ஆரோக்கியமான உணவும்.. மிச்சமாகும் சிலிண்டரும்... 'ஒன் பாட்' சமையலின் ரகசியங்கள்!

One pot cooking
One pot cookingImg credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

னி இப்படி சமையல் பண்ணி பாருங்க. சிலிண்டர் கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை. சமையல் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதும் சிலிண்டரை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும்.

1) ஒன் பாட் குக்கிங் (One-Pot Cooking) என்பது குறைந்த நேரத்திலும், சிலிண்டர் செலவை மிச்சபடுத்தியும், ஒரே பாத்திரத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சமைக்கலாம்.

2) குறைவான பாத்திரங்களே தேவைப்படும். எனவே சமையல் பாத்திரங்களைக் கழுவும் நேரமும் மிச்சமாகும். பிஸியான நேரங்களிலும், லஞ்ச் பாக்ஸ் மற்றும் பேச்சுலர்கள் சமைக்க ஏற்றது.

3) ஒரே நேரத்தில் அனைத்தும் சேர்த்து சமைக்கப் படுவதால் சமையல் நேரம் மற்றும் எரிவாயு குறைகிறது. அத்துடன் பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து சமைக்கப்படுவதால் சுவை மற்றும் நறுமணம் உணவில் நன்றாகக் கலந்து ருசி கூடுகிறது.

4) குக்கரில் அரிசி, காய்கறிகள், மசாலா சேர்த்து வெஜிடபிள் புலாவ் அல்லது பிரியாணி செய்யலாம். அரிசி, பருப்பு, காய்கள் அனைத்தும் சேர்த்து கிச்சடி அல்லது பிஸிபேளாபாத் செய்து அசத்தலாம்.

5) பெரும்பாலான ஒன் பாட் உணவுகள் குக்கரில் சமைக்கப்படுவதால் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தண்ணீரில் வெளியேறாமல் உணவிலேயே தங்கி ஆரோக்கியமான உணவாகிறது.

6) குழந்தைகள் விரும்பும் கிரீமி பாஸ்தா, மேக்ரோனி, சூப் போன்றவற்றை காய்கறிகள் சேர்த்து ஒன் பாட் சமையலாக செய்து ருசிக்கலாம்.

7) முக்கியமாக சமையல் பழகும் நபர்களுக்கு இது மிகவும் எளிதானது. ஏனெனில், பல அடுப்புகளை ஒரே நேரத்தில் கவனிக்கும் பொறுப்போ மன அழுத்தமோ இதில் இல்லை.

இதையும் படியுங்கள்:
கோடைக்கு ஏற்ற 'குளுகுளு' பழைய சோறு... அத இப்படி சாப்பிடணும் பாஸ்!
One pot cooking

8) சமையலறை மேடை மற்றும் அடுப்புப் பகுதி அதிகம் அழுக்காகாது. சிறிய சமையலறை கொண்டவர்களுக்கு இந்த முறை மிகவும் வசதியானது.

9) ஒரு அடுப்பு அல்லது பாத்திரத்தை மட்டுமே பயன் படுத்துவதால் எரிவாயு அல்லது மின்சாரம் சேமிக்கப் படுகிறது. தற்போதுள்ள சூழலில் நேரத்தை மிச்சப்படுத்தி சுவையான உணவை சமைக்க ஒன் பாட் முறை மிகவும் ஏற்றது.

10) முக்கியமாக மணிக்கணக்கில் அடுப்படியில் நிற்க வேண்டாம். வழக்கமான சமையல் நேரத்தை வெகுவாக குறைத்து விரைவாகவும் சுவையாகவும் உணவு தயாராகும்.

11) ஒன் பாட் சமையலில் சரியான அளவு தண்ணீர் அல்லது தேங்காய் பால் சேர்ப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில் குழைந்துவிடும்.

12) அதேபோல் உருளைக்கிழங்கு, காரட் போன்ற கடினமான காய்கறிகளை அடியிலும், கீரை, பட்டாணி போன்ற மென்மையானவற்றை மேலேயும் போட்டு சமைத்தால் காய்கறிகள் குழைந்து போகாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு இதமான விருந்து: பால் சேமியா ஃபலூடா & மாங்காய் ஐஸ்கிரீம்!
One pot cooking

13) சமைத்து முடித்ததும் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலைகள் அல்லது சிறிது வெண்ணெய் சேர்ப்பது உணவின் மணத்தையும் சுவையையும் கூட்டும்.

14) வீட்டில் சமைக்கும் உணவாக இருப்பதால் செயற்கை சுவையூட்டிகள், அதிகப்படியான சோடியம் மற்றும் கொழுப்பு இல்லாமல் சமைக்க முடிவதால், உடல் எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

logo
Kalki Online
kalkionline.com