கசப்பே தெரியாமல் வெந்தயக்கீரை அடையா? மணமணக்கும் 4 மாலை நேர டிபன் ரெசிபி!

அடை, பணியாரம், தொக்கு மற்றும் பக்கோடா என அசத்தல் உணவுகள் செய்யும் எளிய முறைகள்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரைGemini image

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

1. வெந்தயக் கீரை அடை

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை - 2 கட்டு

கடலை பருப்பு - 1 கப்

பச்சரிசி - கால் கப்

காய்ந்த மிளகாய் - 5

இஞ்சி (நறுக்கியது) - அரை டீஸ்பூன்

பெருங்காயம் - 1 சிட்டிகை

எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கடலைப் பருப்பையும், பச்சரிசியையும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு வைத்து லேசாக, கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

வெந்தயக் கீரையை வேர்கள் நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கீரையை அரைத்து வைத்திருக்கும் மாவில் கலக்கவும். மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேர்க்கவும். பெருங்காயத்தையும் மாவில் சேர்க்கவும்.

தோசைக்கல்லில் இந்த வெந்தயக்கீரை மாவை அடையாக தட்டிப் போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும். சுவையான சத்தான வெந்தயக் கீரை அடை ரெடி.

2. வெந்தயக் கீரை பணியாரம்

தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை - ஒரு கட்டு

இட்லி மாவு - 250 கிராம்

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்

எண்ணெய் - 100 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காயத்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்த்துக் கலக்கவும்.

பிறகு, பணியாரக்கல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு குச்சியால் திருப்பி, வேகவிட்டு எடுக்கவும். சுவையான வெந்தயக் கீரை பணியாரம் தயார்.

வெந்தயக்கீரை
வெந்தயக்கீரைGemini image

3. வெந்தயக் கீரை தொக்கு

தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை - 2 கட்டு

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

வெந்தயம் - ஒரு ஸ்பூன்

வர மிளகாய் - 12

புளி - எலுமிச்சை அளவு

சீரகம் - ஒரு ஸ்பூன்

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் பேக்கரி நொறுக்குத் தீனிகளை கேட்கிறார்களா? கம்பு மாவில் சூப்பர் ஸ்நாக்ஸ்!
வெந்தயக்கீரை

செய்முறை:

வெந்தயக் கீரையை கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், வர மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். இதை ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும்.

மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயக் கீரையை போட்டு நன்கு சுருண்டு வரும் பதம் வரும் வரை வதக்கவும். இறக்கி வைத்து ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இறுதியாகப் முதலில் அரைத்தவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும். நாவில் நீர் ஊறவைக்கும் வெந்தயக் கீரை தொக்கு ரெடி.

4. வெந்தயக் கீரை பக்கோடா

வெந்தயக் கீரை - 3 கப் (நறுக்கியது)

சாதம் - 1 கப்

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

கடலை மாவு - 3 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

இதையும் படியுங்கள்:
டீ டைம் ஸ்பெஷல்: கிரிஸ்பியான பாரம்பரிய தட்டை செய்ய இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
வெந்தயக்கீரை

முதலில் ஒரு பௌலில் வெந்தயக்கீரை, சாதம், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள பக்கோடாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெந்தயக்கீரை பக்கோடா ரெடி.

வெந்தயக்கீரையின் கசப்புத்ன்மை தெரியாமல், மாலையில் சுடச்சுடச் செய்து சாப்பிடக்கூடிய 4 வகையான ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளைச் செய்யும் தெளிவான வழிமுறைகள் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com