அரிசியின் பழைய வாசனை, நெடி நீங்க...

gewneral samayal tips in tamil
Samayal tips
Published on

ஜ்ஜி மாவுடன் ஊறவைத்த ஜவ்வரிசியைக் கலந்து செய்தால் பஜ்ஜி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

தக்காளிப் பழங்களை உப்புக் கரைத்த நீரில் போட்டு வைத்திருந்தால் மூன்று, நான்கு நாட்கள் வரை  கெட்டுப்போகாமலிருக்கும்.

குருமாவுக்கு தேங்காய் அரைக்கும்போது, தேங்காயுடன் நான்கு முந்திரி போட்டு அரைத்தால் குருமாவின் ருசியும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

அரிசியில் பூச்சி மற்றும் பழைய வாசனை நீங்க, வேகும்போது ஏலக்காய் அல்லது  சோம்பை நசுக்கிப்போட்டால் ரேஷன் அரிசி  நெடி கூட நீங்கிவிடும்.

ரவா கேசரி, அல்வா போன்ற இனிப்பு வகைகள் செய்யும்போது, கடைசியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது. 

அரிசி களைந்த இரண்டாவது நீரில் சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவற்றை வேகவைத்து எடுக்கும்போது அதன் அரிப்புத்தன்மை அறவே நீங்கிவிடும்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி செய்யும்போது பொட்டுக் கடலை, தேங்காயுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னியின் சுவையே தனிதான்.

இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி வைத்திருந்தால் சீக்கிரம் கெடாது. புதிதாகவே இருக்கும்.

அரிசி களைந்த நீரில் வேகவைத்தாலும், உப்புப்போட்டு  குலுக்கிப் பிழிந்து எடுத்து விட்டு சமைத்தாலும் பாகற்காயின் கசப்புத் தன்மை நீங்கிவிடும்.

டீத்தூள் போட்டு கொதிக்க வைக்கும்போது, அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால் பாத்திரத்தில் கறைபடியாது.

தோசைமாவு, இட்லிமாவு புளித்துவிட்டால் அதில் ஒரு டம்ளர் பால் விட்டால் போதும். புளிப்புத்தன்மை குறைந்துவிடும்.

அவ்வப்போது மிக்ஸி ஜாரில் கைப்பிடி அளவு கல் உப்பைப் போட்டு மிக்ஸியைக் கழுவிவிட்டால் பிளேடு முனைகள் கூராகிவிடும்.

இதையும் படியுங்கள்:
காஷ்மீரி அனார்தனா சட்னி மற்றும் வட இந்திய பியாஸ் சட்னி செய்யலாம் வாங்க!
gewneral samayal tips in tamil

கடலைப்பருப்பு போளி செய்யும்போது...

வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால், கூட்டுகறிகள் செய்து இறக்கும்போது லேசாக தூவிவிட்டால் வாசனை தூக்கலாக இருக்கும்.

எந்த வகை கேசரி செய்தாலும் மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை அள்ளும்.

கடலைப்பருப்பு போளி செய்யும்போது, பொடித்த சர்க்கரையைச் சேர்த்தால் போளி நிறமாகவும், சுவையாகவும், மெல்லியதாகவும்  இருக்கும்.

தேங்காயை அதன் கண்பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால் சீக்கிரமாக அழுகிப்போகாது.

சூடான எண்ணையில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு, எதைப் பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.

காய்ந்துபோன ரொட்டித்துண்டுகளை  இட்லிப் பாத்திரத்தில் வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுத்தால் மென்மையாகிவிடும்.

வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன், சோம்பு, கொஞ்சம் கறிவேப்பிலை போட்டால் பக்கோடா வாசனை ஊரைத்தூக்கும்.

அரிசி, உளுந்தை அரைத்து எடுத்தவுடன், கையால் கரைக்காமல் கரண்டியினால் கரைத்து வைத்தால் தோசை மாவு அதிகம் புளிக்காது.

இதையும் படியுங்கள்:
கலர் ஃபுல்லான கேசரி வகைகள் நான்கு!
gewneral samayal tips in tamil

அப்பம் செய்யும் மாவில் சிறிது அளவு உருக்கிய நெய் கலந்து செய்தால், நெய் வாசத்துடன் அப்பம் மணக்கும்.

சப்பாத்தி செய்யும்போது கீழே ஒரு நியூஸ் பேப்பரை விரித்துக்கொண்டு செய்தால் தரையெல்லாம் மாவாகாது.

பாத்திரம் தேய்க்கும் ஸ்கிரப்பரை தினமும் நன்கு கொதித்த சுடுதண்ணீரில் கழுவி, வெயிலில் காயவைத்து பிறகு பயன் படுத்தவும். வீட்டில் கிருமிகள் தங்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com