கோடை வெயிலை வெல்லலாம்: உடல் சூட்டைத் தணிக்கும் 4 ‘கூலான’ உணவுகள்!

summer-cooling-foods
summer-cooling-foods
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கோடைக்கால உடல் சூட்டை தணித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ள வேண்டிய வெயில் கால உணவுகள் சிலவற்றை பார்க்கலாம்.

வெந்தய தேங்காய்ப்பால் கஞ்சி:

பச்சரிசி 1/2 கப்

வெந்தயம் 2 ஸ்பூன்

தேங்காய் பால் 2 கப்

பூண்டு 10 பற்கள்

தண்ணீர் தேவையானது

உப்பு தேவையான அளவு

அரிசி மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி 10 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு அத்துடன் தோல் உரித்த பூண்டு, 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து நன்கு குழைந்து வரும் வரை 4 விசில் விடவும். குக்கர் பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து வெந்த அரிசியை கரண்டியால் நன்கு மசித்து விடவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்கவிடவும். அதிகம் கொதிக்க தேவையில்லை. இந்த சூடான வெந்தய தேங்காய் பால் கஞ்சியை துவையலுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கோடைக்கு ஏற்ற உடல் சூட்டைக் குறைத்து, வயிற்றுப் புண்களை ஆற்றும், ஆரோக்கியமான காலை உணவு தயார்.

வெந்தய தோசை:

உடல் சூட்டைத் தணித்து, உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் இதனை நல்லெண்ணெய், கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.

பச்சரிசி 1 கப் (200கி.)

உளுத்தம் பருப்பு 1/4 கப்(50 கி)

வெந்தயம் 2 ஸ்பூன்

உப்பு சிறிது

வெல்லம் (அ) கருப்பட்டி 100 கிராம் நல்லெண்ணெய் தேவையான அளவு உப்பு சிறிது

வெந்தயம், அரிசி, உளுந்து ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து இரண்டு மணி நேரம் கழித்து அரைக்கவும். கடைசியாக கருப்பட்டியை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். இதனை நல்லெண்ணெய் விட்டு உடனடியாக தோசையாக வார்க்கலாம் அல்லது சிறிது நேரம் புளிக்க வைத்தும் வார்க்கலாம். சிறிது இனிப்பு, உப்பு, லேசான துவர்ப்புடன் ருசியாக இருக்கும் இது உடலுக்கு மிகவும் நல்லது.

வெல்லம் சேர்த்திருப்பதால் அடுப்பை நிதானமாக எரிய விட்டு தோசை வார்க்கவும். இல்லையெனில் பிய்ந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
மணக்கும் நீராத்தண்ணி சாதமும், நாவூறும் தனியாத் துவையலும்!
summer-cooling-foods

வெந்தயக் களி:

வெந்தயம் 100 கிராம்

பச்சரிசி 100 கிராம்

நல்லெண்ணெய் 1/2 கப்

வெல்லம் (அ) கருப்பட்டி 150 கிராம்

ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்

சுக்கு பொடி 1/2 ஸ்பூன்

வெந்தயத்தையும் பச்சரிசியையும் தனித்தனியாக ஊற வைக்கவும். பிறகு நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் வெல்லம்(அ) கருப்பட்டி சேர்த்துக்கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி களி கெட்டியாகி நல்லெண்ணெய் பிரிந்து வரும் சமயம் இறக்கி ஏலப்பொடி மற்றும் சுக்கு பொடியை சேர்த்துக்கிளறவும்.

உடலுக்கு பலத்தையும், வெயிலுக்கு குளிர்ச்சியையும் தரக்கூடியது இந்த வெந்தயக் களி.

நுங்கு பால் ஸ்மூத்தி:

நுங்கு 15

பால் 1/2 லிட்டர்

சர்க்கரை தேவையான அளவு

ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
சப்பாத்தி மாவை நீண்ட நேரம் மிருதுவாகவும், நிறம் மாறாமலும் சேமிப்பது எப்படி?
summer-cooling-foods

நுங்கை தோல் நீக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பாலை நன்கு காய்ச்சி அத்துடன் அரைத்த நுங்கு விழுதையும் சேர்த்து தேவையான சர்க்கரை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து சூடாக பரிமாறலாம் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து சில்லென்றும் பரிமாறலாம்.

வெயிலுக்கு இதமான, அனைவரும் விரும்பும் நுங்கு ஸ்மூத்தி தயார்.

logo
Kalki Online
kalkionline.com