

தேங்காய் சாதம் ரெசிபி
தேவையான பொருட்கள்:
அரிசி -200 கிராம்
தேங்காய் -அரை மூடி
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
முந்திரி - 20
நெய் -3 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு -அரை ஸ்பூன்
கருவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரை மூடி தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். அரிசி நன்கு ஊறியவுடன் தேவையான அளவு நீர்,உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய்,நெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி சேர்த்து மிதமான வெப்பத்தில் நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இவற்றுடன் நாம் அரைத்து வைத்திருந்த தேங்காய் துருவலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
இவை நன்கு ஆரிய உடன் நாம் வடித்து வைத்திருந்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொடுக்க வேண்டும். சுவையான கமகமக்கும் தேங்காய் சாதம் தயார். தேங்காய் சாதத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வதன் மூலம் அதனுடைய சுவை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
வாழைக்காய், உருளைக்கிழங்கு கிரேவி
இந்த சுவையான தேங்காய் சாதத்திற்கு ஏற்ற சைடு டிஷ் ஆக இந்த வாழைக்காய், உருளைக்கிழங்கு கிரேவி அமைந்திருக்கும்.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 3
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வீட்டு மசால் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
மல்லித்தழை - தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு நன்கு கழுவி சிறிதளவு நீளமாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வாழைக்காய் உருளைக்கிழங்கை சேர்த்து சிறிதளவு பொரிந்து வரும்படி வறுத்து இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்கு பெரிந்து வந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து நாம் நறுக்கி வைத்திருந்த தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, வீட்டு மசால் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு பிரிந்து வந்தவுடன் நாம் வறுத்து வைத்திருந்த உருளைக்கிழங்கு, வாழைக்காய் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் வேகவைக்க வேண்டும். சுவையான கமகமக்கும் உருளைக்கிழங்கு, வாழைக்காய் கிரேவி தயார்.
இந்த வழிகாட்டியின் மூலம் குரு பூர்ணிமாவின் உண்மையான ஆன்மீகத் தன்மையைப் புரிந்துகொண்டு, உங்கள் வாழ்வில் அறிவையும் தெளிவையும் பெற்று, உங்களை நல்வழிப்படுத்தும் குருமார்களுக்குச் சரியான முறையில் நன்றி செலுத்தும் நற்பண்பை அடைவீர்கள்.
இந்த எளிய சமையல் குறிப்பைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குடும்பத்தினருக்குக் கோவில் பிரசாத சுவையில் நறுமணமிக்க தேங்காய் சாதத்தையும், அதற்கு ஏற்ற காரசாரமான தொடுைகறியையும் மிகக் குறைந்த நேரத்தில் சுவையாகச் சமைத்து வழங்கி அசத்த முடியும்.