அடி பிடிக்காமல் மணமணக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வீட்டிலேயே செய்வது எப்படி?

கடை சுவையை மிஞ்சும் அசல் பதம் மற்றும் 4 முக்கிய ரகசியங்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாGemini image
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் தனித்துவமே அதன் திரண்ட பதம், பசும்பாலின் அசல் மணம் மற்றும் மிதமான தித்திப்புதான். உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சுவையில், அடி பிடிக்காமல், ஏலக்காய் மணமணக்க வீட்டிலேயே மிகச் சுலபமாகச் செய்ய உதவும் 4 மிக முக்கியமான குறிப்புகள் இதோ:

​1. அடி கனமான பாத்திரம் :

பால்கோவா செய்வதற்குப் பயன்படுத்தும் பாத்திரம் மிகவும் முக்கியம். எந்த பாத்திரத்தில் செய்தாலும் அடி கனமானதாக இருக்க வேண்டும். எனவே, வீட்டில் அடி கனமான வெண்கல உருளி அல்லது தடிமனான நான்-ஸ்டிக் (Non-stick) பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். இது சீரான முறையில் வெப்பத்தைப் பரப்பி, பால் அடியில் கருகாமல் பார்த்துக்கொள்ளும். அடி கனமான பாத்திரம் இல்லாதவர்கள் குக்கரிலும் செய்யலாம். ஆனால் கைவிடாமல் கிளற வேண்டியது மிக மிக அவசியம்.

​

2. மிதமான தீ மற்றும் கைவிடாத கிளறல்:

 முக்கியமாக தண்ணீர் சேர்க்காத மிகவும் கெட்டியான சுத்தமானபாலைக் கொதிக்க வைக்கும் போதும், அது ஆடையாக படிந்து சுண்டிவரும் போதும் அந்த ஆடையை கரண்டியால் தள்ளி பாலுக்குள் சேர்த்து ஓரங்களில் உள்ள சுண்டிய பாலையும் சேர்த்துக் கிளற வேண்டும். அடுப்பை எப்போதுமே மிதமான தீயில் (Medium Flame) வைக்க வேண்டும். பாலை, கரண்டியால் பாத்திரத்தின் அடியிலிருந்து சேர்த்துத் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கைவிடாமல் இப்படி கிளறும் பொழுது பால் பொங்கி வழிவதையும், அடிப்பிடித்துப் புகை வாசனை வருவதையும் இது முழுமையாகத் தடுக்கும்.

​

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாGemini image

3. சரியான சர்க்கரை சேர்ப்பதற்கான நேரம்:

ஆர​ம்பத்திலேயே முழு சர்க்கரையையும் சேர்த்துவிடக் கூடாது. பால் நன்கு வெந்து, பாதி அளவுக்குச் சுண்டி திரி திரியாக ரவை பதம் வரும், கோவா பதம் வருவதற்குச் சற்று முன்பு கெட்டியான பிறகுதான் 100 கிராம் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

சர்க்கரையை முன்கூட்டியே சேர்த்தால் சர்க்கரை சீக்கிரம் கேரமலைஸுடு பிரவுன் கலராக ஆகி அடிப்பிடித்துவிடும், பால்கோவாவின் நிறமும் கறுப்பாக மாறிவிடும். ஆதலால் கோவா கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்தால் தான் அந்த அசல் ஸ்ரீவில்லிபுத்தூர் வெள்ளை நிறமும் மணமும் கிடைக்கும்.

​4. நெய் விட்டு கைவிடும் பதம்:

கோவாவில் சர்க்கரை சேர்த்து பால்கோவா திரண்டு வரும் போது கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்தால் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். இப்பொழுது பொடித்து வைத்த ஏலப் பொடியை சேர்த்து கிளறி கலவை பாத்திரத்தில் இருந்து சுருண்டு வரும் பதத்தில் இட்லி மாவை விட சற்று தளர இருக்கும்போதே அடுப்பை அணைத்து விட வேண்டும். ஆறிய பிறகு பால்கோவா இன்னும் கெட்டியாகும் என்பதால், மாவை விட சற்று தளர இருக்கும் பதத்தில் இறக்கினால் கடைகளில் வாங்குவது போல மிருதுவாகவும் மணத்தோடும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
சரியான மாவு அளவுகளுடன் ஓமப்பொடி மற்றும் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

முக்கியமான குறிப்புகள்: 

பால்கோவா செய்ய அடி கனமான பாத்திரம் அவசியம். 

முதலில் மிதமான தீயிலும் சுண்டி வரும்போது குறைவான தீயிலும் வைத்து கிளற வேண்டும். 

கோவா கெட்டியான பிறகு சர்க்கரை சேர்த்தால் தான் முழுமையான வெள்ளை நிறம் கிடைக்கும். இதற்கு பால் நன்கு கெட்டியாகி, ரவை போன்ற திரி திரியான (திரண்ட) பால்கோவா பதத்திற்கு வரும் போது, எடுத்து வைத்துள்ள சர்க்கரையைச் சேர்க்கவும்.

ஒரு லிட்டர் பால் சுண்டி, கிட்டத்தட்ட கால் பங்காக (¼ portion) மாறும் வரை (சுமார் 25-30 நிமிடங்கள்) கிளறவும்.

இதையும் படியுங்கள்:
மைதா வேண்டாம்! கோதுமை மாவில் 4 வகை மொறுமொறு ஸ்வீட் முறுக்கு மற்றும் குல்கந்து ஜாமுன் ரெசிபி!
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

சர்க்கரை - 100 கிராம் (சுமார் 5 முதல் 6 டேபிள் ஸ்பூன் - சர்க்கரை முழுமையாகக் கரைந்து, பால்கோவா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு, பளபளப்பான பதத்திற்கு வரும்பொழுது எடுக்கவும்.

இந்த முறையை பின்பற்றி வீட்டில் செய்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற ருசி கிடைக்கும். ஏலக்காய் மணத்துடன் இந்த முக்கியமான நான்கு குறிப்புகளை மேற்கொண்டு அவரவர் வீட்டில் செய்து ருசிக்கலாம்.

கடைகளில் வாங்கும் அதே அசல் சுவை, திரண்ட பதம் மற்றும் ஏலக்காய் மணத்துடன் சுத்தமான பசும்பாலில் வீட்டிலேயே பால்கோவா தயாரிக்கும் முழுமையான தொழில்முறை வழிமுறையை வாசகர் பெற்றுச் செல்கிறார்.