நாலு பிரட் இருந்தா போதுமே...சத்தான சுவையான பிரட் ஊத்தப்பம் ரெடி!

நாலு பிரட் இருந்தா போதுமே...சத்தான சுவையான  பிரட் ஊத்தப்பம் ரெடி!
Published on

பிரட் ஊத்தப்பம் செய்ய கேரட்டிற்கு பதில் பீட்ரூட், பீன்ஸ், இப்படி உங்களுக்கு தேவையான காய்கறிகள் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளின் உடலுக்கும் நல்லது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்து கொடுத்துப் பாருங்கள். நீங்களும் உங்க வீட்டில் இந்த பிரட் ஊத்தப்பத்தை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. மிகவும் எளிதான சத்தான சுவையான டிபன் வகை .

பிரட் ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள்:

பிரட் – 4 துண்டுகள்,

வெங்காயம் -1,

தக்காளி -1,

பச்சை மிளகாய் – 1,

கேரட் – 1,

மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்,

கோதுமை மாவு – 2 ஸ்பூன்,

ரவை – 2 ஸ்பூன்,

தயிர் – 2 ஸ்பூன்,

உப்பு – 1/4 டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

இந்த பிரட் ஊத்தப்பம் செய்வதற்கு முதலில் 4 பிரட் துண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொஞ்சம்கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.

இத்துடன் கோதுமை மாவு, ரவை, (இதற்கு வறுத்த ரவை, வறுக்காத ரவை, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) அத்துடன் மிளகாய் தூள், வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி இந்த பிரட் பவுடரில் கலந்து அதிகம் புளிக்காத தயிர், உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கலந்து விடுங்கள். இவையெல்லாம் கலந்த பிறகு ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். இது மாவு தோசை மாவு பதத்திற்கு இருந்தால் போதும். பிரட் ஊத்தப்பம் செய்வதற்கு மாவு தயாராகி விட்டது.

இப்போது அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் ஊத்தப்பம் மாவை நன்றாக அடித்து எடுத்து தோசை போல ஊற்ற வேண்டியது தான். இது ஊத்தப்பம்என்பதால் சற்று தடிமனாகவே ஊற்றிக் கொள்ளுங்கள். அப்போது சாப்பிடும் போது பஞ்சு போல சாப்ட்டாக இருக்கும்.

தோசை கல்லில் ஊற்றிய பிறகு எண்ணெய் விட்டு இரண்டு புறமும் திருப்பி போட்டு விட்டு எடுத்து விடுங்கள். சுவையான பிரட் ஊத்தப்பம் சுலபத்தில் ரெடி.

இதற்கு தேங்காய் சட்னி,கொத்தமல்லி சட்னி , கார சட்னியும் நல்ல காம்பினேஷன். பத்தே நிமிடத்தில் சைடு டிஷ் இல்லாமல் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கூடிய டிபன் தயாராகி விட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com