இதய ஆரோக்கியம் தரும் தாமரை: இதழ் முதல் விதை வரை 5 அருமையான ஆரோக்கிய ரெசிபிகள்!

மன அழுத்தம் போக்கி இதயத்தை பாதுகாக்கும் தாமரையின் இதழ், தண்டு, விதைகளில் ஆரோக்கியமான ரெசிபிகள்.
தாமரை ரெசிபிகள்
தாமரை ரெசிபிகள்Gemini image
மகாலட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

தாமரைப் பூவை சூடிக்கொள்ளவும், கடவுளுக்கு படைக்கவும் உபயோகித்து இருப்போம். ஆனால் அதன் இதழ், விதை, தண்டு என அனைத்திலும் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதை அறிவோமா? இதயத்திற்கு இதமளிக்கும் மற்றும் மன அழுத்தத்தை போக்கும் தாமரை பலவிதங்களில் பயன்படுகிறது.

மக்னா எனப்படும் இதன் இலைகள் கொண்டு செய்யப்படும் ரெசிபிகள் வட இந்தியாவில் பிரபலமாக உள்ளது. தாமரை விதைகள், தண்டுகள் சூப்பர் மார்க்கெட்களில் எளிதாக கிடைக்கும்.

இதில் செய்யக்கூடிய சில ரெசிபிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. வெண்தாமரை‌பொடி

தேவையானவை:

வெள்ளை தாமரை இதழ்கள்- 3

மிளகு,சீரகம்-தலா- 1/4 டீஸ்பூன்

கண்டந்திப்பிலி- 1/2 டீஸ்பூன்

சுக்குத் தூள் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

கருப்பு உளுந்து- 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தாமரை இதழ்களை சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் கறுப்பு உளுந்து, கறிவேப்பிலை, தாமரை இதழ்களை‌ தனித்தனியாக வறுத்து, வெறும் வாணலியில் கண்டந்திப்பிலி, மிளகு, சீரகம், சேர்த்து சூடாக்கவும். இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து பின் பொடிக்கவும். உப்பு, சுக்குத் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து ஜாரில் மூடி போட்டு வைக்கவும்.

இதை சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம், மோரில் கலந்து குடிக்கலாம். வெண் தாமரையானது ரத்த ஓட்டத்தை சீராக்கும். மன அழுத்தத்தை போக்கும்.

2. தாமரைத் தண்டு கிரேவி

தேவையானவை:

சிறிதாக நறுக்கிய தாமரைத் தண்டு - 1

கெட்டித் தயிர்- 2 கப்

சுக்குத் தூள், சோம்புத் தூள், வெள்ளை மிளகுத்தூள் -தலா 1 டீஸ்பூன்

பொடித்த முந்திரி -தலா - 2 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள், கரம் மசாலா -1 டீஸ்பூன்

வெண்ணைய்- 4 டீஸ்பூன்

பிரிஞ்சி இலை-1

ஜாதிபத்திரி- சிறிதளவு

உப்பு, கொத்தமல்லி - தேவையான அளவு

தாமரை ரெசிபிகள்
தாமரை ரெசிபிகள்Gemini image

செய்முறை:

தாமரைத் தண்டுகளை சுத்தம் செய்யவும். கடாயில் 2 ஸ்பூன் வெண்ணைய் சேர்த்து, பிரிஞ்சி இலை, ஜாதிபத்திரி, தாமரைத் துண்டுகளை போட்டு வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் சிறிதளவு உப்பு சேர்த்து மூடி மிதமான தீயில் பத்து நிமிடம் வேகவைக்கவும். தயிருடன் சுக்குத் தூள், சோம்புத் தூள், கரம் மசாலா, வெள்ளை மிளகுத்தூள் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கலவை கொதித்து வரும்போது இதை சேர்த்து இரண்டு டீஸ்பூன் வெண்ணெய், நறுக்கிய மல்லித் தழையால் அலங்கரித்து பரிமாறவும். காஷ்மீர் ஸ்பெஷலான இந்த ரெசிபியை நாண், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

3. மக்னா சாட்

தேவையானவை:

மக்னா- 2 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/4 கப்

சாட் மசாலா, துருவிய மாங்காய் -கேரட் தலா- 2 ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - தேவைக்கு.

செய்முறை:

வெறும் கடாயில் மக்னாவை வறுத்துக் கொள்ளவும். பரிமாறும்போது, வறுத்த மக்னாவுடன் வெங்காயக் கலவை சேர்த்து மேலாக ஓமப்பொடி, கொத்தமல்லி தழை தூவி ப்ரெஷ்ஷாக பரிமாறவும்.

4. லோட்டஸ் க்ளியர் சூப்

தேவையானவை:

சுத்தம் செய்த வெண்தாமரை இதழ்கள்- 2 கப்

பொடியாக நறுக்கிய தாமரைத் தண்டு- 1/4 கப்

கார்ன்ஃப்ளோர்- 1 ஸ்பூன்

வெண்ணெய் -1ஸ்பூன்

பூண்டு -6 பற்கள்

பச்சை மிளகாய்-3

எலுமிச்சை --1

உப்பு -சுவைக்கு

கொத்தமல்லி தழை -அலங்கரிக்க

செய்முறை:

கார்ன் ப்ஃளோருடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும் . வாணலியில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய தாமரைத் தண்டு, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அடுத்ததாக கார்ன்ஃப்ளோர் கலவையை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கி விடவும். எலுமிச்சை சாறு பிழிந்து மல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

கல்லீரல், இதய செயல்பாட்டை மேம்படுத்த வெண்தாமரை உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
கோடைகால சூட்டைத் தணிக்கும் 6 வகை மூலிகை மோர்கள்!
தாமரை ரெசிபிகள்

5. தாமரை இலை புலாவ்

தேவையானவை:

தாமரை இலை -1-2

பாசுமதி அரிசி - 1 கப்

தக்காளி சாஸ்- 2 ஸ்பூன்

முந்திரி பருப்பு -10

வெங்காயம் -1கப்

பச்சை, சிகப்பு குடைமிளகாய் -1-2

சோயா சாஸ், சில்லி சாஸ்- தலா- 2 டீஸ்பூன்

தேங்காய் பால் -2 கப்

நெய்-4 டீஸ்பூன்

கிராம்பு, ஏலக்காய் -2 தலா

சோம்பு-1/2 டீஸ்பூன்

பூண்டு -1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயத்தாள்-தேவைக்கு.

செய்முறை:

தாமரை இலையை சுத்தம் செய்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி வைக்கவும். ‌கடாயில் நெய் ஊற்றி முந்திரியை சிவக்க வறுத்தெடுக்கவும். கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, நறுக்கிய குடை மிளகாய் வகைகள், உப்பு , ஊறவைத்த பாசுமதி அரிசி, தேங்காய் பால், சாஸ் வகைகள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை அளவை உயர்த்தாத 5 ஆரோக்கிய கோதுமை ரவை ரெசிபிகள்!
தாமரை ரெசிபிகள்

முக்கால் பாகம் வெந்ததும் அடுப்பை அணைத்து நெய் தடவிய இலையில் இதை சேர்த்து ஆவியில் ஏழு,எட்டு நிமிடம் வேகவைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி இலையுடனேயே பரிமாற சுவையாக இருக்கும்.

தாய்லாந்து ஸ்பெஷலான இந்த ரெசிபியை அடிக்கடி செய்து சாப்பிட ஆரோக்கியம் மேம்படும்.

தாமரையின் இதழ், விதை மற்றும் தண்டுகளில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்துகொள்வதோடு, அன்றாட உணவில் அதை சுவையாக சேர்த்துக்கொள்ளும் 5 புதுமையான தாமரை ரெசிபிகள் வாசகர்கள் கற்றுக்கொள்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com