முக்கனிகளின் மகத்துவம்: பலாக்காயை வைத்து விதவிதமாகச் சமைக்கலாம் வாங்க!

pala-moosu-recipes
pala-moosu-recipes
Updated on

லாக்காயை  சுத்தம் பண்ணி மேற்பகுதியை நீக்கிவிட்டு உள்ளே உள்ள பகுதியை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே சமையலுக்கு உதவும்.

பலா மோஸ் பொரியல்

தேவையானவை: 

பலாக்காய் -1-2,தேங்காய்-1/2கப், மஞ்சள் தூள் -1/2டீஸ்பூன்,கரம் மசாலா தூள்-1/2 டீஸ்பூன், சோம்பு பொடி-1டீஸ்பூன், உப்பு, மிளகாய்த்தூள் -1டீஸ்பூன், பெ வெங்காயம் -2, கருவேப்பிலை, உப்பு -தேவைக்கு.

செய்முறை: 

பலாக்காயை சுத்தம் செய்து அதை சின்ன‌சின்ன துண்டுகளாக நறுக்கி குக்கரில் ‌இட்டு ஒரு விசில் வரும் வரை வைக்கவும். தேங்காயுடன்மஞ்சள் தூள்,சோம்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொரிந்ததும் அரிந்த வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் வெந்த பலா மோஸ் துண்டுகளை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்ததை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்துவிடவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் கருவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான பலா மோஸ் பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.

பலா மோஸ் கோலா உருண்டை

தேவையானவை: 

பலாமோஸ்-2, பொட்டுக்கடலை -1கப், மிளகாய் தூள் -1டீஸ்பூன், உப்பு, பச்சை மிளகாய் -2, வெங்காயம் நறுக்கியது 1/2கப், கருவேப்பிலை, கரம் மசாலா தூள் -1டீஸ்பூன், தேங்காய் துருவல் -1டேபிள் ஸ்பூன்.இஞ்சி, பூண்டு விழுது -2டீஸ்பூன். மஞ்சள் தூள் -1டீஸ்பூன்.

செய்முறை: 

பலாமோஸை வேகவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்றி எடுத்துக் கொள்ளவும்.பொட்டுக்கடலையை பவுடராக்கி  கொள்ளவும். பலாமூஸ் அடித்ததுடன், பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இதனுடன் அரிந்த வெங்காயம்,இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் துருவல், கருவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு காய விடவும்.பலாமோஸ் மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி காயும் எண்ணையில் போட்டு நன்கு வெந்ததும் திருப்பி விடவும்.இருபுறமும் நன்கு சிவந்து ரோஸ்ட் ஆனதும் எடுக்கவும்.

வெளியே கிரிஸ்பாக, உள்ளே சாஃப்ட் ஆக இருக்கும் இந்த பலா மோஸ் கோலா உருண்டை சாப்பிட சூப்பராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கான ஹெல்தி ஸ்நாக்ஸ்: இதோ 3 வகை உருண்டைகளின் செய்முறை!
pala-moosu-recipes

பலா மோஸ் குருமா

தேவையானவை: 

பலாமோஸ்-2, தேங்காய் துருவல் -2கப்,கசகசா, முந்திரி -4, பொட்டுக்கடலை -2டேபிள் ஸ்பூன்,அரிந்த வெங்காயம் -1கப்,ப ச்சை மிளகாய் -2,கரம் மசாலா தூள் -1டீஸ்பூன், உப்பு,தாளிக்க-பட்டை-2,கிராம்பு-2,பிரிஞ்சி இலை-2, ஏலக்காய் -2,மல்லி,புதினா கொஞ்சம்., குழம்பு தூள் -2டேபிள் ஸ்பூன், கறிமசால்பொடி-2டீஸ்பூன்.

செய்முறை:

பலாமோஸை வேகவைத்து சின்ன சின்ன துண்டுகளாக அரிந்து வைக்கவும்.உருளைக்கிழங்கை  வேகவைத்து தோலுரித்து சின்னதாக கட் பண்ணி வைக்கவும். தேங்காய், கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை தாளித்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் கரம்‌ மசாலாதூள் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் வெந்த பலாக்காய் துண்டுகள்,வெந்த உ கிழங்கு துண்டுகளை சேர்த்து வதக்கவும்.குழம்புத்தூள்,கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து உப்பு போட்டு தேவைக்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு ஒரு விசில் வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

சற்று நேரம் கழித்து மூடியை திறந்து உப்பு சரி பார்த்து விட்டு மல்லி, புதினாவை தூவி இறக்கவும்.

இட்லி, சப்பாத்தி, நான் கூட சைட் டிஷ் ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்.

பலா மோஸ் பிரியாணி 

தேவையானவை: 

பலாமோஸ்-2, சீரக சம்பா அரிசி -3கப், பிரியாணி மசாலா தூள் -2டேபிள் ஸ்பூன், அரிந்த வெங்காயம் -2கப், தக்காளி அரிந்தது-1கப்மல்லி, புதினா, தேங்காய் பால் -3கப்உப்பு, மிளகாய் தூள் -1டீஸ்பூன், பச்சை மிளகாய் -3, தாளிக்க,பட்டை,கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை-2, மராட்டி மொக்கு, அன்னாசி பூ-2, நெய்-2டேபிள் ஸ்பூன், எண்ணெய் -1டேபிள் ஸ்பூன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது -2டேபிள் ஸ்பூன், தயிர்-1டேபிள் ஸ்பூன்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே செய்யலாம் கமகமக்கும் கோயில் பிரசாதம்: அக்கார வடிசல் & ஜீரா ரெசிபிகள்!
pala-moosu-recipes

செய்முறை: 

சீரக சம்பா அரிசியை தேங்காய் பாலில் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, ப ச்சை மிளகாயை அரிந்து வைக்கவும்.இஞ்சி பூண்டு விழுது அரைத்து கொள்ளவும். பலா மோஸை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை தாளித்து பின் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரிந்த வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்கு கிளறிவிடவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் பிரியாணி மசாலா தூள், தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் பலா மோஸ் அரிந்ததை சேர்த்து கலந்து தேங்காய் பால் விடவும்.

உப்பு போட்டு கொதித்ததும் ஊறிய அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை குக்கரில் இரண்டு விசில் ஹையில் வைத்து ஐந்து நிமிடம் சிம் ல் வைத்து பின் அடுப்பை அணைத்துவிடவும். சற்று விசில் அடங்கியதும் திறந்து கிளறி விட்டு பரிமாற சுவையான பலாக்காய்,பலா மோஸ் பிரியாணி  சாப்பிட நன்றாக இருக்கும்.

இவை யாவும் நான் வழக்கமாக வீட்டில் செய்து கொடுத்து சுவைப்பது. சீசன் வந்து விட்டாலே முக்கனிகளில் சமையல் செய்வதே மகிழ்ச்சி அளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com