

காக்டெய்ல் பார்ட்டி என்பது பல்வேறு வகையான மதுவை கலந்து கொடுப்பதுதான் காக்டெய்ல் பார்ட்டி. இங்கே காக்டெய்ல் என்பது மது அல்ல. சுமார் 7 வகையான பஜ்ஜிகளை சேர்த்துக் கொடுப்பதுதான் காக்டெய்ல் பஜ்ஜி பார்ட்டி.
தேவையானவை:
கடலை மாவு 1 கிலோ, மிளகாய் தூள் சிறிது, வாழைக்காய் 3, உருளைக்கிழங்கு 6, மிளகாய் பஜ்ஜி 8, வெங்காயம் 4, அப்பளம் பெரிது 12,
ரொட்டி 1 லோஃப் (ஒரே துண்டாக சுடப்படும் ரொட்டி), கத்திரிக்காய் 6, சுத்திகரிக்கப்பட்ட நல்லெண்ணெய் 1 அல்லது 2 லிட்டர்.
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கிலோ கடலைமாவை தண்ணீர்விட்டு மாவைப் பிசையுங்கள். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மாவை ரெடி செய்துவிடலாம். கேஸில் வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி சூடு பண்ணுங்கள். இப்போது மேலே சொன்ன 7 பொருட்களையும் பஜ்ஜி கட்டர் கொண்டு எல்லா வற்றையும் சீவுங்கள். உங்களுக்கு வாழை சீவி பழக்கம் இருக்கும்.
இதேபோல் பெரிதாக வெங்காயம், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, சீவி மொத்தம் 10 அல்லது 11 துண்டுகள் ரெடி செய்துவிடுங்கள். பிறகு பப்படத்தை இரண்டாக உடைத்து பக்கத்தில் வையுங்கள். ரொட்டியை இரண்டு முக்கோணமாக அறுத்துவிடுங்கள். ஒரு மிளகாய் பஜ்ஜியை இரண்டு துண்டுகளாக நறுக்கிவிடுங்கள். பப்படத்தை இரண்டாக ஒடித்து, இரண்டையும் ஒன்றாகச்சேர்த்து மாவில் முக்கி சுடுங்கள்.
இப்போது எல்லாம் ரெடி.
கேஸை பெரிது பண்ணி துண்டுகளை (7 வகையானது) கடலைமாவில் பொட்டு முழுதும் முங்கியதும் ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வேகவையுங்கள். பஜ்ஜி கலர் வந்ததும் எடுத்து ஒரு வடிகட்டி கரண்டியால் எண்ணெயை எடுத்து பஜ்ஜியை மட்டுமே ஒரு பெரிய தூக்கில் போடுங்கள். இந்த மாதிரி 7 வகையான பஜ்ஜிகளையும் சுட்டு பாத்திரத்தில் போடுங்கள். பஜ்ஜிகள் ரெடி.
அப்பளம், ரொட்டி பஜ்ஜி செய்ய நல்ல கவனம் தேவை. 10 நிமிடத்தில் தேங்காய் சட்னி ரெடி ஆனவுடன். பஜ்ஜிக்குத் தொட்டுக்க சட்னி பரிமாறுங்கள். காக்டெய்ல் பஜ்ஜி பார்ட்டி ஆரம்பம் ஆகிவிட்டது.
பி. கு.: மாவும் எண்ணெயும் மிச்சம் இருந்தால் கவலைவேண்டாம்.
வடிகட்டி கரண்டியைக் கொதிக்கும் எண்ணெயில் மேல் வைத்து ஒரு கரண்டியால் மாவை வடிகட்டி கரண்டியில் ஊற்றி கரண்டியால் தடவி சிறு சிறு துண்டுகளாக வரும். அது வெந்நதும் வடிகட்டி கரண்டியில் போட்டு வேறு ஒரு பாத்திரத்தில் சேமியுங்கள்.
நீங்கள் செய்தது காரப்பூந்திதான். எண்ணெய் மற்றும் மாவு தீரும் வரை பூந்தி செய்துவிடுங்கள். பஜ்ஜி + தேங்காய் சட்னி + காரப்பூந்தியைப் போட்டு பரிமாறுங்கள். எல்லோரும் இந்த காக்டெய்ல் பஜ்ஜி பார்ட்டியை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.