அடடா! புளிப்பு, துவர்ப்பு, காரம் - எல்லாம் ஒரே ரசத்துல! - இது என்ன மேஜிக்?

நெல்லிக்காய் ரசம்
நெல்லிக்காய் ரசம்
Published on

சில வீட்ல ஒரு நாளைக்கு ரசம் இல்லன்னா,  அன்னைக்கு சாப்பாடு உள்ள இறங்காது. அந்த ரசத்தோட சுவைய, இன்னும் ஆரோக்கியமா, வித்தியாசமா ஒரு காய் சேர்த்து செஞ்சா எப்படி இருக்கும்? அதுதான் இந்த நெல்லிக்காய் ரசம். நெல்லிக்காய்ல அவ்வளவு சத்து இருக்கு, குறிப்பா விட்டமின் 'சி' சத்து ரொம்ப அதிகம். ஆனா, துவர்ப்பு சுவை காரணமா நிறைய பேரு அதை சாப்பிட யோசிப்பாங்க. நெல்லிக்காயை இந்த மாதிரி ரசமா செஞ்சு பாருங்க, நிச்சயம் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க, இந்த சத்தான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய் - 4

  • புளி - ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு 

  • தக்காளி - 1

  • ரசப்பொடி - 1 டீஸ்பூன்

  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

  • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் 

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - 2 கப்

  • நெய் அல்லது எண்ணெய் - 1 டீஸ்பூன்

  • கடுகு - கால் டீஸ்பூன்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

  • காய்ந்த மிளகாய் - 2

  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

  • கொத்தமல்லி இலை - கொஞ்சம் 

செய்முறை:

முதல்ல, அடுப்புல ஒரு பாத்திரத்த வச்சு, அதுல ரெண்டு கப் தண்ணீர் ஊத்தி, நெல்லிக்காயை சேர்த்து ஒரு 5-7 நிமிஷம் வேக விடுங்க. நெல்லிக்காய் நல்லா வெந்ததும், அடுப்ப அணைச்சிட்டு, ஆற விடுங்க. ஆறினதும், நெல்லிக்காயை கையாலயே மசிச்சு, கொட்டைய எடுத்துட்டு, சதைப்பகுதியை மட்டும் எடுத்து வச்சுக்கோங்க.

இதையும் படியுங்கள்:
இந்த ஒரு பொருள் போதும்! உங்கள் சாம்பார், ரசம் சுவையே மாறிப்போகும்!
நெல்லிக்காய் ரசம்

இப்போ அதே பாத்திரத்துல, மசிச்ச நெல்லிக்காய், நறுக்கின தக்காளி, ரசப்பொடி, மஞ்சள் தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு எல்லாத்தையும் சேருங்க. புளி சேர்க்கிறதா இருந்தா, அதையும் கரைச்சு ஊத்திக்கலாம். எல்லாத்தையும் ஒரு கலந்து விட்டு, ஒரு 5 நிமிஷம் கொதிக்க விடுங்க. ரசத்த ரொம்ப நேரம் கொதிக்க விடக்கூடாது.

இப்போ ஒரு சின்ன கடாயில நெய் அல்லது எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் போட்டு பொரிய விடுங்க. கடுகு பொரிஞ்சதும் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து லேசா வதக்குங்க.

இந்த தாளிப்ப, கொதிச்சுக்கிட்டு இருக்கிற ரசத்துல ஊத்தி, உடனே மூடி போடுங்க. அப்போதான் ரசத்தோட மணம் வெளிய போகாம இருக்கும். கடைசியா நறுக்கின கொத்தமல்லி இலை தூவி, கலந்து விட்டு அடுப்ப அணைச்சிடுங்க.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கை நெல்லிக்காய் மாதிரி! இந்த ரகசியம் தெரிஞ்சா இனி எல்லாமே இனிக்கும்!
நெல்லிக்காய் ரசம்

அவ்வளவுதான் மணமணக்கும், சுவையான, சத்தான நெல்லிக்காய் ரசம் ரெடி. இதுல நெல்லிக்காயோட துவர்ப்பு, தக்காளியோட புளிப்பு, மிளகோட காரம்னு ஒரு வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும். இதை சூடான சாதம் கூட நெய் விட்டு சாப்பிட்டா ரொம்பவே அருமையா இருக்கும். நெல்லிக்காய் சாப்பிட மாட்டேன்னு சொல்றவங்களுக்கும் இது ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ். நீங்களும் உங்க வீட்ல கண்டிப்பா இந்த ரசத்த ட்ரை பண்ணி பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com