வெந்நீர் விட்டா போதும்... ரசம் ரெடி! அடடா ! இது தெரியாம போச்சே!

Instant Rasam Mix
Instant Rasam Mix
Published on

டெய்லி லஞ்சுக்கு வகைவகையா வித்தியாசமா ருசியா குழம்பு போட்டு சாப்பிடுகிறோம். என்னதான் ருசியான குழம்பு சாப்பிட்டாலும் ,உங்க நாவு எதிர்பார்ப்பது நல்ல மணமான, சுவையான ரசத்தைத் தான். இந்த ரெடி மிக்ஸ் ரசப்பொடி உங்க கையில் இருந்தால் குழம்பு கூட கேட்க மாட்டார்கள். இந்த ரசத்தைப் போட்டே சாப்பிட்டு விடுவார்கள். இந்த ரசப் பொடியில் வெந்நீர் விட்டால் போதும் .ஒரு நிமிஷத்தில் ரசம் ரெடி ஆகிவிடும். அதை செய்யும் முறையைப் பார்ப்போம் வாங்க. 

Gas-ஐ வீணாக்காமல் எளிதாக வெந்நீர் வைக்க உடனே Kettle வாங்குங்கள்!

செய்ய தேவையான பொருட்கள்:

  • துவரம் பருப்பு- ஒரு கப் 100 கிராம் அளவுக்கு

  • மல்லிவிதை -இரண்டு கப்

  • வர மிளகாய் -இருபது

  • சீரகம் -அரை கப்

  • மிளகு- கால் கப்

  • புளி-லெமன் சைஸ்

  • பெரிய சைஸ் பூண்டு   -மூன்று

  • மஞ்சள் பொடி- ஒன்னரை டேபிள்ஸ்பூன்

  • பெருங்காயப் பொடி- ஒரு டேபிள் ஸ்பூன்

  • தூள் உப்பு   -தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

  • கடுகு -1 டீஸ்பூன்

  • சீரகம்-1 டீஸ்பூன்

  • வர மிளகாய் -ஐந்து

  • உருவிய கருவேப்பிலை - ஐந்து

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் துவரம் பருப்பை போட்டு சுடும் அளவுக்கு வறுத்து எடுக்கவும்.  அதே கடாயில் மல்லி விதையைப் போட்டு சுள்ளுன்னு சுடும் அளவுக்கு வறுத்து கொட்டவும். 

மிளகு, சீரகத்தை நன்றாக கமகம என்று வாசம் வரும்படி வறுத்துக் கொட்டவும். 

அடுத்ததாக புளியை அதில் இருக்கும் கொட்டை, நார், தூசு, ஓடு, கற்கள் போக  சுத்தம் செய்து அதை சிறு தீயில் வைத்து அதனுடன் வரமிளகாய், கைப்பிடி கருவேப்பிலையைச் சேர்த்து வறுக்க வேண்டும்.

இதில் வறுக்கும் போது கவனிக்க வேண்டியது புளியில் ஈரப்பதம்  போயிருக்க வேண்டும் .வர மிளகாய் ,கருவேப்பிலை  இரண்டும் நிறம் மாறாமல் நன்கு பக்குவமாக வறுபட்டிருக்க வேண்டும்.

அப்படி வறுத்து அதையும் மற்ற பொருட்களுடன் சேர்த்து கொட்டி ஆறவிடவும். இதனுடன் மஞ்சள் பொடி ,உப்பு, பெருங்காயப்பொடி கலந்து விடவும்.

அடுத்ததாக பூண்டு பற்களை தனித்தனியாக பிரித்து தோலோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைத்து, அதை கடாயில் நன்றாக அழுத்தம் கொடுத்து வறுத்து எடுக்கவும். அது கடாயில் அடிக்கடி அடியில் ஒட்டும்.

ஆதலால்  சிறுதீயில் வைத்து ஐந்து நிமிடம் அதன் பச்சை வாசனை போக வறுத்து நல்ல மணம் வரும்போது ஒரு தட்டில் கொட்டி தனியாக ஆறவிடவும். 

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு பொடி தவிர்த்து வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு , மிக்ஸியை பல்ஸ் மோடில் வைத்து கொரகொரப்பாக பொடிக்கவும்.

பின்னர் வறுத்து வைத்த பூண்டு பொடியையும் சேர்த்து ரசப்பொடி யுடன் நன்றாக ஸ்பூன் கொண்டு கிளறிவிட்டு இரண்டு நிமிடம் பொடித்து எடுக்கவும். இதை ஒரு அகலமான தட்டில் கொட்டி நன்றாக ஆற விடவும். 

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து  அதில் தாளிக்க கொடுத்தவற்றை கொட்டி சிறு தீயில் வைத்து தாளிக்கவும். அப்பொழுது கடுகு, சீரகம் நன்றாக பட்பட்டென்று வெடிக்கும். கடுகு வெடித்து நிறம் வெண்மையாக மாறும்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லதா? எவ்வளவு நேரம் கொதிக்க வைக்கலாம்?
Instant Rasam Mix

கருவேப்பிலை பச்சை நிறம் மாறாமல் வறுபட்டு இருக்கும். மிளகாய் கருகாமல் நல்ல கலரில் இருக்கும் போது அவற்றை வறுத்தெடுத்து ரசப்பொடியுடன் நன்றாகக் கலக்கவும். 

இவற்றை நன்றாக ஆறவிட்டு பாட்டில்களில் அடைத்து வெளியில் வைக்கவும். ஆறு மாதம் வரை இவை கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. 

இப்பொழுது மூன்று டேபிள் ஸ்பூன் ரசப்பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒன்றரை கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து ,அந்த வெந்நீரை இதில் ஊற்றி சிறிதளவு மல்லித் தழையைத் தூவி மூடி வைத்து, இரண்டு நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் ரசம் ரெடி. இப்ப பாருங்களேன் வெறும் வெந்நீரை ஊற்றியே ரசத்தை தயாரித்து விட்டோம். இதுதான் இதன் ஸ்பெஷல். 

இதற்கு தேவைப்பட்டால் இரண்டு தக்காளி பழத்தை நன்றாக பிசைந்து ,பருப்பு வேக வைத்த தண்ணீரை சேர்த்து இந்த ரசத்தோடு கலந்து பருப்பு ரசமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய சாய்ஸ் தான். 

இப்ப பாருங்க ஜீரோ பர்சன்ட் ஆயில் / எண்ணெய் இல்லாத ஒரு ரசத்தை வெந்நீரை ஊற்றி நம்மால் தயாரிக்க முடிந்திருக்கிறது. இதுபோல் rasampodi/rasam  premix   தயார் செய்து வைத்துக் கொண்டு ரசம் செய்து ஜமாயுங்கள். 

இதையும் படியுங்கள்:
பலவகையான ரசப்பொடி தயாரிப்பது எப்படி? - எளிய சமையல் குறிப்புகள்!
Instant Rasam Mix

குறிப்பு:

ரசப்பொடி அரைக்கும் பொழுது அது கொரகொரப்பாக இருந்தால்தான் ரசம் நல்ல தெளிவாகவும், மணமாகவும், ருசியாகவும் இருக்கும். 

நைசாக அரைத்து விட்டால் கொழ கொழவென்று ரசம் இருப்பதோடு ருசியாக இருக்காது. 

பூண்டு பற்களை ரசத்தில் சேர்க்கும் பொழுது அதன் தோலுடன் இடித்து சேர்ப்பதுதான் நல்ல ருசியைக் கொடுக்கும். 

ரசத்திற்கு வறுக்கும் பொழுது சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடம் ஐந்து நிமிடம் என்றும் கூறியபடி வறுத்தால் அதன் பொருட்களின்  ஈரத்தன்மை போய் பதமாக வறுபடும். 

Gas-ஐ வீணாக்காமல் எளிதாக வெந்நீர் வைக்க உடனே Kettle வாங்குங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com