ஈஸ்ட், அவண் தேவையில்லை… தோசைக்கல்லில் பஞ்சு போன்ற ஆலு குல்ச்சா ரெடி!

ஈஸ்ட் மற்றும் தந்தூர் அடுப்பு இல்லாமல், வீங்கிலேயே சாதாரண தோசைக்கல்லில் பஞ்சு போன்ற மென்மையான ஆலு குல்ச்சா சுலபமாக எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆலு குல்ச்சா tawa kulcha recipe
ஆலு குல்ச்சா tawa kulcha recipeChatGPT Image
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

பஞ்சாபி பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுவையான ஆலு குல்ச்சா, பொதுவாகத் தந்தூர் அடுப்பு மற்றும் ஈஸ்ட்  பயன்படுத்திச் செய்யப்படுகிறது. ஆனால், இவை இரண்டுமே இல்லாமல், நமது சமையலறையில் உள்ள சாதாரண தோசைக்கல்லைப் பயன்படுத்தியே, கடையின் சுவையை விட மென்மையாக நாம் வீட்டிலேயே தயார் செய்ய முடியும்.

ஈஸ்ட் சேர்க்காமல் தயிர், பேக்கிங் சோடா கொண்டு மாவை எப்படிப் பஞ்சு போலப் பிசைவது, உள்ளே வைக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை எப்படி ருசியாகத் தயார் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • மைதா அல்லது கோதுமை மாவு - 2 கப்

  • கெட்டித் தயிர் - 1/2 கப்

  • பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்

  • பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்

  • சர்க்கரை - 1 ஸ்பூன்

  • வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 

  • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

  • பச்சை மிளகாய் - 2 

  • இஞ்சி விழுது - 1 ஸ்பூன்

  • கரம் மசாலா, மிளகாய்த் தூள், சாட் மசாலா - தலா 1/2 ஸ்பூன்

  • நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி

  • சமையல் எண்ணெய், வெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா அல்லது கோதுமை மாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சர்க்கரை, சிறிது உப்பு, மற்றும் இரண்டு மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். 

பின்னர் கெட்டித் தயிர், தேவையான அளவு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, மாவை மிகவும் மென்மையாகப் பிசைய வேண்டும். பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, குறைந்தது ஒரு மணி நேரம் ஈரத்துணியால் மூடி ஊறவைக்க வேண்டும்.

ஆலு குல்ச்சா tawa kulcha recipe
ஆலு குல்ச்சா tawa kulcha recipeChatGPT Image

மாவு ஊறும் நேரத்தில், உள்ளே வைப்பதற்கான பூரணத்தைத் தயார் செய்யலாம். கட்டியில்லாமல் மசித்த உருளைக்கிழங்குடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கரம் மசாலா, மிளகாய்த் தூள், சாட் மசாலா, கொத்தமல்லி இலைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
ஆலு குல்ச்சா tawa kulcha recipe

ஊறிய மாவில் இருந்து சிறிய உருண்டையை எடுத்து, லேசாகத் தட்டி, அதன் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, மாவை நாலாபுறமும் மூடிச் சீல் செய்ய வேண்டும். இதனை மிகவும் மென்மையாக, உள்ளே இருக்கும் மசாலா வெளியே வராதபடி தட்டையாகத் தேய்த்துக்கொள்ளுங்கள். 

தேய்த்த மாவின் ஒரு புறத்தில் கொத்தமல்லி இலைகளைத் தூவி, மறுபுறத்தில் தாராளமாகத் தண்ணீரைத் தடவ வேண்டும். அடுப்பில் ஒரு இரும்புத் தோசைக்கல்லை வைத்து மிதமான தீயில் சூடாக்க வேண்டும்.

தண்ணீர் தடவிய பகுதியை நேரடியாகக் கல்லில் படும்படி வைக்க வேண்டும். மாவு உப்பி, சிறிய குமிழிகள் வரத் தொடங்கியவுடன், தோசைக்கல்லை அப்படியே கைப்பிடியோடு பிடித்துத் தலைகீழாகத் திருப்பி, நேரடியாக நெருப்பில் படும்படி காட்ட வேண்டும். இவ்வாறு செய்யும்போது அசல் தந்தூர் அடுப்பில் வெந்தது போலவே மேற்புறம் அழகாகச் சிவந்து வரும். 

இதையும் படியுங்கள்:
கத்தரிக்காய் பிடிக்காதா? இந்த சீக்ரெட் தம் பிரியாணி செஞ்சா தட்டு உடனே காலியாகும்!
ஆலு குல்ச்சா tawa kulcha recipe

கரண்டியால் எடுத்து, தட்டில் வைத்து அதன் மேல் தாராளமாக வெண்ணெய் தடவிப் பரிமாறுங்கள். ஈஸ்ட் மற்றும் தந்தூர் இல்லாமல் மிகவும் ஆரோக்கியமாகத் தயார் செய்யப்பட்ட இந்த ஆலு குல்ச்சா ரெசிபியை உங்கள் வீட்டிலும் செய்து, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.