
1. கீரை: நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் கீரையில் அதிகமான அளவில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது புற்றுநோயை உண்டாக்கும். அதுபோல் கீரை உணவுகளை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் அது செரிமானப் பிரச்னை ஏற்படு வதற்கும் காரணமாகிவிடும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே கீரையை சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
2. சமையல் எண்ணெய் : நீங்கள் எந்த வகையான சமையல் எண்ணெயை பயன்படுத்துபவராக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடு படுத்தி பயன்படுத்தக் கூடாது. இச்செய்கையால் அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அது புற்று நோய், இதயநோய் ஏற்படுவதற்கு காரணியாகவும் அமைந்துவிடும்.
3. முட்டை: அதிக அளவில் புரோட்டின் உள்ள உணவு முட்டை. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடு படுத்தினால் அது விஷமாக மாறும். இது செரிமானக்கோளாறு, வயிற்றுப்பிரச்னை களுக்கு வழி வகுக்கும். எனவே முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
4. காளான்: காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவது சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதை மீண்டும் சூடு படுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகள் உண்டாக்கும்.
5. பீட்ரூட்: பீட்ரூட்டும் கீரை வகைகளைப்போன்று நிறைய நைட் ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடு படுத்திப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் வைத்திருங்கள்.
6. உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது எடுத்து சூடு செய்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உண்டு. அப்படி செய்யும்போது சமைத்த உருளைக் கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக உருளைக் கிழங்கு நச்சுத்தன்மை உள்ளதாக மாறிவிடும். இதனால் வாந்தி, குமட்டல் போன்ற உடல் நலபாதிப்புகள் ஏற்படும்.
7. சாப்பாடு: அரிசி சாதம் நாம் தினமும் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப்பொருள் ஆகும். சாதத்தை மீண்டும், மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டு விடுங்கள். இதனால் அதில் நச்சுத்தன்மை அதிகரித்து ஃ புட் பாய்சனாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.