நவராத்திரி 9 நாளுக்கும் 9 வகை சுண்டல்: நாவில் கரையும் கறிப் பொடி ரகசியம்!

ஒரே மாதிரியான சுண்டல் செய்து போர் அடிக்காமல், தினமும் ஒரு சத்தான சுவை பிரசாதம் செய்ய எளிய வழிகாட்டல்.
சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

நவராத்திரி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சுண்டல் தான். நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒரே மாதிரியான சுண்டலைச் செய்து போர் அடிக்காமல் தினமும் ஒருவகை என ஒன்பது விதமான சுவையான சுண்டல்களைச் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் செய்து விட்டு வீட்டிற்கு வரும் பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுத்துவிட்டு நாமமும் எடுத்துக் கொள்ளலாம்.

சிலருக்கு மிதமான காரத்தில் சுண்டல் பிடிக்கும். சிலருக்கோ ரொம்ப ஸ்பைசியாக இருந்தால் பிடிக்கும். அழுத்தமான சுவையை விரும்புபவர்கள் கறிப் பொடி என்னும் சிறப்பு மசாலா பொடியை செய்து வைத்துக் கொண்டு கடைசியாக 2 ஸ்பூன் தூவிக் கிளறி கொடுக்கலாம். புரதச்சத்து நிறைந்த சுண்டல்களை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

1. வெள்ளை கொண்டை கடலை சுண்டல்: 

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்

பச்சை மிளகாய் - 2 

தேங்காய்த்துருவல் - 1/4 கப்

பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - தேவையானது 

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை:

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். இரவே ஊற வைத்து விடுவது நல்லது. நன்கு ஊறிய கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும். வெந்த பிறகு நீரை வடித்து விட்டு தனியாக வைக்கவும்.  

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கடுகு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அத்துடன் வெந்த கொண்டைக்கடலையைப் போட்டு கிளறவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்க மிகவும் ருசியான சுண்டல் தயார்.

2. பச்சை பயறு சுண்டல்:

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

தேவையான பொருட்கள் 

பச்சைப் பயறு - 1 கப் 

தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் 

மிளகாய் வற்றல் - 1 

உப்பு - தேவையானது 

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பயறை 2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை குழையாமல் வேக விடவும். வெந்தப் பயறில் தண்ணீர் இருந்தால் முழுமையாக வடித்து விட்டு தட்டில் பரத்தி வைக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் வெந்த பச்சை பயறைக் கொட்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். மிக்ஸியில் தேங்காய் மற்றும் மிளகாய் இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக பொடித்து சுண்டலில் சேர்க்க ருசியான சுண்டல் தயார். 

பச்சைப் பயறிலேயே இனிப்பு சுண்டல் செய்யலாம். இதற்கு காரத்திற்கு பதில் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து செய்ய வேண்டியது தான்.

3. கருப்பு கொண்டை கடலை சுண்டல்: 

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

தேவையான பொருட்கள் 

 கருப்பு கொண்டைக்கடலை - 1 கப் 

உப்பு - தேவையான அளவு 

மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் 

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன் 

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

ஸ்பைசி மசாலாப் பொடி செய்ய: 

தனியா - 1/2 கப்

கடலைப்பருப்பு - 1/4 கப்

 உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்

 மிளகாய் - 10

பெருங்காய கட்டி - சிறிது 

செய்முறை:

ஸ்பைசி மசாலா பொடிக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசம் வர வறுத்து, (எண்ணெய் விடத் தேவையில்லை) சிறிது ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்தெடுக்கவும். 

கருப்பு கொண்டை கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு எடுக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெந்த கொண்டைக்கடலையை சேர்த்துக் கிளறவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து, பொடித்து வைத்துள்ள ஸ்பைசி மசாலாப் பொடியை ஒரு ஸ்பூன் அளவில் போட்டுக் கிளறி இறக்கவும். 

4. தட்டைப் பயறு சுண்டல்:

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

இதிலும் இனிப்பு, காரம் என இரண்டு வகைகள் செய்து அசத்தலாம். இனிப்பு சுண்டலுக்கு வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்க்க வேண்டும்.

தேவையான பொருட்கள் 

தட்டைப் பயறு - 1 கப் 

பச்சை மிளகாய் - 2

இஞ்சி துண்டு - சிறிது 

சீரகம் - 1/4 ஸ்பூன் 

தேங்காய் துருவல் - 1/4 கப்

உப்பு - தேவையானது பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன் 

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை 

செய்முறை:

காராமணி எனப்படும் தட்டை பயறை 3 மணி நேரம் ஊற விட்டு, குக்கரில் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும். பச்சை பயிறு, காராமணி போன்றவற்றை சுண்டல் செய்யும் பொழுது அதிகம் குழையாமல் பார்த்துக் கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெந்த காராமணியை சேர்த்து பெருங்காயத்தூள் போட்டு கிளறவும். மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சுண்டலில் போட்டு கலக்க ருசியான காராமணி சுண்டல் தயார்.

5.  ராஜ்மா (சிவப்பு கிட்னி பீன்ஸ்) சுண்டல்:

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

தேவையான பொருட்கள் 

ராஜ்மா - ஒரு கப் 

தேங்காய்த்துருவல் -சிறிதளவு 

தனியா பொடி - 1/4 ஸ்பூன் 

கார பொடி - 1/4 ஸ்பூன் 

பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு - தேவையானது

வெல்லம் - கொட்டைப்பாக்கு அளவு

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை:

ராஜ்மாவை நன்கு கழுவி 8 மணி முதல் 12 மணி நேரம் வரை ஊற விடவும். ஊறியதை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை நன்கு வேக விட்டு எடுக்கவும். ராஜ்மா மென்மையாக வெந்தால் தான் ருசியாக இருக்கும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் வெந்த ராஜ்மாவைப் போட்டு தேங்காய்த் துருவல், தனியா தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கடைசியாக கொட்டைப்பாக்களவு பொடித்த வெல்லத்தையும் சேர்த்து கிளறவும்.

6.  மசாலா பட்டாணி சுண்டல்:

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

இதனை தேங்காய், மாங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பீச் சுண்டல் போல் செய்யலாம். ருசியாக இருக்கும். சாதாரண நாட்களில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பீச் ஸ்டைலில் செய்யலாம். ஆனால் நவராத்திரி போன்ற விரத நாட்களில் வெங்காயம், பூண்டைத் தவிர்த்து விடுவது நல்லது.

தேவையான பொருட்கள் 

பட்டாணி - 1 கப் 

பச்சை மிளகாய் - 2 

இஞ்சி - சிறு துண்டு

தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் 

உப்பு - தேவையானது 

கொத்தமல்லி - சிறிது 

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை:

பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதிகம் குழையாமல் 2 விசில் விட்டு எடுக்கவும். 

வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெந்த பட்டாணியை சேர்த்துக் கிளறவும். மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக பொடித்து சுண்டலில் சேர்த்து, கடைசியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்க ருசியான பட்டாணி சுண்டல் தயார். ரொம்ப ஸ்பைசியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ஸ்பைசி மசாலாப் பொடியை 1 ஸ்பூன் அளவில் சேர்க்கவும்.

7.  நிலக்கடலை சுண்டல்:

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

தேவையான பொருட்கள் 

பச்சை வேர்க்கடலை - 1 கப் 

கடுகு-  1/2 ஸ்பூன் 

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 

கருவேப்பிலை - சிறிது 

பச்சை மிளகாய் - 2 

பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன் 

தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் 

உப்பு - தேவையானது 

செய்முறை:

பச்சைக் கடலையை கழுவி உப்பு சேர்த்து வேகவிட்டு, நீரை வடித்து தனியாக வைக்கவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கடுகு பொரிந்ததும் வெந்த நிலக்கடலையை சேர்த்துக் கிளறவும். கடைசியாக தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்க சுண்டல் தயார்.

இதையும் படியுங்கள்:
குதிரைவாலி அரிசி இருக்கா? மொறுமொறு வடை முதல் பர்பி வரை 5 அசத்தல் ரெசிபி!
சுண்டல் செய்முறை

8. கடலைப்பருப்பு இனிப்பு சுண்டல்: 

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 2 கப் 

வெல்லம் - 3/4 கப் 

துருவிய தேங்காய் - 4 ஸ்பூன் 

ஏலக்காய்த்தூள் - 1/2 ஸ்பூன் 

நெய் - 1 ஸ்பூன் 

செய்முறை:

கடலைப்பருப்பை வெறும் வாணலியில் சூடு வர லேசாக வறுத்து விட்டு தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊற விடவும். குக்கரில் பருப்பை 2 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பருப்பு குழையாமல் அதே சமயம் நன்றாக வெந்து இருக்க வேண்டும். வெந்த பிறகு நீரை வடித்து தனியாக வைக்கவும். 

வாணலியில் பொடித்த வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க விடவும்‌. பிறகு வடிகட்டி வேகவைத்த கடலை பருப்புடன் சேர்த்து மிதமான தீயில் வெல்லம் நன்றாக சேர்ந்து கெட்டியாகும் வரை கிளறவும். கடைசியாக துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்து கிளறி சுண்டி வரும் பொழுது இறக்க மிகவும் ருசியான இனிப்பு சுண்டல் தயார். இதில் கார சுண்டலும் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை அளவை உயர்த்தாத 5 ஆரோக்கிய கோதுமை ரவை ரெசிபிகள்!
சுண்டல் செய்முறை

9. பாசிப்பருப்பு சுண்டல்:

சுண்டல் செய்முறை
சுண்டல் செய்முறைGemini image

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு - 1 கப் 

உப்பு - தேவையானது 

தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன் 

இஞ்சி துருவல் - 1/2 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 1

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

சுண்டல் செய்முறை:

பயத்தம் பருப்பை வாணலியில் லேசாக சூடு வர வறுத்து (குழைந்து விடாமல் இருப்பதற்காக) தண்ணீரில் அரை மணி நேரம் ஊற விடவும். இந்த சுண்டல் உதிர் உதிராக வருவதற்காக இட்லி தட்டில் ஆவியில் வேக விட பூவாக மலர்ந்து விடும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதில் வெந்து உதிர்உதிராக இருக்கும் பயத்தம் பருப்பை சேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கிளறவும். கடைசியாக துருவிய இஞ்சி, தேங்காய்த்துருவல் சேர்த்து அரை ஸ்பூன் சர்க்கரையும் போட்டு கிளறி இறக்க ருசியான, மணமான சுண்டல் தயார். 

நவராத்திரி ஒன்பது நாட்களும் சலிப்பில்லாமல், உடலுக்கு வலுசேர்க்கும் புரதச்சத்து நிறைந்த 9 வகையான சுண்டல்களைச் சரியான பதத்துடன் சுவையாகச் செய்து அம்பிகைக்கு நைவேத்தியம் படைக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com