முட்டைகோஸ் கட்லெட் இப்படி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

healthy recipes in tamil
Cabbage cutlet
Published on

முட்டைகோஸ் கறி

ஒரு சத்தானதும் சுவையானதும் ஆன துணை உணவு. இது சாதம், சப்பாத்தி, இடியாப்பம் போன்றவற்றுடன் அருமையாக சுவைக்கலாம்.   அதனை  எளிய  முறையில்  செய்ய

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் – 2 கப் (நறுக்கியது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

பச்சைமிளகாய் – 1 (நறுக்கவும்)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்

தன்னியாத்தூள் – ½ ஸ்பூன்

கிராம்பு – 2

இலவங்கப்பட்டை – 1 சிறிய துண்டு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை – சிறிதளவு (அலங்கரிக்க)

செய்முறை:  

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு, இலவங்கப்பட்டை போட்டு வதக்கி வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை மறையும் வரை வதக்கி பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தன்னியாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கி அத்துடன் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியை மூடி, குறைந்த தீயில் 10-12 நிமிடங்கள் வேகவிடவும். இடைவேளையில் கிளறி பார்த்து, கொஞ்சம் தண்ணீர் தெளிக்கலாம் (தேவையானால்). முட்டைகோஸ் நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

இக்கறி சூடான சாதம், சப்பாத்தி, ரொட்டி, இடியாப்பம், தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
சால்னா என்றால் அசைவம் மட்டுமா? சுவையான சைவ பச்சைப்பயறு சால்னா செய்வது எப்படி?
healthy recipes in tamil

முட்டைகோஸ் கட்லெட்

இது சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் சிறந்த சிற்றுண்டி வகையான மாலை நேர ஸ்நாக்ஸ், ஆகும். குழந்தைகளுக்கான டிபனாகவும் இது அருமை. இதை செய்ய

தேவையான பொருட்கள்:

முட்டைகோஸ் – 1 கப் (மெலிதாக நறுக்கியது,)

முள்ளங்கி – ¼ கப் (துருவியதாக)

உருளைக்கிழங்கு – 2 ( வேக வைத்து மசித்தது)

வெங்காயம் – 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

மிளகாய்த்தூள் – ½ ஸ்பூன்

மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்

கறிவேப்பிலை/கொத்தமல்லி – சிறிதளவு நறுக்கியதாக

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்க தேவையானது

அரிசிமாவு அல்லது பிரட்தூள் – தேவையான அளவு

மைதா மாவு _1 ஸ்பூன் + தண்ணீர் – 3 ஸ்பூன்  (பேஸ்ட் பதமாக)

செய்முறை:  

முதலில் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கியை ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது உப்புடன் பிசைந்து, நன்கு பிழிந்து அதன் நீரை அகற்றவும். (இது கட்லெட் ஈரமாகாதிருக்க முக்கியம்). ஒரு பெரிய பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு பிழிந்த முட்டைகோஸ் மற்றும் முள்ளங்கி வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி இலை சேர்க்கவும். நன்கு கலக்கி மெதுவாக பிசைந்து கட்லெட் மேஸ் தயாரிக்கவும். தேவையான வடிவத்தில் (வட்டம் அல்லது ஓவல்) கட்லெட் உருட்டவும். ஒவ்வொரு கட்லெட்டையும்: மைதா பேஸ்டில் நன்கு தோய்த்து பிறகு பிரட்  தூள் அல்லது அரிசிமாவில் சுழற்றவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் கட்லெட்டுகளை தங்க நிறம் வரும் வரை பொரிக்கவும்.

இதையும் படியுங்கள்:
மறந்துபோன வெந்தயக்கீரை கடைசல்! கூடவே புதுமையான பூரி, பிரியாணி, பொங்கல்!
healthy recipes in tamil

சாஸ், மயோனெய்ஸ், புதினா சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

முட்டைகோஸ் கட்லெட்டில் சிறிது கிரேட்டஸ்ட் சீஸ் சேர்த்தால், குழந்தைகள் விரும்புவார்கள். ஸ்பைசி விரும்புவோர் சற்று சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com