மொறுமொறுப்பான கச்சோரி முதல் குளிர்ந்த தண்டாய் வரை: வீட்டிலேயே வடஇந்திய ஸ்நாக்ஸ் செய்யும் வழிமுறைகள்!

கச்சோரி, தண்டாய் மற்றும் குஜியா வீட்டிலேயே எளிய முறையில் செய்ய சூப்பர் வழிகாட்டல்.
ஸ்நாக்ஸ் ரெசிபி
ஸ்நாக்ஸ் ரெசிபிGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

1. கஸ்தா கச்சோரி (Khasta Kachori):

மொறுமொறுப்பான காரசாரமான கச்சோரி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

மாவு செய்ய:

மைதா -1 கப்

ஓமம் -1/2 ஸ்பூன்

எண்ணெய் (அ) நெய் -2 ஸ்பூன்

உப்பு -தேவையானது

மசாலா பூரணம் செய்ய:

பாசிப்பருப்பு -அரை கப்

சீரகம் -1 ஸ்பூன்

சோம்பு -1/2 ஸ்பூன்

தனியாத் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தலா -1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் -சிறிதளவு

கடலை மாவு -2 ஸ்பூன்

செய்முறை:

மைதா, ஓமம், உப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து தண்ணீர் தெளித்து சற்று கெட்டியான மாவாகப் பிசைந்து வைக்கவும்.

பாசிப்பருப்பை‌ 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், சோம்பு, பெருங்காயம் தாளித்து, கடலை மாவு மற்றும் அனைத்து மசாலாத் தூள்களையும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வதக்கவும். பின்பு அரைத்த பாசிப் பருப்பை சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கி ஆறவிடவும்.

மாவை சிறிய வட்டங்களாக தேய்த்து, நடுவில் பருப்பு மசாலாவை வைத்து நன்றாக முடி, கைகளால் லேசாக அழுத்தவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மிதமான தீயில் கச்சோரிகளைப் போட்டு அவை நன்கு பொன்னிறமாகும் வரை மெதுவாக பொரித்தெடுக்கவும்.

இந்தக் கச்சோரிகளை காரமான புதினா சட்னி மற்றும் இனிப்பு பேரிச்சம்பழ சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

2. தண்டாய் (Thandai):

தேவையான பொருட்கள்:

பாதாம் -15

முந்திரி -6

பிஸ்தா பருப்புகள் -6

முலாம்பழ விதைகள் -1 ஸ்பூன்

பாப்பி விதைகள் -1 ஸ்பூன்

பெருஞ்சீரகம் -1 ஸ்பூன்

கருப்பு மிளகு -1/2 ஸ்பூன்

ஏலக்காய் -2

உலர்ந்த ரோஜா இதழ்கள் -சிறிது

பால் -4 கப்

சர்க்கரை -தேவையான அளவு

குங்குமப்பூ -ஒரு சிட்டிகை

ரோஸ் வாட்டர் (விருப்பப்பட்டால்) -1 ஸ்பூன்

ஸ்நாக்ஸ் ரெசிபி
ஸ்நாக்ஸ் ரெசிபிGemini image

செய்முறை:

பாதாம், முந்திரி, பிஸ்தா, முலாம்பழம் மற்றும் பாப்பி விதைகள், மிளகு, பெருஞ்சீரகம், ஏலக்காய் மற்றும் ரோஜா இதழ்களை சுமார் 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறவைத்த பொருட்களை நன்றாக வடிகட்டி மிக்ஸியில் சேர்த்து சிறிது பால் கலந்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

பாலை நன்கு கொதிக்கவைத்து பின் அதில் சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் அரைத்து வைத்துள்ள தண்டாய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். பால் கலவையை நன்கு ஆறவைத்து பின்பு குறைந்தது 2 மணி நேரமாவது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

மசாலாக்களின் சுவை பாலில் முழுமையாக இறங்கி மிகவும் ருசியாக இருக்கும். இந்த நன்கு குளிர்ந்த தண்டாயை வடிகட்டியோ அல்லது வடிகட்டாமலோ கிளாஸில் ஊற்றி மேலாக நறுக்கிய பாதாம், பிஸ்தா துண்டுகள் மற்றும் சிறிது ரோஜா இதழ்கள் தூவி பரிமாறவும்.

3. குஜியா (Gujiya):

மேல் மாவு செய்வதற்கு:

மைதா -2 கப்

உப்பு -ஒரு சிட்டிகை

நெய் -4 ஸ்பூன்

வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் பால் -தேவையான அளவு

பூரணம் செய்வதற்கு:

கோவா -1 கப்

பொடித்த சர்க்கரை -3/4 கப்

வறுத்த ரவை -2 ஸ்பூன்

நறுக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா போன்ற உலர் பழங்கள் தலா -2 ஸ்பூன்

உலர்ந்த தேங்காய்த் துருவல் -1/4 கப்

ஏலக்காய் தூள் -1 ஸ்பூன்

பொரிக்க எண்ணெய்-தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்திற்கு சுடச்சுட மொறுமொறு பக்கோடா: எண்ணெய் குடிக்காமல் செய்ய இதோ வழி!
ஸ்நாக்ஸ் ரெசிபி

செய்முறை:

மேல் மாவு செய்வதற்கு மைதாவில் ஒரு சிட்டிகை உப்பு, சிறிது நெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அல்லது பால் சேர்த்து சப்பாத்தி மாவைவிட சற்று கெட்டியாக பிசையவும். மாவை ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் ஊறவிடவும்.

பூரணம் செய்வதற்கு ஒரு வாணலியில் கோவாவை உதிர்த்து சேர்த்து அது பொன்னிறமாகும் வரை குறைந்த தீயில் வறுக்கவும். ஆறிய பின்பு அதில் பொடித்த சர்க்கரை, வறுத்த ரவை, ஏலக்காய்தூள் மற்றும் நறுக்கிய உலர் பழங்களை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சிறு வட்ட வடிவில் தேய்க்கவும். நடுவில் 2 ஸ்பூன் பூரணத்தை வைத்து, ஓரங்களில் தண்ணீர் தொட்டு தடவவும். மாவை மடித்து ஓரங்களை அழுத்தி அல்லது குஜியை அச்சுகளைப் பயன்படுத்தி மூடி, ஓரங்களை அழகுபடுத்தவும். மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்ததும் குஜியாக்களை நான்கு நான்காகப் போட்டு குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
நாவில் கரையும் தித்திப்பு அடை: பலாப்பழம் மற்றும் ராகி அடை ஸ்பெஷல்!
ஸ்நாக்ஸ் ரெசிபி

குறிப்பு: விருப்பப்பட்டால் பொரித்த குஜியாக்களை ஒரு கம்பி பதம் கொண்ட சர்க்கரைப்பாகில் நனைத்து எடுக்கலாம். மேலே பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா துண்டுகளைத் தூவி அலங்கரிக்கலாம். சுவையான குஜியா தயார்.

இந்த எளிய செய்முறை வழிகாட்டலைப் பின்பற்றுவதன் மூலம், ஹோட்டல் சுவையில் மொறுமொறுப்பான கச்சோரி, குளிர்ந்த தண்டாய் மற்றும் சுவையான குஜியாவை உங்கள் வீட்டிலேயே மிகக் குறைந்த நேரத்தில் ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து அசத்த முடியும்.

logo
Kalki Online
kalkionline.com