
‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ இந்த வசனத்தை நாம் எல்லோரும் மற்றவரிடமிருந்து ஒரு முறையாவது கேட்டிருப்போம். இதற்கு என்னதான் பொருள் என்று எப்போதாவது யோசித்திருப்போமா? ஒரு முள்ளை எப்படி இன்னொரு முள்ளால் எடுக்க முடியும்? குழப்பமாக இருக்கிறது இல்லையா?
இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் நமக்கு ஏதாவது பிரச்னையோ அல்லது ஆபத்தோ நேர்ந்தால், அந்தக் குறிப்பிட்ட பிரச்னை அல்லது ஆபத்திற்கான தீர்வை ஆராய்ந்து அதற்கான சரியான தீர்வை காண வேண்டும். அதாவது, நம்முடைய தீர்வானது, பிரச்னைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சில உதாரணங்களைக் காண்போம்.
முதல் எடுத்துக்காட்டு: ஒரு இடத்தில் தீப்பிடித்து எரிந்தாலோ அல்லது நாம் விறகு அடுப்பை அணைக்க நினைத்தாலோ எப்படி அணைப்போம்? தண்ணீரை ஊற்றித்தானே அணைப்போம். ஏன் நெருப்பை அணைப்பதற்கு தண்ணீரை மட்டும் உபயோகிக்கிறோம்? நெருப்பு எரிவதற்கு எது மிகவும் அவசியம்? நெருப்பு பிடிப்பதற்கு ஆக்சிஜன் மிக மிக அவசியம். இப்போது தண்ணீர் மற்றும் நெருப்பு இரண்டிற்குமான chemical formulaவை பார்க்கலாமா?
Fire = oxygen + fuel + heat.
Water = two hydrogen atoms + one oxygen atom.
ஆக, நெருப்பு எரிவதற்கும் அணைப்பதற்கும் ஆக்சிஜன் மிகவும் அவசியம். இங்கே நெருப்பானது ஆக்சிஜனால் உருவாகி, அதே ஆக்சிஜனால்தான் அணைக்கப்படுகிறது. இது, ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்பதற்கான சிறந்து எடுத்துக்காட்டாகும்.
இரண்டாவது எடுத்துக்காட்டு: நமக்கு diabetics அல்லது bp அல்லது obeosity வருவதற்கு முக்கியக் காரணம் என்ன? மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாதிருத்தல் என பல காரணங்கள் இருந்தாலும், முதலில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான காரணம், நாம் எடுத்துக்கொள்ளும் உணவே ஆகும். ஆரோக்கியமில்லாத உணவை உண்பதாலும் மற்றும் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் நமக்கு இந்த மாதிரியான உடல் உபாதைகள் கண்டிப்பாக வரும். இதை சரி செய்ய தேவையான மருந்தை மட்டும் எடுத்து கொண்டால் போதுமா? இல்லையே. இதை சரி செய்ய உணவும்தான் மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொண்டால் இந்த வியாதிகள் குணமாகி விடும். வியாதிக்குக் காரணம் உணவே. அதே உணவை முறையாக எடுத்துக்கொண்டால் அதுவே மருந்தாகும்.
மூன்றாவது எடுத்துக்காட்டு: நம் கால்களில் ஒரு முள்ளோ அல்லது கூர்மையான ஒரு கண்ணாடி துண்டோ குத்தி உள்ளே சென்று விட்டால் அதை எப்படி எடுப்போம்? டாக்டர் கூர்மையான ஒரு ஆயுதத்தால் அந்த இடத்தில் கீறியோ அல்லது குத்தியோதான் அதை எடுப்பார். அதாவது, முள் போன்ற கூர்மையான பொருட்களை எடுப்பதற்கு அதைப்போன்றே கூர்மையாக இருக்கும் ஆயுதம் தேவைப்படுகிறது.
நான்காவது எடுத்துக்காட்டு: பொதுவாக, நம் உடலில் ஏதாவது ஒரு உபாதை வந்தால் மருத்துவரிடம் செல்வது வழக்கம். பிரச்னை எப்படி இருக்கிறது, எந்த உறுப்பில் இருக்கிறது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு அதற்குரிய மருத்துவரிடம்தானே செல்வோம். கண், காது, மூக்கு சம்பந்தபட்ட வலி என்றால் ENT டாக்டர், இதயப் பிரச்னை என்றால் cardiologist, கண் பிரச்னை என்றால் கண் மருத்துவர் என பிரச்னைக்கு உகந்தவாறுதானே செல்வோம். அந்தெந்த பிரச்னைக்கு உகந்த மருத்துவர்தானே அதை சரி செய்ய முடியும். இப்போது உங்களுக்கு, ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்பதற்கான விளக்கம் புரிந்திருக்கும்.