நாக்கில் எச்சில் ஊறும் காரம்... பாண்டிச்சேரி ஸ்டைல் ஸ்பைசி கொரியன் நூடுல்ஸ் ரகசியம் இதோ!

Pondicherry Noodles
Pondicherry Noodles
Updated on

பாண்டிச்சேரி கஃபேக்களில் சமீப காலமாக உணவுப் பிரியர்களை அதிகம் ஈர்க்கும் ஒரு உணவு என்றால், அது நாக்கைச் சுண்டியிழுக்கும் 'காரசாரமான கொரியன் நூடுல்ஸ்' தான். கொரியன் நாடகங்களின் மோகத்தால் பிரபலமடைந்த இந்த நூடுல்ஸ், புதுச்சேரியின் தனித்துவமான சூழலோடு பரிமாறப்படும்போது அதன் ருசியே தனிதான். 

அதே கஃபே ஸ்டைல், காரசாரமான கொரியன் நூடுல்ஸை நம் வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு எப்படி அசத்தலாகச் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • நூடுல்ஸ் - 1 பாக்கெட்

  • பூண்டு - 6 பற்கள் 

  • சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

  • ரெட் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

  • தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்

  • வினிகர் - 1 டீஸ்பூன்

  • காஷ்மீரி மிளகாய்த் தூள் அல்லது சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்

  • சர்க்கரை அல்லது தேன் - 1/2 டீஸ்பூன்

  • சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

  • ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை! 

எந்த ஒரு நூடுல்ஸ் ரெசிபியாக இருந்தாலும், அதை வேகவைக்கும் பக்குவத்தில்தான் மொத்த சுவையும் அடங்கியுள்ளது. முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தாராளமாகத் தண்ணீர் வைத்து, அதில் சிறிது உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். 

தண்ணீர் நன்கு கொதித்ததும் நூடுல்ஸைச் சேர்த்து, அது 80% வேகும் வரை மட்டும் கொதிக்க விடவும். நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் குழையாமல் இருக்க, வெந்தவுடன் அதை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

புதுச்சேரி ஹோட்டல்களில் கிடைக்கும் அந்தத் தனித்துவமான கொரியன் சுவைக்குக் காரணம், அவர்கள் தயாரிக்கும் ஸ்பெஷல் சாஸ் தான். ஒரு சிறிய கிண்ணத்தில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி கெட்சப், வினிகர், சர்க்கரை மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
எலான் மஸ்க் பயன்படுத்தும் 'தக்காளி' ரகசியம்!
Pondicherry Noodles

தக்காளி கெட்சப் மற்றும் சர்க்கரை சேர்ப்பதால், காரம், புளிப்பு மற்றும் இனிப்பு என மூன்றும் சேர்ந்த ஒரு அட்டகாசமான பேலன்ஸ்டு சுவை உங்களுக்குக் கிடைக்கும். இப்போது அடுப்பில் ஒரு அகலமான கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றுங்கள். கொரியன் உணவுகளுக்குச் சிறிது நல்லெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் அசல் சுவை கிடைக்கும். எண்ணெய் காய்ந்ததும், மிகப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டைப் சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். 

பூண்டின் வாசனை எண்ணெயில் இறங்கியதும், நாம் கலந்து வைத்துள்ள சாஸ் கலவையை ஊற்றி மிதமான தீயில் ஒரு நிமிடம் கொதிக்க விடவும். சாஸ் லேசாகக் கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது, வேகவைத்து வடிகட்டிய நூடுல்ஸை அதில் கொட்டி, சாஸ் எல்லா இடங்களிலும் படும்படி நன்றாகக் கலந்து விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
அவசர சமையலுக்கு: பத்தே நிமிடத்தில் வெந்தய சாதம்!
Pondicherry Noodles

அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்த வெள்ளை எள் மற்றும் பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியனை மேலே தூவி அலங்கரித்தால், ஆவி பறக்கும் புதுச்சேரி ஸ்டைல் கொரியன் நூடுல்ஸ் ரெடி. 

மழை பெய்யும் மாலை நேரங்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ, உங்களுக்குப் பிடித்தமான படத்தைப் பார்த்தபடியே இந்தக் காரசாரமான நூடுல்ஸை ருசிப்பது ஒரு தனி சுகம் தான்.

logo
Kalki Online
kalkionline.com