நரை முடியை விரட்ட ஒரு ஸ்பூன் போதும்! அசத்தல் சுவையில் கறிவேப்பிலை வெண்பொங்கல் செய்முறை!

தட்டில் ஒதுக்கும் கறிவேப்பிலையை இனி யாரும் ஒதுக்க மாட்டார்கள்; ஆரோக்கியமான முறையில் அசத்தல் வெண்பொங்கல் செய்வது எப்படி?
கறிவேப்பிலை வெண்பொங்கல்
கறிவேப்பிலை வெண்பொங்கல்AI image
Updated on

சாதாரண வெண்பொங்கலுக்கு மாற்றாக, கருவேப்பிலை அதிகமாக பயன்படுத்தி செய்யப்படும் புதுவிதமான வெண்பொங்கல் ரெசிபி இக்கட்டுரையில் தரப்படுகிறது. கருவேப்பிலை, மிளகு, சிறுஞ்சீரகம் வறுத்து அரைத்து, பச்சரிசி பாசிப்பருப்பு கலவையுடன் சேர்த்து சமைப்பதால், கருவேப்பிலையை ஒதுக்காமல் சுவையாக சாப்பிட முடியும். இது முடி வேர்களை பலப்படுத்தி, நரை முடியைத் தடுக்க உதவுவதாகவும் விளக்கப்படுகிறது.

கருவேப்பிலை அனைவருக்கும் பெரும்பாலும் பிடிக்காது. தட்டில் ஒரு கருவேப்பிலை இருந்தாலும் அதை அதன் நன்மைகள் தெரிந்திருந்தாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். ஆனால் இவ்வாறு கறிவேப்பிலையை பெருமளவு அரைத்து சமையலில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்டிப்பாக அதனை உட்கொண்டு விடுவார்கள்.

மேலும் கருவேப்பிலை உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடியது. இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்து முடியின் வேர்களைப் பலப்படுத்துகிறது. அடிக்கடி கருவேப்பிலை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நரை முடி வருவதை முன்கூட்டியே தடுக்க உதவுகிறது.

முடியை கருமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நாம் அன்றாட செய்யும் வெண்பொங்கலை காட்டிலும் இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும். இன்று அதற்கு மாற்றாக கருவேப்பிலையில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம் இது மிகுந்த சுவையுடையதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 300 கிராம்

பாசிப்பருப்பு - 150 கிராம்

கருவேப்பிலை - 100 கிராம்

மிளகு - 50 கிராம்

சிறுஞ்சீரகம் - 50 கிராம்

எண்ணெய் - 5 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முந்திரி - தேவையான அளவு

இஞ்சி - தேவையான அளவு

பசும்பால் - 3 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை வெண்பொங்கல்
கறிவேப்பிலை வெண்பொங்கல்AI image

கறிவேப்பிலை வெண்பொங்கல் செய்முறை :

பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் நன்கு கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் அதனை ஒரு குக்கரில் சேர்த்து உப்பு ,எண்ணெய் தேவையான அளவு சேர்த்து நன்கு குலைந்து வரும் வரை வேக வைக்க வேண்டும். குக்கரின் பிரஷர் அடங்கியவுடன் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளை அரிசியை தூக்கி போடுங்க... இந்த பாரம்பரிய அரிசி வகை நன்மைகளைப் பாருங்க!
கறிவேப்பிலை வெண்பொங்கல்

தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிளகு, சிறுஞ்சீரகம் கழுவி சுத்தம் செய்த கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்து வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

இவை நன்கு ஆரியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறுஞ்சீரகம், மிளகு, பச்சை மிளகாய், முந்திரி மூன்று ஸ்பூன் பசும்பால் சேர்த்து நன்கு கிளரி கொடுக்க வேண்டும். இதனுடன் நாம் அரைத்து வைத்திருந்த கறிவேப்பிலை கலவையும் சேர்த்து நன்கு கிளரி கொடுக்கவேண்டும். அதனுடன் பச்சரிசி, பாசிப்பருப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

கருவேப்பிலை முழுமையாக சேர்த்தால் அனைவரும் அதை ஒதுக்கி விடுவார்கள் ஆனால் அரைத்து சேர்ப்பதன் மூலம் அதை ஒதுக்க முடியாது சாப்பிட்டு விடுவார்கள். சுவையான கமகமக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய புதுவிதமான கருவேப்பிலை வெண்பொங்கல் தயார். சிறுவயதிலிருந்தே கருவேப்பிலையை உணவுடன் சேர்த்துக் கொள்வது நரை முடி வருவதை தடுக்கும் முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்ளவும் உதவும்.

இதையும் படியுங்கள்:
வீட்லயே நாவல் பொடி ஈஸியா செய்யலாம்... இனிமே காசு குடுத்து வாங்காதீங்க!
கறிவேப்பிலை வெண்பொங்கல்

இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை புதுவிதமான முறையில் சமைத்துக் கொடுப்பதன் மூலம் அதை அனைவரும் விரும்பி உண்பார்கள். இவ்வாறு ஆரோக்கியமான பொருட்களை சமைத்துக் கொடுப்பது உடலுக்கு மிகுந்த நன்மையை தரக்கூடியது.

ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கருமையான கூந்தலைப் பெற்று, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பாரம்பரிய சுவையில் புதுவிதமான உணவை உங்கள் குடும்பத்திற்கு வழங்கி மகிழுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com