வெவ்வேறு நாடுகளின் சில சுவையான உணவு வகைகள்!

delicious dishes
Tasty samayal tips
Updated on

கொரியாவின் கிம்சி (Kimchi): இது மிகவும் பிரபலமான, காரமுள்ள, புளிப்புச் சுவையுள்ள ஒரு ஃபெர்மெண்ட் செய்யப்பட்ட காய்கறி உணவு. இது கொரியர்களின் நாள் தவறா உணவு. இதை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

நாப்பா கோஸ் (நீளமாக வெட்டியது) – 1

கரடுமுரடான உப்பு – 3 டேபிள்ஸ்பூன்

மிளகாய்தூள் – 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு – 4 பல் (நறுக்கியது)

இஞ்சி – 1 இஞ்ச் துண்டு (அரைத்தது)

சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்

Spring onion – 2 (வெட்டியதாக)

மஞ்சள் முள்ளங்கி – 1 கப் (நீளமாகச் சீவியதுபோல் வெட்டியது).

செய்முறை:

நாப்பா கோஸை கொஞ்சம் தண்ணீர் தெளித்து, கரடுமுரடான உப்பை அதில் நன்கு தேய்த்து 2 மணி நேரம் வைத்துவிடவும். இது கோஸை மெலிந்து, எளிதாக ஃபெர்மெண்ட் ஆக்க உதவுகிறது. அதன்பிறகு, தண்ணீரில் 2–3 முறை கழுவி உப்பை அகற்றவும். நன்கு வடிகட்டி வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான பூசணி கலவைக்கூட்டு - முள்ளங்கி சட்னி செய்யலாமா?
delicious dishes

ஒரு பாத்திரத்தில் சிவப்பு மிளகாய் தூள், பூண்டு, இஞ்சி, சர்க்கரை, spring onion, முள்ளங்கி சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இலகுவாக பேஸ்டாக்கவும். வடிகட்டிய கோஸில் இந்த மசாலாவை நன்றாக ஒவ்வொரு துண்டிலும் பூசி கலக்கவும். கையால் கிளறினால் நல்லது. கிம்சியை சுத்தமான கண்ணாடி ஜாடியில் விட்டு, மேல் கையளவு இடம் விட்டு மூடி வைக்கவும். அறை வெப்பத்தில் 1–2 நாள் வைக்கவும். பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். 3–5 நாட்களில் நல்ல புளிப்பு, காரம், மணம் வரும்.

சாதம், நூடுல்ஸ், புலாவ், புல்கோகி போன்ற உணவுகளுடன் side-dish ஆக பரிமாறலாம்.

பிரான்சு பாகு பானு (Baguette): என்பது ஒரு நீளமான, மென்மையான உள்தோலுடன் கூடிய, மேலே லேசான திடத் தோலுடன் இருக்கும் பிரபலமான ரொட்டி வகை. இது பாரிஸில் காலை உணவில் மிக முக்கியமானது. இந்த பாகெட் செய்முறை சற்று நேரம் மற்றும் பொறுமை தேவைப்படும் ஒரு traditional baking வகைதான்.

தேவையான பொருட்கள்:

மைதாமாவு – 3 கப் (சுமார் 375 கிராம்)

ஈஸ்ட் – 1 ¼ டேபிள் ஸ்பூன்

உப்பு – 1 ½ டேபிள்ஸ்பூன்

சர்க்கரை – ½ டேபிள்ஸ்பூன்

வெதுவெதுப்பான தண்ணீர் – 1 ¼ கப்

இதையும் படியுங்கள்:
கோடையை சமாளிக்க… ஏழு வகையான ரைத்தா ரெசிபிகள்!
delicious dishes

செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும். அதில் மைதா மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும். மென்மையான, கசக்கக்கூடிய மாவாக மசிக்கவும். (10-15 நிமிடம் நன்கு பிசைய வேண்டும்). மாவை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் வைக்கவும். மேல் மூடி 1 மணி நேரம் அல்லது இரட்டிப்பு அளவு வரை உயர விடவும். மாவை மூன்று சமஅளவாக பங்கு பண்ணி, ஒவ்வொன்றையும் நீளமாக உருட்டவும். ஒரு பேக்கிங் ட்ரேவில் மெதுவாக இடவும். மேல் சற்று மாவு தூவி, கழுவிய துணியால் மூடி மீண்டும் 30-40 நிமிடம் ஊற விடவும்.

ஓவன் ஐந்தரை நிமிடம் முன்பே 220°C (425°F) வரை காய வைக்கவும். பாகெட் மேல் கூர்மையான கத்தி அல்லது ரேசர் பிளேடு கொண்டு ஓரளவு நேராக வெட்டவும். ஓவனுக்குள் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்தால், மேல் பக்கத்தில் நன்கு கட்டியான தோல் வரும். 20–25 நிமிடம் வரை பேக் செய்யவும். வெண்மையாக உள்ள பாகுவை பட்டர், சீஸ், ஜாம், சூப், அல்லது sandwich மாதிரி வெட்டிப் பரிமாறலாம்.

இந்த வித்தியாசமான உணவை நாமும் செய்து பார்த்து சுவைக்கலாமே!

logo
Kalki Online
kalkionline.com