு பாத்திரத்திலிருக்கும் சுடு தண்ணீரை எடுத்து இந்த உலை பானையில் ஊற்றி, மீதமுள்ள கால் பாகம் சாப்பாட்டையும் வேக வைக்கவும். இறுதியாக சாதம் வெந்த பதம் வந்தவுடன் வடித்து விடலாம். கடையில் வாங்கி வடித்த, அரிசி சாதத்தை போல வெள்ளை நிறமாகவும் உதிரியாகவும் இருக்கும்.

சற்று சிரமமான காரியம் தான். இவ்வாறு சமைப்பதற்கு சிறிதளவும் பொறுமையும் நிதானமும் மிக முக்கியமாக தேவைப் படுகிறது. இந்த முறையில் ரேஷன் அரிசியை கழுவி, இப்படி ஒரே ஒரு நாள் சாதம் வைத்து சோதனை செய்து பாருங்கள். உங்களுக்கே புரியும்.

விலை உயர்ந்த அரிசியை வாங்க முடியாதவர்களுக்கும், ரேஷன் அரிசியின் வாசனையால் அவதிப்படுபவர்களுக்கும் இது ஒரு நிரந்தர சமையல் தீர்வைத் தரும்.