எலும்புகள் வலுவாக வேண்டுமா? இதோ புரோட்டீன் நிறைந்த 'பன்னீர் ஸ்டஃப்டு ராகி தோசை'!

stuffed-ragi-dosa
stuffed-ragi-dosa
Updated on

ன்னீர் உடலுக்கு நல்ல புரதமும் கால்சியமும் தருகிறது; எலும்புகளும் தசைகளும் பலமாகும். ராகி இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம்; செரிமானம் நல்லது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பன்னீர் ஸ்டஃப்டு ராகி தோசை

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 1 கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

மிளகாய் தூள் – ஒரு சிட்டிகை

கரம் மசாலா தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவைக்கேற்ப

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

கருவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

மாவுக்கு:

பச்சரிசி – 1 டம்ளர்

ராகி மாவு – 2 கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

தயிர் – ½ கப்

கொத்தமல்லி இலை – பொடியாக நறுக்கியது (சிறிதளவு)

செய்முறை:

முதலில் பன்னீரை துருவி அல்லது பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் (அல்லது நெய்) விட்டு, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். பின்னர் கருவேப்பிலை சேர்க்கவும்.

அதனுடன் நறுக்கிய பன்னீரை சேர்த்து வதக்கவும்.

வதக்கும்போது மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

பச்சை வாசனை போனதும், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கிவைக்கவும்.

பச்சரிசியை கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். வெந்தயத்தையும் தனியாக ஊறவைக்கவும்.

பின்னர் மிக்ஸியில் பச்சரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவில் தயிர் சேர்த்து கலக்கவும். அதன் பிறகு ராகி மாவை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
ஆப்பிரிக்கர்களின் ஆரோக்கிய ரகசியம் இந்த 5 தேங்காய் உணவுகளில் தான் ஒளிந்திருக்கிறது!
stuffed-ragi-dosa

அடுப்பில் மிதமான தீயில் தோசைக்கல் வைத்து, சிறிது நெய் தடவவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசையாக பரப்பவும்.

அதன் மேல் வதக்கிய பன்னீர் கலவையை வைத்து ஸ்டஃப் செய்து மூடி வைக்கவும். சுமார் 5 நிமிடங்கள் கழித்து தோசையை அரை வட்டமாக மடித்து எடுத்தால் சுவையான பன்னீர் ஸ்டஃப்டு ராகி தோசை தயார்.

பரிமாற: இந்த ஸ்டஃப்டு ராகி தோசையை தேங்காய் சட்னி மற்றும் காரச் சட்னியுடன் பரிமாறலாம்.

logo
Kalki Online
kalkionline.com