பருப்பே இல்லாமல் மணமணக்கும் மோர் ரசம் & கிழங்கு வறுவல்! 5 நிமிடத்தில் அசத்தல் காம்போ!

மதிய உணவு நேரத்தை அசத்தலான ருசியுடன் மாற்ற அருமையான சைடிஷ் ரெசிபிகள்.
மோர் ரசம்
மோர் ரசம்Gemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

சுடச்சுட சாதம். அதில் புதினா துவையலை சேர்த்து பிசைந்து மொறு மொறுப்பான சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவலை சேர்த்து சாப்பிட, ஆஹா! அமிர்தம்தான் போங்கள். சுட்ட அப்பளம், வள்ளிக்கிழங்கு வறுவலுடன் மோர் ரசம் சாதத்தை ஒரு பிடி பிடிக்க ஆஹா என்ன சுவை!

1. புதினா துவையல்:

புதினா இலைகள் - 2 கப்

கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி

உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

உப்பு - தேவையானது

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் - சிறிது

வெல்லம் - சிறிய கொட்டை பாக்களவு

செய்முறை:

புதினா மற்றும் கொத்தமல்லித் தழைகளை சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் புதினா இலைகளை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

மிக்ஸியில் வதக்கிய பொருட்களை சேர்த்து அத்துடன் புளி, தேங்காய்த் துருவல், தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். மணக்க மணக்க ருசியான புதினா துவையல் தயார்.

புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வதால் அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற செரிமானக் கோளாறுகளை சரி செய்யும். இதில் வைட்டமின் ஏ, சி, மற்றும் பி காம்ப்ளக்ஸ் சத்துகள் மற்றும் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளன.

2. மோர் ரசம்:

தயிர் - 1 கப்

சீரகம் - 1 ஸ்பூன்

மிளகு - 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

கருவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

உப்பு - தேவையானது

கொத்தமல்லி தழை - சிறிது

தாளிக்க: கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நல்லெண்ணெய்

மோர் ரசம்
மோர் ரசம்Gemini image

செய்முறை:

முதலில் சீரகம், மிளகு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து லேசாக மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிருடன் தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கரைத்து மோராக எடுத்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
முருங்கைக்கீரையை உணவில் சேர்க்க சாக்கு சொல்ல முடியாது! 4 சுவையான ரெசிபிகள்!
மோர் ரசம்

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து, இடித்து வைத்துள்ள மசாலா விழுதையும் சேர்க்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு நிமிடம் நன்கு வதக்கி விட்டு கரைத்து வைத்துள்ள மோரை அதில் விடவும். மோர் விட்டதும் கொதிக்க விடக்கூடாது. லேசாக சூடானதும் இறக்கி மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

இந்த மோர் ரசத்திற்கு பருப்பு தேவை இல்லை. இதில் புளி அல்லது தக்காளிக்கு பதிலாக மோர் பயன் படுத்தப்படுகிறது. வெறும் ஐந்தே நிமிடத்தில் இதை எளிதாக செய்துவிடலாம். மோரில் உள்ள புரோபயாடிக்ஸ் மற்றும் ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, இஞ்சி, சீரகம் போன்றவை செரிமானப் பிரச்சனைகளை சரி செய்யும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

3. சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ

வெங்காயம் - 1

பூண்டு - 4 பற்கள்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

தனியா தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையானது

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

இதையும் படியுங்கள்:
கிராமத்து சுவையில் பிரண்டை துவையல், வாழைக்காய் பொடிமாஸ்! அசத்தல் காம்போ!
மோர் ரசம்

செய்முறை:

சர்க்கரை வள்ளி கிழங்கை நன்கு கழுவி தோல் நீக்கிவிட்டு வட்ட வடிவில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். கிழங்கு வெந்து மொறுமொறுப்பாகும் வரை குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்து கடைசியாக தனியாத்தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கிளறி இறக்க ருசியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல் தயார். இந்த கிழங்கு சீக்கிரம் வெந்துவிடும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடலில் சதை மற்றும் எலும்புகளை பலப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உதவும்.

வாசனை நிறைந்த மோர் ரசம் மற்றும் மொறுமொறு வறுவலுடன் சுவையான பாரம்பரிய மதிய உணவை எளிதாகத் தயாரிக்கும் வழியை வாசகர் கற்றுக்கொள்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com