கம்பின் அற்புத நன்மைகள் மற்றும் கருப்பட்டி கம்பு இனிப்பு செய்வது எப்படி?

நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம் நிறைந்த கம்பு உடல் எடை குறைப்பு, இதய ஆரோக்கியம், ரத்த சோகை தடுப்பு, தோல் மற்றும் கண் பாதுகாப்புக்கு உதவும் சூப்பர்ஃபுட்.
kambu-health-benefits
kambu-health-benefits
Updated on

ம்பு ஒரு சிறந்த பாரம்பரியமான சிறுதானிய உணவாகும். கம்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் குறைவாக உட்கொண்டாலே வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது. கம்பு உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது. கம்பில் உள்ள மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் தொடர்ந்து கம்பு சாப்பிடுவது ரத்த சோகையை குறைத்து, ரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

கம்பில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் புற்றுநோய் செல்களை தடுக்கிறது. இதில் வைட்டமின் ஏ உள்ளதால் தோல் ஆரோக்கியம் மற்றும் கண் பார்வைக்கு சிறந்தது. கம்பை கொண்டு கம்மங்கூழ் போன்ற உணவுப் பொருட்கள்தான் செய்து சாப்பிட்டு வந்துள்ளோம் இன்று அதற்கு மாற்றாக கம்பை வைத்து ஒரு இனிப்பு வகை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

கம்பு                            - அரை கிலோ 

கருப்பட்டி                  -  1/4 கிலோ 

நெய்                           - தேவையான அளவு 

முந்திரி                       - தேவையான அளவு 

உலர் திராட்சை        - தேவையான அளவு 

ஏலக்காய் பொடி       - தேவையான அளவு

செய்முறை: 

கம்பை நன்கு அலசி வெயிலில் காயவைத்துக்கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த உடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் தேவையான அளவு நீர் ஊற்றி அரைத்து வைத்திருந்த கம்பை சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் கம்பை நன்கு ஒரு கரண்டி கொண்டு மசித்துக் கொடுக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை நன்கு துருவி தேவையான அளவு நீர் ஊற்றி பாகாக கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி நன்கு சிவந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து உப்பி வரும் வரை   பொரித்தெடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நாம் அரைத்து வேகவைத்த கம்புடன் கருப்பட்டிப்பாகும்.

இதையும் படியுங்கள்:
இரவு பகலாகப் படித்தும் மதிப்பெண் குறைகிறதா? நீங்கள் செய்யும் தவறுகள் இவைதான்!
kambu-health-benefits

நெய், பொரித்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் பொடி சேர்த்து மிதமான வெப்பத்தில் நன்கு கிளறி கொடுக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பாரம்பரியமான ஆரோக்கியமிக்க சிறுதானிய கம்பு இனிப்பு ஸ்வீட் தயார்.

மேலும் இதில் கருப்பட்டி சேர்ப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நெய் சேர்ப்பதால் அதிக நறுமணத்துடனும் முகப்பளபளப்பிற்கு உதவுகிறது.  கருப்பட்டி குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்களை வலுவடைய உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com