என்ன செஞ்சாலும் சப்பாத்தி Soft-ஆ வரலையா?... ரகசியம் இதோ! 

Soft Chapathi
Soft Chapathi
Updated on

சூடாக அவ்வப்போது சப்பாத்தியை வெண்ணெய் அல்லது பருப்பு சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுவது யாருக்குதான் பிடிக்காது? ஆனால், எல்லா சப்பாத்திகளும் மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதில்லை. சில சமயங்களில் சப்பாத்தி கடினமாகவோ அல்லது ரப்பர் போலவோ இருக்கும். இந்த பிரச்சனையை எப்படித் தீர்க்கலாம் என்பது பற்றிதான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

சப்பாத்தி மாவு பிசைதல்:

மிருதுவான சப்பாத்தி செய்வது ஒரு கலை. இதற்கு சில குறிப்பிட்ட நுணுக்கங்கள் தேவை. அதற்கு முதலில் நல்ல தரமான கோதுமை மாவு முக்கியம். கோதுமை மாவுதான் மிருதுவான சப்பாத்திக்கான அடிப்படை. முழுகோதுமை மாவு பயன்படுத்தினால், சப்பாத்திக்கு கூடுதல் நார்ச்சத்து கிடைக்கும்.

அடுத்ததாக மாவுடன் சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு மிக முக்கியம். மாவு பிசையத் தேவையான அளவு தண்ணீரை மட்டும் சேர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் சேர்த்தால், மாவு தளர்வாக இருக்கும். குறைவாக சேர்த்தால், மாவு கெட்டியாக இருக்கும்.

சப்பாத்தி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்தால், சுவை அதிகரிக்கும். மேலும், மாவுடன் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்தால், சப்பாத்தி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

இறுதியாக, மாவை நன்றாகப் பிசைய வேண்டும். பிசையும் போது, மாவில் எண்ணெய் நன்கு கலக்க வேண்டும். மாவு பந்து போல் உருண்டையாகி, கையில் ஒட்டாமல் வந்தால், அது சரியான பதத்திற்கு வந்துவிட்டது என அர்த்தம்.

சப்பாத்தி தயாரித்தல்: 

  • பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, தட்டையாக அழுத்த வேண்டும்.

  • தவாவை நன்றாக சூடாக்க வேண்டும்.

  • தவாவில் சப்பாத்தியை வைத்து, இருபுறமும் நன்றாக வேகவைக்க வேண்டும். சப்பாத்தியில் சிறு சிறு குமிழ்கள் வந்தால் அது வெந்துவிட்டது என அர்த்தம்.

  • இறுதியாக, வேக வைத்த சப்பாத்தியில் வெண்ணெய் தடவுங்கள். அது சப்பாத்தியும் சுவையை அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
அரிசி மாவு சப்பாத்தி, சுவையான பன்னீர் மஞ்சூரியன் செய்யலாம் வாங்க!
Soft Chapathi

மிருதுவான சப்பாத்திக்கு கூடுதல் குறிப்புகள்: 

மாவு பிசையுவதற்கு சூடான நீரை பயன்படுத்தலாம். இது சப்பாத்தியை மிருதுவாக மாற்றும். மாவுடன் சிறிதளவு தயிர் சேர்த்தால், சப்பாத்தி மிருதுவாகவும், புளிப்பு சுவையுடனும் இருக்கும். தயிர் இல்லை என்றால் சிறிதளவு பால்கூட சேர்க்கலாம். 

மிருதுவான சப்பாத்தி செய்வது அவ்வளவு கடினமான காரியமல்ல. மேற்கண்ட குறிப்புகளை பின்பற்றி, தொடர்ச்சியாக முயற்சித்தால் நீங்களும் வீட்டில் மிருதுவான சப்பாத்தியை தயாரிக்கலாம். 

logo
Kalki Online
kalkionline.com