புதிய சுவையில் ரவை ஊத்தப்பம் மற்றும் சைடிஷ் கேரட் சட்னி!

tasty recipes
special tasty recipes
Published on

ரவை உருளைக்கிழங்கு ஊத்தப்பம்:

இதை ரொம்ப ஈஸியா செய்யலாம். பத்து நிமிஷத்துல ஆயிடும். அதே சமயத்துல சுவையாகவும் இருக்கும். காலை வேளையில் டிபன் என்ன பண்றது என்ன பண்றது என்று யோசிக்கும்போது நம்ம வீட்டில் எப்போதுமே ரவையும் இருக்கும உருளைக்கிழங்கும் இருக்கும். டக்குனு இத செஞ்சிடலாம் சரி வாங்க பார்க்கலாம்..

முதலில் மிக்ஸியில் ஒரு கப் ரவை மற்றும் ஒரு உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி போட்டுக்கொள்ளவும். அத்துடன் 3 காய்ந்த மிளகாயையும் போடவும் எல்லாவற்றையும் நன்றாக மையும் அளவிற்கு அரைக்கவும். இப்போது இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஒரு கால் கப் தயிரையும் சேர்த்து கலக்கவும். இப்போது இந்த கலவையோடு துருவிய கேரட், பொடி பொடியாக நறுக்கிய கப்சிகம் வெங்காயம் போன்றவற்றையும் போட்டு கலக்கவும். ஒரு பத்து நிமிடத்திற்கு இந்த மாவை மூடிவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி அதிகமாக குண்டாகவும் இல்லாமல் மெல்லியதாகவும் இல்லாமல் மீடியமான அளவில் தோசையை ஊற்றி இரண்டு பக்கமும் எண்ணெய் ஊற்றி பொன் நிறமாக வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் சமயத்தில் வாணலியை மூடிவைக்கவும். உங்களுடைய ரவை உருளைக் கிழங்கு ஊத்தப்பம் ரெடி.... அப்படி உங்களுக்கு ஊத்தப்பமாக சாப்பிட விருப்பமில்லை என்றால் தோசை கல்லில் ஊற்றி தோசையாகவும் வார்த்து சாப்பிடலாம்.

ஒரு கப் ரவையில் நான்கைந்து ஊத்தப்பம் வரும். நீங்கள் உங்களின் தேவைகேற்றவாறு அளவை அதிகரித்து கொள்ளவும். ரேஷியோவை நினைவில் வைத்து கொள்ளவும். ஒரு கப் ரவைக்கு ஒரு உருளைகிழங்கு, கால் கப் தயிர் என்ற விகிதத்தில் அளவை அதிகரித்து கொள்ளவும்.

சரி இப்போது இதற்கு தொட்டுக்கொள்வதற்கு கேரட் சட்னி எப்படி செய்கிறது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
டயட்டில் இருப்பவரா நீங்க? எண்ணெய் இல்லாத சுவையான ஓட்ஸ் அடை ரகசியம்!
tasty recipes

கேரட் சட்னி:

இரண்டு கேரட்டை முதலில் தோல் சீவி துருவிக் கொள்ளவும். இரண்டு தக்காளி மற்றும் ஒரு வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயத்தையும் தக்காளியும் போட்டு வதக்கவும் இத்துடன் இரண்டு அல்லது மூன்று காய்ந்த மிளகாய், இரண்டு பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி போட்டு வதக்கவும்.

தக்காளி வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு துருவிய கேரட்டையும் போட்டு வதக்கவும். நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பிறகு இவை எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு தேவையான அளவு உப்பையும் பெருங்காயத் தூளையும் போட்டு கலக்கவும். கடைசியாக கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியின் மேல் கொட்டவும். அவ்வளவுதாங்க, கேரட் சட்னி ரெடி.. ரொம்ப சுவையா இருக்குங்க இந்த சட்னி, ட்ரை பண்ணி பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com