கல்யாண வீட்டு மோர்க்குழம்பு ருசி ரகசியம்! வீட்டில் இப்படி வைங்க!

மணக்கும் மசாலாவுடன் வெள்ளரிக்காய் தயிர் பச்சடி காம்பினேஷன் செய்முறை
மோர்க்குழம்பு
மோர்க்குழம்புGemini image
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

வீட்டில் தயிர் மீந்து விட்டால் மோர்க்குழம்பு வைக்கும் ஆசை வந்துவிடும் நிறைய பேருக்கு. ஆனால் என்னதான் பார்த்துப் பார்த்து வைத்தாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகி சுவை குறைந்து விடும். இதனாலேயே வீட்டில் மோர்க்குழம்பு செய்து சுடச்சுட சோற்றில் ஊற்றி சாப்பிட வாய் ஊறினாலும் ஆசையை அடக்கி வைத்து கல்யாண விருந்துகளில் மோர்க்குழம்பை ஒரு பிடி பிடிப்பார்கள். கூடவே வெள்ளரிக்காய் போட்ட தயிர் பச்சடி காம்பினேஷன் இருந்தால் செம கட்டுதான்.

அதெல்லாம் சரி, கல்யாண வீட்டில் சாப்பிடும் மோர்க்குழம்பும் தயிர் பச்சடியும் வீட்டில் செய்வதைவிட ஏன் கூடுதல் ருசியாக இருக்கு அதன் ரகசியம் என்னனு சொல்றீங்களா? உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்குது. இதோ உங்களுக்காக அந்த ரகசியம இங்கு.

மோர்க்குழம்பில் சேர்க்கும் தயிரின் புளிப்பு, தேங்காயின் மணம், அரைத்த மசாலாவின் அளவு, தாளிப்பின் வாசனை எனச் சில சிம்பிளான நுணுக்கங்கள் தான் இந்தச் சுவைக்குக் காரணம். அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் வீட்டிலேயே கல்யாண வீட்டு ருசியைப் பெறலாம்.

கல்யாண வீட்டு ருசி தரும் மோர்க்குழம்பு செய்முறை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

புளிப்புச் சுவை அதிகமில்லாத தயிர் அல்லது கடைந்த மோர் – 2 கப்

துவரம்பருப்பு – 1 டீஸ்பூன்

வெண்டைக்காய் அல்லது பூசணிக்காய் – 1 கப்

தேங்காய்த் துருவல் – ½ கப்

சீரகம் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

தாளிக்கத் தேவை

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – ½ டீஸ்பூன்

வெந்தயம் – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

துவரம்பருப்பை கழுவி 15 லிருந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். துருவிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், ஊறவைத்த துவரம்பருப்பு ஆகியவற்றைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.

வெண்டைக்காயைச் சிறிது எண்ணெயில் நன்கு வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். பூசணிக்காய் இருந்தால் அதை முக்கால் பதமாக வேகவைத்து எடுக்கவும்.

இப்போது அடி கனமான உருளையில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மோர்க்குழம்பு
மோர்க்குழம்புGemini image

அடுத்து தயிரை நன்றாகக் கடைந்து, குழம்பில் சேர்த்து குறைந்த தீயில் வைத்து சூடாக்கவும். ஓரங்களில் சிறிய நுரை தோன்றும்போது அடுப்பை அணைக்கவும். தயிர் சேர்த்த பிறகு நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். அப்படி விட்டால் ருசி மாறும். இப்போது தாளிக்கும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும்.

கல்யாண வீட்டு மோர்க்குழம்பின் 5 ரகசியங்கள் இவைகள் தான்.

1. அதிகப் புளிப்பில்லாத தயிரைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

2. தேங்காயை நைசாக அரைப்பதால் குழம்பு கெட்டியான பதத்தைப் பெறும்.

3. சீரகத்தின் அளவு: அளவாகச் சேர்த்தால் நல்ல மணம் கிடைக்கும்.

4. வெந்தயத்தின் அளவு: மிகக் குறைவாகச் சேர்க்க வேண்டும். சற்று அதிகமானாலும் குழம்பு கசந்து விடும்.

5. கொதிக்கவிடும் மேலும் தயிர் சேர்த்த பிறகு அதிகமாகக் கொதிக்கவிடாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

சில கல்யாண வீடுகளில் மோர்க்குழம்பில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இது தனித்துவமான மணத்தைக் கொடுக்கும். இதையே நாமும் பயன்படுத்தலாம்.

அடுத்து கல்யாண வீட்டு தயிர் பச்சடியின் சுவை ரகசியம் இதோ..

தேவையான பொருட்கள்

கெட்டியான தயிர் – 1 கப்

வெள்ளரிக்காய் – 1 சிறியது

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

கடுகு – ¼ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – ¼ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

இதையும் படியுங்கள்:
அடடா! கல்யாண வீட்டு அவியல் இவ்வளவு சுவையா இருக்க இந்த சின்ன ட்ரிக் தான் காரணமா?
மோர்க்குழம்பு

செய்முறை

வெள்ளரிக்காயைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய், பச்சை மிளகாய், கடுகு ஆகியவற்றைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.தயிரை நன்றாகக் கடைந்து கொள்ளவும். இதில் வெள்ளரிக்காய், அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றைத் கலந்து கொள்ளவும். இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துச் சேர்த்து கடைசியாக கொத்தமல்லித்தழை தூவினால் டிஷ் ரெடி.

கல்யாண வீட்டு தயிர் பச்சடியின் ரகசியங்கள்

1. தண்ணீர் அதிகமில்லாத கெட்டித் தயிர் பச்சடிக்கு நல்ல பதத்தைக் கொடுக்கும்.

2. மேலும் தயிரை கட்டிகள் இல்லாமல் கடைந்தால் பச்சடி மிருதுவாக இருக்கும்.

3. சிறிதளவு தேங்காய் விழுது சேர்ப்பது தனிச் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.

4. கடுகை அளவாகச் சேர்த்தால் பச்சடிக்கு நல்ல மணம் கிடைக்கும். 

5. முக்கியமாக பரிமாறுவதற்கு சற்று முன்பு வெள்ளரிக்காய், உப்பு ஆகியவற்றைக் கலந்தால் தண்ணீர் அதிகமாகப் பிரியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
கல்யாண பந்தி சுவையில் அவியல் செய்யணுமா? இந்த ரகசிய ரெசிபியை ட்ரை பண்ணுங்க!
மோர்க்குழம்பு

சுவையை அதிகரிக்கும் கூடுதல் குறிப்புகள் இவைகள்..

மோர்க்குழம்பில் தயிரைச் சேர்ப்பதற்கு முன்பு அரைத்த விழுதை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

தயிர் மிகவும் புளிப்பாக இருந்தால், பச்சடிக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

இரண்டிலும்: உப்பைச் சரியான அளவில் சேர்க்கவும்; அதிக உப்பு மற்ற சுவைகளை மறைத்துவிடும்.

குறிப்பாக காரம், புளிப்பு, உப்பு ஆகியவை ஒன்றையொன்று மிகைப்படுத்தாமல் சமநிலையில் இருக்க வேண்டும்.

தயிர் சார்ந்த உணவுகளை நீண்ட நேரம் அறை வெப்பநிலையில் வைக்காமல், குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பரிமாறுவது நல்லது.

விருந்துகளில் பரிமாறப்படும் மோர்க்குழம்பின் அசல் சுவையை வீட்டிலேயே கொண்டுவர, தேவையான சமையல் அளவுகள், வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் தாளிக்கும் முறைகளின் ரகசியங்களை வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com