பால் கேசரி & ஸ்வீட் வடை: வீடே மணக்கும் விசேஷ பலகாரங்கள்!


Special dishes
Special dishes
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

- ஆ. நர்மதா

நாம் அடிக்கடி கேசரி செய்வதற்கு நீர் மட்டுமே பயன்படுத்துவோம். இன்று அதற்கு மாற்றாக பாலில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பால் கேசரி

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர்

நெய் - தேவையான அளவு

முந்திரி உலர் திராட்சை - தேவையான அளவு

சர்க்கரை - தேவையான அளவு

வறுத்த ரவை - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலையை எடுத்து அதில் ரவையை நன்கு வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை தனியாக எடுத்து வைக்கவேண்டும். அதே வாணலையில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு காய்ச்சிய பாலை வாணலையில் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும்.

பின்னர் அதில் ரவை சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவேண்டும். நாம் எடுத்து வைத்திருந்த முந்திரி திராட்சையும் சேர்த்து கிளறவேண்டும். இதற்கு எந்த ஃபுட் கலர் தேவைப் படுவதில்லை. பாலின் நிறமே போதுமானது மணக்கும் பால் கேசரி தயார். கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க இது புதுவிதமான டேஸ்ட்ல இருக்கும்.

செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு உளுந்து வடை செய்வது எப்படி?

உளுந்து வடை நாம காரமாத்தான் சாப்பிட்டு இருக்கோம். ஆனா, இந்த செட்டிநாடு ஸ்டைல்ல எப்படி இனிப்பா உளுந்து வடை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

உளுந்து - 250 கிராம்

கல்கண்டு - 100 கிராம்

ஏலக்காய் தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
இளநீர் வாங்கும்போது இதெல்லாம் கவனிக்காம வாங்காதீங்க!

Special dishes

செய்முறை:

உளுந்தம் பருப்பை நான்கு மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கற்கண்டு சேர்த்து மையாக அரைத்துக்கொள்ள வேண்டும் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவேண்டும். வாணலையில் எண்ணை ஊற்றி நன்கு கொதித்த பிறகு வடை பக்குவத்தில் அதை போடவேண்டும். இரண்டு புறமும் நன்றாக சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவேண்டும். செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு உளுந்து வடை தயார் ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் நல்லா இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com