

தேவை:
மிளகு பொடி 2டீஸ்பூன்
இடியாப்ப மாவு 1கப்
தேங்காய்பால் 2டேபிள்ஸ்பூன்
சீரகம்1டீஸ்பூன்
நல்லெண்ணெய் 2டீஸ்பூன்
நெய்1/2டீஸ்பூன்
உப்பு திட்டமாக
செய்முறை:
இடியாப்ப மாவில், தேங்காய்ப் பாலை இளஞ்சூடாக்கி விட்டு, உப்பும், நல்லெண்ணெயும் சேர்த்து நன்றாகப் பிசையவும். பின், குட்டிசைஸ் உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
அடுப்பில் இளந்தீயில் வாணலியை வைத்து, நெய் விட்டு சீரகம் போட்டு பொரிந்தவுடன், உருண்டைகளையும், மிளகு பொடியையும் சேர்த்துக்கிளறி தீயை அணைக்கவும். மிளகு சேர்ப்பதால். மாலை நேர டிபனுக்கு ஏற்றது.
பிறகு வேகவைத்த வெள்ளைக் கொழுக்கட்டையை, சுண்டல் தாளிப்பது போல், தாளிதத்துடன் வற்றல் கிள்ளிப் போட்டு தேங்காய்ப்பூ சேர்த்து பிரட்டி கொழுக்கட்டை சுண்டல் பண்ணலாம்.
தயிரில் உப்பு, காயம் சேர்த்து கடைந்து கொழுக் கட்டைகளைபோட்டு காராப்பூந்தி தூவி தயிர் கொழுக்கட்டை பண்ணலாம்.
வெல்லப்பாகு வைத்து, கொதிக்கும்போது கொழுக் கட்டைகளைப் போட்டு, ஏலப்பொடி தூவி முந்திரி பருப்பு வறுத்துப் போட்டு வித்தியாசமான கொழுக்கட்டை பாயசம் செய்யாலாம்.
ஒரே அடிப்படை மாவை வைத்து பலவிதமான சுவையான சிற்றுண்டிகளை உருவாக்குவதன் மூலம், சமையல் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு தினசரி மாலை நேர சிற்றுண்டிக்கு புதிய சுவைகளை பரிமாறி அனைவரையும் ஈர்க்கலாம்.