சத்தான மக்கானா பாயாசம் ஈஸியா செய்யலாம்!

Makhana Payasam
Makhana Payasam
Published on

இப்பலாம் நிறைய பேரு சத்தான ஸ்நாக்ஸ்னு மக்கானா நிறைய சாப்பிடுறாங்க. இது உடம்புக்கும் ரொம்ப நல்லது. வெறும் ஸ்நாக்ஸா மட்டும் இல்லாம, இந்த மக்கானாவ வச்சு ஒரு சூப்பரான ஸ்வீட் கூட செய்யலாம். அதுதான் மக்கானா பாயாசம். இத செய்யறதும் ரொம்ப ஈஸி. திடீர்னு ஏதாவது ஸ்வீட் சாப்பிடணும்னு தோணுனா, இல்லன்னா ஏதாவது விசேஷத்துக்கு டக்குனு பாயாசம் செய்யணும்னா இந்த மக்கானா பாயாசம் ஒரு அருமையான சாய்ஸ். வாங்க, இந்த சத்தான பாயாசம் எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • மக்கானா - 1 கப்

  • பால் - 2 கப்

  • சர்க்கரை அல்லது வெல்லம் - கால் கப்

  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்

  • முந்திரி, பாதாம், பிஸ்தா - கொஞ்சம்

  • திராட்சை - கொஞ்சம்

  • குங்குமப்பூ - 2-3 இழைகள்

செய்முறை:

ஒரு கடாய அடுப்புல வச்சு ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊத்தி சூடு பண்ணுங்க. நெய் சூடானதும் மக்கானாவ போட்டு மிதமான தீயில நல்லா மொறு மொறுன்னு ஆகுற வரைக்கும் வறுத்து எடுங்க. வறுத்த மக்கானால இருந்து கொஞ்சத்த எடுத்து அலங்கரிக்க வச்சுட்டு, மீதிய லேசா உடைச்சு இல்லனா அப்படியே வச்சுக்கோங்க.

இப்போ அதே கடாயில இல்லனா வேற பாத்திரத்துல பாலை ஊத்தி நல்லா கொதிக்க விடுங்க. பால் கொதிக்க ஆரம்பிச்சதும் நம்ம வறுத்து வச்ச மக்கானாவ அதுல சேருங்க. 

அடுப்பை சிம்ல வச்சுட்டு, மக்கானா லேசா சாஃப்ட் ஆகி, பால் கொஞ்சம் கெட்டியாகற வரைக்கும் ஒரு 5-7 நிமிஷம் கொதிக்க விடுங்க. இடையில கிளறி விடுங்க.

இப்போ தேவையான அளவு சர்க்கரை இல்லனா வெல்லம் சேருங்க. கூடவே ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து சர்க்கரை/வெல்லம் கரையற வரைக்கும் நல்லா கலந்து விடுங்க.

அடுத்ததா ஒரு சின்ன கடாயில மீதி இருக்கிற ஒரு டேபிள் ஸ்பூன் நெய்ய ஊத்தி சூடு பண்ணுங்க. நெய் சூடானதும் நறுக்கின முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து பொன்னிறமா வறுத்து எடுங்க. கடைசியா திராட்சைய சேர்த்து அது உப்பி வர்ற வரைக்கும் வறுத்து அடுப்பை அணைச்சிடுங்க.

இதையும் படியுங்கள்:
வேர்க்கடலை Vs மக்கானா: ஆரோக்கியத்திற்கும் உடல் எடை குறைப்புக்கும் எது சிறந்தது?
Makhana Payasam

வறுத்த நட்ஸ், திராட்சைய பாயாசத்துல கொட்டி நல்லா கலந்து விடுங்க. ஒரு நிமிஷம் கொதிச்சா போதும். அடுப்பை அணைச்சிடுங்க.

அவ்வளவுதான், சத்தான ரொம்பவே சுவையான மக்கானா பாயாசம் ரெடி. இத சூடாவும் சாப்பிடலாம், பிரிட்ஜ்ல வச்சு சில்லுன்னு கூட சாப்பிடலாம். ரொம்ப குயிக்கா செஞ்சுடலாம். மக்கானாவோட சத்தும் கிடைக்கும், பாயாசம் சாப்பிட்ட திருப்தியும் இருக்கும். கண்டிப்பா இந்த ஈஸியான ரெசிபிய உங்க வீட்ல செஞ்சு பார்த்து அசத்துங்க. 

இதையும் படியுங்கள்:
கோடைக்கு இதமாய் பூசணிக்காய் மோர்க்குழம்பு - மக்கானா ப்ரூட் கஸ்டர்ட் ரெசிபிஸ்!
Makhana Payasam

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com