

கேரட் கீர்
தேவையான பொருட்கள்:
கேரட் - 3
முந்திரி - 6
பால் -ஒரு டம்ளர்
சர்க்கரை நாலு ஸ்பூன்.
செய்முறை:
கேரட்டை வட்ட வட்டமாக நறுக்கி அதனுடன் முந்திரி சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். ஆறியவுடன் அதனுடன் காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும். கேரட் கீர் ரெடி. இதை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். சம்மருக்கு சத்தான கீர் ரெடி
கேரட் பர்பி
தேவையான பொருட்கள்:
கேரட் துருவல் - 1கப்
சர்க்கரை - 1/4கப்
காய்ச்சியபால் – 3 ஸ்பூன்
பாதாம், முந்திரி - 10
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
நெய் - 1/4கப்
மில்க்மெய்ட் - 1/4 கப்
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி துருவிய கேரட்டை நன்கு வதக்கவும். அதில் பால் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
வெந்த பின் அதனுடன் சர்க்கரை, மில்க் மெய்டு ஏலத்தூள் வறுத்த முந்திரி பாதாம் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி தட்டில் கொட்டி வில்லைகளாக போடவும். சுவையான கேரட் பர்பி ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
கேரட் சாதம்
கேரட் துருவல் - 1 கப்.
துருவிய தேங்காய் - 1/4 கப்.
உதிரி சாதம் - 1 கப்
வெங்காயம் -1
முந்திரி அல்லது வேர்க்கடலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
பட்டை - 1 கிராம்பு - 2 , ஏலக்காய் - 1
சாம்பார் பொடி - 1/2 ஸ்பூன்.
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் வதக்கி, முந்திரி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் சாம்பார் பொடி சேர்த்து காரட் துருவல், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஒரு ஸ்பூன் சால்ட் சேர்த்து வதக்கவும். மிதமான தீயில் வதங்கிய பின் உதிரானசாதத்தை கலந்து பின் அதில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கலந்து எலுமிச்சை சாறு கலந்து கிளறி இறக்கவும். சத்தான ருசியான கேரட் சாதம் ரெடி. இதற்கு தயிர்வெங்காய சாலட் தொட்டு சாப்பிடலாம்.
கேரட் வடை
தேவையான பொருட்கள்:
கேரட் - 3
பொட்டுக்கடலை - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1
கருவேப்பிலை ,மல்லி இலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் சிறிது உப்பு –தேவைக்கு
எண்ணெய் - பொறிக்கிற அளவு
செய்முறை:
தோல் சீவி கேரட்டை துருவி வைக்கவும். பொட்டுக்கடலை மிக்ஸியில் நைசாக அடிக்கவும். நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை மல்லி இலை துருவிய கேரட்டுடன், பெருங்காயம் உப்பு பொட்டுக்கடலை சேர்த்து பிசையவும்.
பிசைந்த மாவை வட்டமான வடைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும். சுவையான சத்தான கேரட் பொட்டுக்கடலை வடை ரெடி. இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.