எப்போ பாரு அதே குருமாவா? ஒருமுறை இந்த காரசாரமான 'வெஜ் கோலாபுரி' செஞ்சு அசத்துங்க!

சப்பாத்திக்கு பெஸ்ட் சைட் டிஷ்ஷான காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் வெஜ் கோலாபுரி வீட்டில் செய்வது எப்படி? இந்த சீக்ரெட் மகாராஷ்டிரா ரெசிபியை இப்போதே படியுங்கள்.
veg kolhapuri recipe வெஜ் கோலாபுரி
veg kolhapuri recipe வெஜ் கோலாபுரி
Updated on

சப்பாத்தி, நாண் அல்லது பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள வழக்கமான குருமா, பன்னீர் கிரேவிகளை சாப்பிட்டு சலித்துப்போனவர்களுக்கு ஒரு அட்டகாசமான சாய்ஸ் என்றால் அது மகாராஷ்டிராவின் ஸ்பெஷல் உணவான வெஜ் கோலாபுரி. காரசாரமான சுவைக்கும், கமகமக்கும் வறுத்த மசாலா வாசனைக்கும் பெயர் பெற்ற இந்த ரெசிபியை, வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மிக சுலபமாக எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி) - 2 கப்

  • பெரிய வெங்காயம் - 2 

  • தக்காளி - 2

  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

  • கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

veg kolhapuri recipe வெஜ் கோலாபுரி
veg kolhapuri recipe வெஜ் கோலாபுரி

கோலாபுரி மசாலா அரைக்க:

  • துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

  • வெள்ளை எள், கசகசா, சீரகம், சோம்பு - தலா 1 டீஸ்பூன்

  • மல்லி - 1.5 டேபிள் ஸ்பூன்

  • காஷ்மீரி காய்ந்த மிளகாய் - 5

  • பட்டை - 1 சிறிய துண்டு

  • கிராம்பு - 3, ஏலக்காய் - 2, பிரியாணி இலை - 1

செய்முறை! 

இந்த ரெசிபியின் ஹீரோவே நாம் அரைக்கப் போகும் கோலாபுரி மசாலா தான். முதலில் ஒரு வெறும் கடாயில் வறுக்கக் கொடுத்துள்ள மசாலாப் பொருட்கள் அனைத்தையும் மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைஸான பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக, நாம் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து முக்கால் பதத்திற்கு வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் குழையாமல் இருப்பது முக்கியம்.

இதையும் படியுங்கள்:
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பனீர் ராரா... இந்த சீக்ரெட் தெரிஞ்சா இனி கடையில வாங்க மாட்டீங்க!
veg kolhapuri recipe வெஜ் கோலாபுரி

இப்போது ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்குங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் தக்காளி, காஷ்மீரி மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாகத் தொக்கு பதத்திற்கு வதக்கிக் கொள்ளவும்.

தக்காளி மசாலா சுருண்டு வந்ததும், நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள 'கோலாபுரி மசாலா' விழுதை அதில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்குங்கள். மசாலா வாசம் கமகமக்கும்போது, வேகவைத்து வைத்துள்ள காய்கறிகளை தண்ணீருடன் இதில் சேர்த்து கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
2 in 1 Recipe: கமகமக்கும் கொத்தமல்லி மாங்காய் சாதமும், சுவையான தாகி பிரிஞ்சாலும்!
veg kolhapuri recipe வெஜ் கோலாபுரி

கிரேவிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, மிதமான தீயில் மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கிரேவி தடிமனாகி, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரும்போது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான்! உங்கள் வீடே மணக்கும் காரசாரமான அசல் மகாராஷ்டிரா ஸ்பெஷல் வெஜ் கோலாபுரி தயார்.

logo
Kalki Online
kalkionline.com