

1. பலாப்பழ அப்பம்
தேவையான பொருட்கள்:
பலாப்பழ சதை – 1 கப் (நன்றாக அரைத்தது)
கோதுமை மாவு / அரிசி மாவு – 1 கப்
வெல்லம் – ¾ கப்
தேங்காய் துருவல் – ¼ கப்
ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
நெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பலாப்பழம், வெல்லப்பாகு, மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடர்த்தியான மாவாக இருக்க வேண்டும். (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்) கடாயில் எண்ணெய் சூடானதும், சிறிய கரண்டியால் மாவை ஊற்றி மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக பொரிக்கவும்.
மணமிக்க, மென்மையான பலாப்பழம் அப்பம் தயார்.
2. பலாப்பழ புட்டிங்
தேவையான பொருட்கள்:
பலாப்பழம் - 1 கப்,
பால் - 200 மிலி,
கடல் பாசி - 5 கிராம்,
சர்க்கரை - 50 கிராம்.
செய்முறை:
பலாப்பழத்திலிருந்து விதையை நீக்கி துண்டுகளாக வெட்டவும். கடாயை சூடாக்கி அதனுடன் பால் சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது அதில் கடல் பாசியைச் சேர்த்து நன்கு கலக்கவும், அது கரைந்துவிடும். அதன் பிறகு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது பலாப்பழத்தை மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை பால் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கி ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி 30 நிமிடங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். புட்டிங் தயார்.
3. பலாப்பழ ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
பச்சை பலாப்பழம் (சிறு துண்டுகள்) – 2 கப்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன் (வறுத்து பொடி)
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
செய்முறை:
பச்சை பலாப்பழத்தை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து அரை வேக்காடு வேகவைத்து வடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் சூடாக்கி கடுகு தாளிக்கவும். பெருங்காயம் சேர்த்து மிளகாய் தூள், வெந்தய பொடி சேர்த்து மிதமான தீயில் கிளறவும். வேகவைத்த பலாப்பழ துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இறுதியில் உப்பு சரிபார்த்து எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக்கிளறி இறக்கவும். முழுவதும் குளிர்ந்ததும் காற்று புகாத பாட்டிலில் சேமிக்கவும். அல்டிமேட் சுவையில் பலாப் பழ ஊறுகாய் ரெடி.
4. பலாப்பழம் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
பச்சை பலாப்பழம் (சிறு நீள துண்டுகள்) – 2 கப்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
பச்சை பலாப்பழத்தை சுத்தம் செய்து நீளமாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து அரை வேகவைத்து வடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடர்த்தியான பஜ்ஜி மாவாக தயார் செய்யவும். கடாயில் எண்ணெய் சூடானதும் பலாப்பழ துண்டுகளை மாவில் தோய்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும்.
மொறு மொறு, சுவையான பலாப்பழம் பஜ்ஜி தயார்.
ஒரே பலாப்பழத்தை வைத்து இனிப்பு, காரம், நொறுக்குத்தீனி மற்றும் டெசர்ட் என 4 வெவ்வேறு சுவைகளில் அசத்தலான உணவுகளை சட்டெனத் தயார் செய்து குடும்பத்தினரை அசத்தலாம்.