
கொரியன் உணவுமுறை ஆரோக்கியமான உணவு முறையாக கருதப்படுகிறது. கொரியன் உணவுகள் பார்ப்பதற்கு கண்களை கவரக்கூடியதாக இருக்கும். பழங்கள், காய்கறிகள், மஷ்ரூம் என்று அனைத்தும் கலந்து வைட்டமின், மினரல் என்ற எல்லா சத்துகளையும் ஒருங்கே கொண்டிருக்கும்.
கொரியன் உணவுகள் மருத்துவ ரீதியாக சிறந்த உணவாக கருதப்படுகிறது. இது Ying yang ஐ சமநிலைப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொரியன் உணவுகளில் அதிகமான நார்ச்சத்தும் குறைந்த கொழுப்பையும் கொண்டிருக்கும். இந்த பதிவில் 3 சிறந்த சுவையான சைவ கொரியன் உணவுகளைப் பற்றிக் காண்போம்.
1. Korean kimchi recipe
நம்முடைய ஊரில் ஊறுகாய் எப்படியோ அதைப்போல கொரியாவில் இந்த கிமிச்சி. கொரியர்கள் எந்த உணவையும் கிமிச்சி இல்லாமல் சாப்பிடமார்கள். அந்த அளவிற்கு இது சுவை மிகுந்ததாக இருக்கும். கிமிச்சி செய்வதற்கு முதலில் ஒரு முழு முட்டைகோஸை நன்றாக கட்டம் கட்டமாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் நன்றாக உப்பை எடுத்து ஒவ்வொரு கோஸ் இலையிலும் படுமாறு தடவவும். இதை இரண்டு மணி நேரம் நன்றாக ஊற விடவும். இப்போது முட்டைகோஸ் மிருதுவாக மாறியிருக்கும். அதை தண்ணீரில் நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது ஒரு பத்திரத்தில் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு அரிசி மாவு 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக பேஸ்டாக ஆக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் வெங்காயம் 1, பூண்டு 10, நறுக்கிய பேரிக்காய் 1, இஞ்சி 1 துண்டு, மிளகாய் தூள் 1 கப், சோயா சாஸ் 1/2 டம்ளர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இதில் அரிசி பேஸ்ட், நீளமாக நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கி 1, கேரட் 1 சேர்த்து நன்றாக கலந்து திடவும். இப்போது இந்த பேஸ்டை முட்டை கோஸில் நன்றாக தடவி பிரிட்ஜில் வைத்து 1 வாரம் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
2.Tteokbokki recipe
முதலில் அரிசி மாவு 1 கப்பை பவுலில் சேர்த்துக்கொண்டு சிறிது உப்பு சேர்த்து கலந்துவிட்டு தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். இப்போது அதை நன்றாக நீளமாக உருட்டிவிட்டு விரல் அளவு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது இதை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நறுக்கி வைத்திருக்கும் துண்டுகளை சேர்த்து வேகவிடவும். அது தண்ணீருக்கு மேலே மிதந்து வந்த பிறகு எடுத்து குளிர்ந்த நீரில் போடவும். கடாயில் தண்ணீர் சிறிதுவிட்டு அதில் அரிசி மாவு 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து பேஸ்டாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதில் மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, சோயா சாஸ் 1 தேக்கரண்டி, நறுக்கிய பூண்டு 5 சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் சிறிது தண்ணீர் விட்டு அதில் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்துவிட்டு அதில் செய்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்க்கவும். கொதி வந்ததும் ரைஸ் கேக்கை இதில் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான Tteokbokki தயார்.
3.Korean cheese bun
முதலில் 4 பன்னை எடுத்துக்கொண்டு அதை நான்காக மேல் பக்கமாக கீறி வைத்துக்கொள்ளவும். இப்போது பவுலில் 1 கப் கிரீம் சீஸை எடுத்துக்கொள்ளவும். அதில் 1/4 கப் பவுடர் சுகர், 1/4 கப் கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும். இப்போது அந்த கிரீமை பைப்பிங் பேக்கில் போட்டு கீறி வைத்திருக்கும் பன்களின் நடுவில் ஃபில் செய்துவிடவும்.
இப்போது 1/4 கப் பட்டரை நன்றாக உருக்கி எடுத்துக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி 2 கொத்து சேர்த்துக்கொள்ளவும். இதை நன்றாக கலந்துவிட்டு செய்து வைத்திருக்கும் பன்னை இதில் அழுத்தி எடுத்து அதை மைக்ரோ ஓவனில் 180 டிகிரி செல்சியஸில் 10 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான கொரியன் சீஸ் பன் தயார். நீங்களும் கட்டாயம் வீட்டிலே இந்த 3 கொரியன் ரெசிபிஸை ட்ரை பண்ணிப் பாருங்கள்.