முட்டைக்கோஸ்: பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் 4 அசத்தல் ரெசிபிகள்!

Amazing recipes!
cabbage recipes
Published on

முட்டைக்கோஸ் என்றாலே காத தூரம் சென்று விடுவார்கள் குழந்தைகளுடன் பெரியவர்களும். காரணம் அதில் வீசும் ஒருவித கந்தக மணம். இருப்பினும் அதிலுள்ள சத்துக்களைப் பற்றி தெரிந்து கொண்டால் அதை தவிர்க்கவே மாட்டோம் என்பதுதான் உண்மை.

விட்டமின் சி, கே, நார்ச்சத்து போன்ற பலவிதமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள இலை காயான முட்டைகோஸ் இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு உகந்தது. மேலும் இது உடல் எடையை பராமரிக்கவும் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவது சிறப்பு.

இதில் உள்ள விரும்பாத மணத்தை தடுக்க முட்டைக்கோஸ் வேகும்போது சிறு துண்டு இஞ்சி சேர்த்துக்கொள்வது நல்லது. வாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் முட்டைகோஸ் ரெசிபிகளை காண்போம்.

பாசிப்பருப்பு கோஸ்மல்லி

தேவை:

முட்டைக்கோஸ் - 1 (நறுக்கியது)

பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் ஊறவைத்தது)

வெங்காயம் -2, (நறுக்கியது)

பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது) இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள்- 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் (விரும்பினால்)- 1/ 4 டீஸ்பூன்

உப்பு- தேவைக்கு

எண்ணெய் - 2 ஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிது

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி சீரகத்தைச் சேர்த்து சில வினாடிகள் விட்டு வாசம் வந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் இதில் இஞ்சி விழுது மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். இத்துடன்

கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி ஊறிய பாசிப்பருப்பு மற்றும் நீளமாக நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் அவ்வப்போது கிளறி முக்கால் பதமாக கோஸ் பருப்பு வெந்ததும் எடுத்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். வழக்கமான பொரியலுக்கு பதில் இது தொட்டுக்கொள்ள சுவையானது. தேவைப்பட்டால் எலுமிச்சைசாறு சேர்த்தால் சுவை கூடும்.

முட்டைக்கோஸ் மற்றும் கேரட் வதக்கல்

தேவையான பொருட்கள்:

நடுத்தர அளவிலான முட்டைக்கோஸ் - 1 (நறுக்கியது)

நடுத்தர அளவிலான கேரட் -2 தோல் நீக்கி துருவியது

பூண்டு -3 பல் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி விழுது- 1 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

-உப்பு மற்றும் மிளகு - சுவைக்கேற்ப

சிவப்பு மிளகாய் பொடித்தது ( சில்லி ஃபிளேக்ஸ்) -1/4 டீஸ்பூன் ( விரும்பினால்)

செய்முறை:

பெரிய வாணலியில் எண்ணெயை சூடாக்கி நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி விழுதைச் சேர்த்து. 30 வினாடிகள் வாசம் வரும் வரை கிளறவும். பின் துருவிய கேரட்டைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறவும். இதில் நறுக்கிய முட்டைக்கோஸைச் சேர்த்து மேலும் 3-4 நிமிடங்கள் அல்லது காய்கறிகள் மென்மையாக மிருதுவாகும் வரை கிளறவும். இப்போது சோயா சாஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தேவையான உப்பு, மிளகுத்தூள் மற்றும் பொடித்த மிளகாய் சேர்த்து நன்கு கிளறி

நறுக்கிய பச்சை வெங்காயம் அல்லது வறுத்த வெள்ளை எள் கொண்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும். இது ஒரு புதுவகையான வதக்கலாக இருக்கும். இதில் நீங்கள் விரும்பினால் வறுத்த பனீர் போன்றவற்றை சேர்த்தால் பாஸ்ட் புட் ருசி இருக்கும். இதை நூடுல்ஸ் உடன் பரிமாறலாம்.

இதையும் படியுங்கள்:
வாழைத்தண்டை இப்படி செஞ்சு பாருங்க! உடலுக்கு ஆரோக்கியம், சுவையில் புதுமை!
Amazing recipes!

முட்டைக்கோஸ் நெய் சாதம்.

தேவை:

பிரியாணி அரிசி - 1 கப்

நெய் - 4 டேபிள்ஸ்பூன்

பெரிய வெங்காயம்- 1

முந்திரி பருப்பு - 6

பச்சை மிளகாய்- 1

பட்டை -2

ஏலக்காய்- 2

ககிராம்பு- 2

உப்பு - தேவைக்கு

மெலிதாக அறிந்த முட்டைக்கோஸ்- 1/2 கப்

பொதினா- சிறிது

செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக வெட்டிய வெங்காயம், முட்டைக்கோஸ், முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வதக்கி பாதியை தனியாக எடுத்து வைத்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வாசனை சாமான்களை போட்டு ஊறவைத்த அரிசி, மிளகாய், உப்பு போட்டு வேக வைக்கவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து வைத்திருந்த வெங்காயம் முட்டைக்கோஸ் கலவையை அதில் போட்டு நன்கு கிளறி வாசனைக்கு தேவைப்பட்டால் புதினா தூவி இறக்கலாம். இது மெலிதான மசாலா மற்றும் நெய் வாசனையுடன் முட்டைகோஸ் விரும்பாத குழந்தைகளும் சாப்பிட ஏதுவாக இருக்கும்.

முட்டைகோஸ், கைமா புட்டு

தேவை:

முட்டைகோஸ்- 1 கப் ( நறுக்கியது)

வெங்காயம்-2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி -சிறிய துண்டு

பூண்டு -5 பற்கள்

நெய் -2 டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி - 1 ஸ்பூன்

பட்டை கிராம்பு, ஏலக்காய்- தலா 2

முந்திரி பருப்பு -4

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் பொடி, உப்பு - தேவைக்கு கொத்தமல்லித்தழை- சிறிது

முட்டை – 2

இதையும் படியுங்கள்:
இந்த 12 கிச்சன் ரகசியங்கள் உங்க வாழ்க்கையையே மாத்திடும்!
Amazing recipes!

செய்முறை:

நறுக்கிய முட்டைக்கோசுடன், மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு முக்கால் பாதமாக வேகவைக்கவும். பின் சட்டியில் நெய் ஊற்றி வாசனை சாமான்களை போட்டு வேகவைத்த முட்டைகோஸ், கொத்தமல்லி தலை, கருவேப்பிலை போட்டு நன்றாக கிளறி உப்பு போட்டு அடித்து வைத்துள்ள முட்டையையும் ஊற்றி முட்டை வேகும்வரை மேலும் நன்றாக கிளறி நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை போட்டு இறக்கி வைக்கவும்.

இதில் முட்டைகோஸ் அரைப்பதமாக வெந்திருக்க வேண்டியது முக்கியம். முட்டைக்கோசுடன் முட்டையும் இணைந்து இருப்பதால் குழந்தைகள் எளிதாக இதை சாப்பிட்டு விடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com