
கோதுமை பிளம் கேக்:
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
நாட்டு சர்க்கரை - 1 கப்
உருக்கிய வெண்ணெய் - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பேரீச்சம்பழம் விதை நீக்கியது - 1/4 கப்
திராட்சை, டூட்டி ப்ரூட்டி, முந்திரி, வால் நட்ஸ் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் பாத்திரத்தில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து சலிக்கவும்.
* உருக்கிய வெண்ணெயில் நாட்டுச் சர்க்கைரை கலந்து கேரமல் செய்யவும்.
* கேரமல் ப்ரூட் கலவை செய்து வைக்கவும்.
* வெண்ணெய், சர்க்கரை, தேன் சேர்த்து கலந்து கிரீமியாக 'பீட்' செய்யவும். அடுத்து தயிர் எசன்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
*அதில் மாவுக் கலவையை சேர்த்து கலக்கவும்.
* பின், கேரமல் ப்ரூட் கலவையை ஊற்றி நன்கு கலக்கவும்.
* மோல்டில் பட்டர் தடவி, மாவு தூவி, கேக் கலவையை ஊற்றி, ஓவனில் 180 டிகிரியில் 10 நிமிடங்கள் ப்ரி ஹிட் செய்து 55 நிமிடங்கள் செய்து எடுத்தால் பஞ்சு போன்ற கோதுமை பிளம் கேக் ரெடி.
செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் :
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
கோதுமை மாவு - முக்கால் கப்
கோகோ பவுடர் - கால் டீஸ்பூன்
செவ்வாழைப்பழங்கள் - 4
சர்க்கரை - 3/4 கப்
வெண்ணெய் - கால் கப்
பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
நட்ஸ் வகைகள் - 1/4 கப்
சாக்கோ சிப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* ஒரு பவுலில் மைதா, கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும்.
* இன்னொரு பவுலில் செவ்வாழைப்பழத்தை மசிக்கவும். அதனுடன் நாட்டு சர்க்கரை, உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* பின் சலித்த மாவு கலவையை சேர்த்து, பால் சிறிது சேர்த்து நன்கு கலக்கவும்.
* பின் மாவில் வெண்ணிலா எசன்ஸ், நட்ஸ் வகைகளை கலந்து வைக்கவும்.
* பின் பேக் செய்ய, மோல்டில் பட்டர் தடவி மாவு தூவி தயார் செய்து கேக் கலவையை ஊற்றி, கேக் மேல் சாக்கோ சிப்ஸ் தூவி, மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரியில் 10 ப்ரீஹீட் செய்து 30 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் ரெடி.
* பஞ்சு மாதிரி பழ கேக் ருசியாக இருக்கும். டிரை செய்து பாருங்கள்.