எண்ணெயே இல்லாமல் பூரி போல உப்பும் சப்பாத்தி! ஹோட்டல் மாஸ்டர் கூட சொல்லாத சீக்ரெட்!

Chapathi
Chapathi
Published on

நம்ம வீடுகளில் தினமும் நடக்கிற ஒரு பெரிய போராட்டம் எது தெரியுமா? அது சப்பாத்தி சுடுவதுதான். என்னதான் மாவு பிசைந்து, எண்ணெய் ஊற்றி, கஷ்டப்பட்டுத் தேய்த்துப் போட்டாலும், சுட்ட கொஞ்ச நேரத்திலேயே அது அப்பளம் மாதிரி வறண்டு போய்விடும். இல்லையென்றால், பரோட்டா மாதிரி ரப்பர் போல இழுக்கும்.

ஆனால், இனிமேல் அந்தக் கவலையே வேண்டாம். ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல், பூரி போல புசுபுசுவென உப்பும் சப்பாத்தி செய்வது எப்படி என்று ஒரு சூப்பர் டெக்னிக்கைப் பார்க்கப் போகிறோம். இதுக்குத் தேவை சரியான அளவும், கொஞ்சம் சுடுதண்ணீரும் மட்டும்தான்.

கணக்குதான் முக்கியம்!

இந்த சப்பாத்தி சாஃப்ட்டாக வருவதற்கு முக்கிய காரணமே அந்த "அளவு" தான். உங்க வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு கப் அல்லது டம்ளரை அளக்க எடுத்துக்கோங்க. அதில் 3 கப் கோதுமை மாவு எடுத்தால், சரியாக 2 கப் தண்ணீர் தேவைப்படும். இந்த அளவை மட்டும் மாற்றிவிடாதீர்கள்.

செய்முறை ரகசியம்:

வழக்கமாக மாவில் தண்ணீரை ஊற்றுவோம். ஆனால், இங்கே முறை கொஞ்சம் வேற. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் அந்த 2 கப் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள். தண்ணீர் 'தளதள'வெனக் கொதிக்கும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்துவிட்டு, அந்த 3 கப் மாவையும் உள்ளே கொட்டி ஒரு கிளறு கிளறுங்கள். 

இதையும் படியுங்கள்:
நீண்ட நேரம் பசி தாங்கும் சப்பாத்தி உப்புமா செய்வது எப்படி?
Chapathi

பார்ப்பதற்கு மாவு வறண்டது போலவும், தண்ணீர் பத்தாதது போலவும் தெரியும். பயப்பட வேண்டாம், அதுதான் சரியான பதம். உடனே அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு தட்டு போட்டு மூடி விடுங்கள். அந்த சூட்டிலேயே மாவு பாதியளவு வெந்து, பக்குவமாகிவிடும்.

பிசைவதும் சுடுவதும்!

மாவு கை பொறுக்கும் சூடு வந்ததும், அதை எடுத்து நன்றாகப் பிசையுங்கள். இப்போது மாவு உங்கள் கையில் வெண்ணெய் போல வழுக்கிக்கொண்டு போகும். அவ்வளவு மென்மையாக இருக்கும். எண்ணெய் தொடவே வேண்டாம்.

பிறகு, வழக்கம் போல உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் தேய்க்கவும். இதில் கவனிக்க வேண்டியது, சப்பாத்தியை எவ்வளவு மெலிதாகத் தேய்க்க முடியுமோ, அவ்வளவு மெலிதாகத் தேய்க்க வேண்டும். அப்போதுதான் அது பலூன் போல உப்பும்.

கடைசியாக, தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து, தேய்த்து வைத்த சப்பாத்தியைப் போடுங்கள். ஒரு பக்கம் லேசாக வெந்ததும், திருப்பிப் போடுங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு, எண்ணெய் இல்லாமலேயே அது பூரி போல தானாகவே உப்பி வரும்.

இதையும் படியுங்கள்:
மென்மையான மற்றும் சத்தான சப்பாத்தி தயாரிப்பது எப்படி?
Chapathi

இந்த முறையில் செய்யப்படும் சப்பாத்தி, உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காலையில் சுட்ட சப்பாத்தி, இரவு வரை அதே மென்மையுடன் இருக்கும். மாவு மிச்சமானால் கூட ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம். காய்ந்து போகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com