அசத்தல் காம்போ: இட்லி, தோசைக்கு ஏத்த 2 சட்டுப்புட்டு சட்னிகள்!

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான குடைமிளகாய் சட்னி மற்றும் வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
capsicum chutney, banana stem chutney
capsicum chutney, banana stem chutney
Updated on

குடைமிளகாய், வாழைத்தண்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

குடைமிளகாய் சட்னி (capsicum chutney) :

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் - 1

வேர்க்கடலை - 2 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

ப.மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப)

இஞ்சி - சிறிய துண்டு

புளி - கோலிகுண்டு அளவு

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

தாளிக்க :

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, வேர்க்கடலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்த குடைமிளகாய், ப.மிளகாய் போட்டு சிறிது வதங்கிய பின்னர் இஞ்சி, புளி, தேங்காய் துருவல், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதங்கி ஆறவைக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான ஜவ்வரிசி வடை… காரசாரமான பூண்டு சட்னி!
capsicum chutney, banana stem chutney

குடைமிளகாய் நன்றாக வதங்க வேண்டும் என்ற அவசியமில்லை. பாதியளவு வதங்கினாலே போதுமானது.

வதங்கிய பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்சிஜாரில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

இப்போது சூப்பரான குடைமிளகாய் சட்னி ரெடி.

இட்லி, மொறு மொறு தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

வாழைத்தண்டு சட்னி :

எப்போது வாழைத்தண்டை வைத்து கூட்டு, பொரியல், குழம்பு செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா. வாங்க சூப்பரான வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

இஞ்சி - 2 துண்டு

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி

காய்ந்த மிளகாய் - 6 ( காரத்திற்கு ஏற்ப)

புளி - நெல்லிக்காய் அளவு

தேங்காய் துருவல் - 2 பந்தை

கொத்தமல்லி - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிதளவு

கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

கொத்தமல்லி, கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

இஞ்சி, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

பொடியாக நறுக்கி வாழைத்தண்டை மோரில் போட்டு வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து வேர்க்கடலை, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து தோல் நீக்கிய இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, தேங்காய் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, வாழைத்தண்டை போட்டு நன்றாக, பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆறவைக்கவும்.

நன்றாக ஆறியதும் மிக்சிஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். இப்போது சூப்பரான வாழைத்தண்டு சட்னி ரெடி.

இதையும் படியுங்கள்:
சுவையான கோவைக்காய் ரெசிபிகள்: சட்னி முதல் ஃபிரை வரை!
capsicum chutney, banana stem chutney

இதை சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

ஒருமுறை வீட்டில் செஞ்சி பாருங்க. அப்புறம் விட மாட்டீங்க...

logo
Kalki Online
kalkionline.com