திருச்செந்தூர் சூரசம்ஹார பிரசாதம்... முருகனுக்குப் பிடித்த 3 நைவேத்தியங்கள்!

கோயில் முறை சுவையில் ஆன்மிகச் சிறப்புமிக்க நைவேத்தியங்களை எளிதில் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நைவேத்தியங்கள்
நைவேத்தியங்கள்Gemini image
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

தமிழ் கடவுள் முருக பெருமானுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியங்களில் ஒன்று திருப்பாகம். திருசெந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகனுக்கு பிரசாதமாக இந்த திருப்பாகம் தான் வைப்பாங்க. இதை செய்ய,

1. திருப்பாகம்

தேவையான பொருட்கள்:

நெய் - 1 கப்

கடலைமாவு - 1 கப்

பால் - 2 கப்

சர்க்கரை - 11/2 கப்

பொடித்த முந்திரி - 1கப்

பாலில் ஊற வைத்த குங்குமப்பூ - சிறிதளவு

ஏலக்காய்தூள் - 1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு அடி கனமுள்ள வாணலியை அடுப்பில் வைத்து ½ கப் நெய் ஊற்றி அதில் கடலை மாவை சேர்த்து வாசனை வரும் வரை கட்டிகள் இல்லாதவாறு சிறு தீயில் வைத்து வதக்கி சிறிதளவு வெந்து வந்ததும் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து ஒன்று சேர்ந்த பிறகு பொடித்த முந்திரி, பாலில் ஊறவைத்த குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கடைசியாக மீதி இருக்கும் ½ கப் நெய்யையும் இத்துடன் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்த பிறகு இறக்கி வைத்து கந்தனுக்கு படைத்து விட்டு பின்னர் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து சாப்பிட வேண்டியதுதான்.

2. சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளி கிழங்கு - 1/4 கிலோ

நாட்டு சர்க்கரை - ¾ கப்

வறுத்த முந்திரி - 15

செய்முறை:

முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக வேகவைத்து ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான வாணலியில் நாட்டு சர்க்கரையும், கொஞ்சமா தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதே வாணலியை சுத்தமாக கழுவி அதில் வடிகட்டி வைத்த சர்க்கரை கரைசலை ஊற்றி கொதித்ததும், அடுப்பை அணைத்து விட்டு அரைத்த கிழங்கை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் வைத்து ஏலக்காய்தூள் சேர்த்து கைவிடாமல் கிளறவும். ¼ கப் நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கடைசியாக வறத்த முந்திரியும் போட்டு ஒன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கி முருகபெருமானுக்கு படைத்து விட்டு அனைவருக்கும் சாப்பிட வேண்டியதுதான்.

இதையும் படியுங்கள்:
கரகரப்பான முறுக்கு முதல் ரிச் மைசூர்பாகு வரை: பட்சணம் செய்ய சூப்பர் டிப்ஸ்!
நைவேத்தியங்கள்

3. தேனும் தினைமாவும்

குறிஞ்சி நிலத் தலைவனான முருகப்பெருமானுக்கு, மலைப் பகுதியில் விளையும் தினை மாவையும் தேனையும் கலந்து நைவேத்தியமாகப் படைப்பது மிகவும் பழமையான மற்றும் விசேஷமான மரபாகும். இதனை செய்ய,

தேவையான பொருட்கள்:

தினைஅரிசி - 1 கப்

சுத்தமான தேன் - 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்

பசுநெய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - ½ டீஸ்பூன்

சுக்குப்பொடி - ¼ டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 10 (பொடியாக உடைத்தது)

உலர்திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (நன்றாக வறுத்தது)

நைவேத்தியங்கள்
நைவேத்தியங்கள்Gemini image

செய்முறை:

தினை அரிசியை நன்கு கழுவி, ஒரு சுத்தமான துணியில் பரப்பி நிழலில் ஈரம் போக உலர்த்தவும். பின்னர் அடி கனமான வாணலியில் தினை அரிசியைச் சேர்த்து, பொன்னிறமாக நல்ல மணம் வரும் வரை கருகாமல் வறுத்து ஆறவிடவும். ஆறிய தினையை மிக்ஸியில் போட்டு நைசான மாவாக அரைக்கவும். அரைத்த மாவைச் சல்லடையில் சலித்து எடுத்துக்கொண்டால், நைவேத்தியம் மிருதுவாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய முறையில் மணக்க மணக்கச் சுவையான அதிரசம் செய்வது எப்படி?
நைவேத்தியங்கள்

ஒரு சிறிய கரண்டியில் பசு நெய்யை உருக்கி, உடைத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து தினை மாவில் சேர்க்கவும். தேங்காய் சேர்ப்பதாக இருந்தால், அதையும் ஈரப்பதம் போக வறுத்துச் சேர்க்கலாம். மாவுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் சுக்குப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். மாவு நன்கு ஆறியப்பிறகு சிறிது சிறிதாகத் தேன் ஊற்றி, கைகளால் நன்கு பிசையவும்.

மாவை உதிரியாகப் படைப்பதாக இருந்தால் அப்படியே கிண்ணத்தில் வைக்கலாம். உருண்டையாகப் பிடிக்க விரும்பினால், உள்ளங்கையில் சிறிது நெய் தடவி, பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக பிடித்து நைவேத்தியமாகப் படைக்கவும்.

முருகப்பெருமானுக்கு உகந்த மூன்று புனிதமான, பாரம்பரிய நைவேத்தியங்கள் அசல் முறைப்படி தயாரிக்கும் முறைகளை வாசகர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்; இது நமது வீட்டுச் சமையலை கோயில் பாரம்பரியத்துடன் இணைக்கிறது.