கேரளாவின் பாரம்பரிய சுவை: பாலடை பாயசம் (Paaladai Payasam) செய்வது எப்படி?


Traditional taste of Kerala
Paaladai Payasam
Published on

பாயசம்னாலே அது ஒரு தனி ருசிதான். நம்ம ஊர்ல சேமியா, பருப்பு பாயசம்னு விதவிதமா செய்வோம். ஆனா கேரளாவோட ஸ்பெஷல் பாயசம் இந்த பாலடை பாயசம். இதை ஒரு தடவை டேஸ்ட் பண்ணிட்டீங்கன்னா, திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க. ரொம்ப சுலபமா, ஆனா பயங்கர டேஸ்ட்டா, கேரளா ஸ்டைலில் இந்த பாலடை பாயசம் எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள் (Paaladai Payasam)

  • அடைப் பாயாசம் (ரெடிமேட்)- 1 கப்

  • பால் - 4 கப் (முழு கொழுப்புள்ள பால் சிறந்தது)

  • சர்க்கரை - 1 கப்

  • ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • முந்திரி - 10 -15

  • திராட்சை - 10 -15

  • தண்ணீர் - அடை வேக வைக்க தேவையான அளவு

செய்முறை;

அடுப்புல ஒரு அகலமான பாத்திரத்த வச்சு, தேவையான அளவு தண்ணிய ஊத்தி நல்லா கொதிக்கவிடுங்க. தண்ணி கொதிக்க ஆரம்பிச்சதும், ஒரு கப் அடைப் பாயாசத்த அதுல சேருங்க. 

அடை நல்லா சாஃப்டா, வேகற வரைக்கும் கொதிக்க விடுங்க. அடை வெந்ததும், தண்ணிய வடிச்சிட்டு, ஒரு தடவை குளிர்ந்த நீர்ல அலசி தனியா வச்சுக்கோங்க. இப்படி செய்யறதுனால அடை ஒட்டாம உதிரி உதிரியா இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஹோட்டல் சுவையில் பனீர் பட்டர் மசாலா, இனிப்புடன் பால் பூரி!

Traditional taste of Kerala

இப்போ ஒரு அடிகனமான பாத்திரத்த அடுப்புல வச்சு, 4 கப் பால ஊத்துங்க. பால் நல்லா கொதிக்க ஆரம்பிச்சதும், அடுப்ப சிம்ல வச்சுட்டு, நம்ம வேக வச்சிருக்க அடைய சேருங்க. அடையோட பாலை ஒரு 15-20 நிமிஷம் நல்லா கொதிக்க விடுங்க. இடையில இடையில கிளறிட்டே இருங்க, அப்போதான் அடி பிடிக்காம இருக்கும். பால் கொஞ்சம் கெட்டியாகி, அடையில நல்லா கலக்கும். இதுதான் இந்த பாயாசத்துக்கு டேஸ்ட்டே.

பால் நல்லா கெட்டியாகி, அடை கலந்ததும், ஒரு கப் சர்க்கரைய சேருங்க. சர்க்கரை கரைஞ்சு, பாயாசம் ஒரு பளபளப்பான பதம் வர்ற வரைக்கும் நல்லா கிளறி விடுங்க. கடைசியா ஏலக்காய் தூள் சேருங்க.

இப்போ ஒரு சின்ன கடாயில ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊத்தி சூடு பண்ணுங்க. நெய் சூடானதும் முந்திரிய போட்டு பொன்னிறமா வறுத்து பாயாசத்துல சேருங்க. அதே நெய்யில திராட்சைய போட்டு அது உப்பி வர்ற வரைக்கும் வறுத்து பாயாசத்துல சேருங்க. நல்லா கலந்து விடுங்க.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி சுண்டல்: சமையல் குறிப்புகளும், சுண்டல் டிப்ஸ்களும்!!

Traditional taste of Kerala

வீடே மணக்கும் கேரளா ஸ்பெஷல் பாலடை பாயாசம் தயார். இதை சூடாவும் சாப்பிடலாம், பிரிட்ஜ்ல வச்சு சில்லுன்னு கூட சாப்பிடலாம். விசேஷங்களுக்கும், பண்டிகைக்கும், ஏன் சும்மா ஒரு இனிப்பு சாப்பிடணும்னு தோணும் போதும் இந்த பாயாசத்த செஞ்சு அசத்தலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com