புதிய சுவையில் பனீர் கிரேவி: ஈஸியான சமையல் குறிப்பு இதோ..!

Easy recipes tamil
Paneer gravy
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

துவரை பனீரில் எத்தனையோ விதவிதமான ரெசிபி செய்து நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் பனீரில் டிக்கா, பட்டர் மசாலா, குருமா போன்றவற்றைத்தான் அதிகம் செய்வார்கள். ஆனால் ஒருமுறை சற்று வித்தியாசமாக பன்னீர் பயன்படுத்தி கிரேவி செய்து பாருங்கள். இதன் சுவை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

பனீர் - 100 கிராம் 

இஞ்சி - சிறிதளவு

கசகசா - 1 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 3

வெண்ணெய் - 2 ஸ்பூன் 

பால் - 1 கப்

முந்திரி - 5

பிரியாணி இலை - 2

எண்ணெய் - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 2

மிளகாய் பொடி - 1 ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸி ஜாரில் இஞ்சி, மிளகாய், முந்திரி பருப்பு, கசகசா சேர்த்து நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து பனீர் துண்டுகளை பொன்னிறமாக வறுக்க வேண்டும். வருத்த பனீர் துண்டுகளை பாலில் சேர்த்து ஊறவைக்கவும். 

இதைத்தொடர்ந்து மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் அரைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாகக்கிளறி, உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி சேர்த்து மீண்டும் நன்றாகக்கிளற வேண்டும். 

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய சுவையில் ஆரோக்கியமான முருங்கைப் பூ நூடுல்ஸ்!
Easy recipes tamil

இறுதியில் பச்சை வாடை போனதும் பாலில் ஊற வைத்துள்ள பனீருடன் சேர்த்து மொத்தமாக இந்த கலவையில் ஊற்றி நன்றாக வதக்கி வேகவைத்தால், முற்றிலும் புதுமையான பனீர் கிரேவி தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவாகும். ஒருமுறை இதை வீட்டில் முயற்சித்துப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com