லாக்டோஸ் அலர்ஜி இருக்கா? நெய் சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும்?

பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கான சிறந்த மாற்று உணவாக நெய் திகழ்கிறது.
நெய்
நெய் Gemini image
மகாலெட்சுமி சுப்ரமணியன்

நான் மகாலெட்சுமி சுப்ரமணியன்.கல்கி குழுமத்தின் நெடுநாள் வாசகி.எனக்கு எழுதுவதிலும்,படிப்பதிலும் ஆர்வம் அதிகம்.வீட்டிலிருந்தே சிறிய அளவில் தோழியின் விழாக்களுக்கு கேட்டரிங் செய்து கொடுக்கிறேன்.வீட்டு தோட்டத்தில் விளைந்த காய்,கனிகளை சிறிய அளவில் விற்பனை செய்கிறேன்.பிசியாக என்னை வைத்துக் கொள்வதில் ஆர்வம் கொள்கிறேன்.

Updated on: 

சென்ற தலைமுறையினர் உருக்கிய நெய்யையும், பெருக்கிய மோரையும் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இப்போது கொழுப்பு சத்து ஏறிவிடும், உடலுக்கு நல்லதல்ல என ஒதுக்கியதால் பல மூட்டு பிரச்னைகளும், உடல் நலக் கோளாறுகளும் நம்மை ஆட்டுவிக்கின்றன.

நெய்யில் மீடியம் செயின், ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இதை நம் உடலில் உள்ள ஈரல் நேரடியாக எடுத்துக் கொண்டு நமக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. இதனால் அதிக எனர்ஜி தேவைப்படும் விளையாட்டு வீரர்கள், வளரும் பிள்ளைகளுக்கும் அவர்களது உடல் வலுவை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பலகாலமாக நம் வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ள நெய்யின் பயன்பாடு தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. அபிஷேகமோ, யாகமோ நெய் இல்லாத பூஜை இல்லை.

பாலிருந்து வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அந்த வெண்ணெய் சூடாக்கும்போது அதிலுள்ள நீர் ஆவியாகி பால் சார்ந்த புரதம், சர்க்கரை நீக்கப்பட்டு மீதமிருக்கும் கொழுப்பு தான் நெய்யாத நமக்கு பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாகற்காய் கசப்பை முற்றிலுமாக நீக்க பாட்டி சொன்ன 5 எளிய ரகசிய வழிகள்!
நெய்

நெய் பல மாதங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே ப்ரெஷ்ஷாக இருக்கும். சிலருக்கு பால் ஒவ்வாமை இருக்கும். இதை லாக்டோஸ் அலர்ஜி என்பார்கள். அப்படிப் பட்டவர்கள் கூட நெய் யை தாரளமாக பயன்படுத்தலாம்.

ஏனென்றால் இதில் லாக்டோஸ் கிடையாது. வைட்டமின் ஏ,டி,ஈ மற்றும் கே ஆகியவை நெய்யில் உள்ளன. இதன் காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் பார்வைத்திறன் ஆகியவை அதிகரிக்கிறது.

மூட்டு பிரச்னைகளை வரவிடாமல் தடுக்கிறது. நெய் உடலில் பசியைத் தூண்டுகிறது. இதில் நீரில் கரையும் வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ உள்ளது. கண் பார்வையை மேம்படுத்த வைட்டமின் ஏ இன்றியமையாதது. வைட்டமின் ஈ உடலிலுள்ள இனப்பெருக்க மண்டலம் நன்றாக செயல்பட உதவுகிறது.

நெய்
நெய்Gemini image

இதில் வைட்டமின் k2 மற்றும் conjugated Linoleic Acid (cla) என்கிற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நோய்கள் வரவிடாமல் தடுக்கிறது.

இதில் உள்ள Bulyric Acid உடல் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. நெய் குடலில் ஏற்படும் புண்கள், வீக்கம் மற்றும் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மாதுளையோடு பாலா? உடலுக்குள் நடக்கும் விபரீதம் என்ன? - நியூட்ரிஷியன் எச்சரிக்கை!
நெய்

இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் போன்றவை தாயின் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. சிறு குழந்தைகளுக்கு லேக்டோஸ் இன்டாலரன்ஸ் (Lactose intolerance) அல்லது casein intolerance பிரச்னை இருக்கும். இதனால் இக்குழந்தைகளுக்கு பால் சார்ந்த பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்களுக்கெல்லாம் தாரளமாக நெய்யை உணவில் பயன்படுத்தலாம்.

நெய்யை சூடாக்கினாலும் அதன் தன்மை மாறாது. குளிர்சாதன பெட்டியில் வைக்காமலேயே பல நாட்கள் நன்றாக இருக்கும். வயிற்று புண்ணை ஆற்றும். நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் வயிற்று பகுதியில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிக்கும். ஆயுர்வேதம் நெய்யின் பயன்பாட்டை அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

தீக்காயங்கள் மீது நெய்யை தடவ தோலுக்கு குளிர்ச்சி தந்து புண்ணை விரைவில் ஆற்றுகிறது. நெய் உணவின் மணத்தையும், ருசியையும் மேம்படுத்துகிறது. இவ்வாறு பல நன்மைகள் தரும் நெய்யை உணவில் அளவாக பயன்படுத்த நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பால் ஒவ்வாமையால் அவதிப்படுவோர் எவ்வித தயக்கமும் இன்றி நெய்யை உட்கொள்ளலாம் என்பதற்கான அறிவியல் காரணங்களையும், அதனால் உடலுக்குக் கிடைக்கும் அற்புதப் பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com