இப்படி ஒரு முறை சுண்டைக்காய் குழம்பு செஞ்சு பாருங்க! 

Sundaikai kuzhambu recipe
Sundaikai kuzhambu recipe
Updated on

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுண்டைக்காய் குழம்பு, அதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளால் பலராலும் விரும்பப்படுகிறது. சுண்டைக்காய் குழம்பு வெறும் சாதத்துடன் மட்டுமல்லாமல் இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் சூப்பராக இருக்கும். இந்தக் குழம்பு பலவிதமான மசாலா பொருட்கள் மற்றும் புளி சேர்த்து தயாரிக்கப்படுவதால், அதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். 

சுண்டைக்காய் குழம்பு செய்வதற்கு பல விதமான முறைகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் இந்த குழம்பைத் தயாரிக்கும் முறை வேறுபட்டிருக்கும். ஆனால், மிகவும் அடிப்படையான சுண்டைக்காய் குழம்பு எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

  • சுண்டைக்காய் - 250 கிராம் (நறுக்கியது)

  • வெங்காயம் - 2 (நறுக்கியது)

  • தக்காளி - 2 (நறுக்கியது)

  • புளி - ஒரு எலுமிச்சை அளவு

  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

  • கொத்தமல்லித் தூள் - 1 தேக்கரண்டி

  • கடுகு - 1 தேக்கரண்டி

  • உளுந்து - 1/2 தேக்கரண்டி

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

சுண்டைக்காய் குழம்பு செய்வதற்கு முதலில் புளியை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் நன்றாகப் பிழிந்து புளிச்சாறு எடுத்துக் கொள்ளவும். 

அடுத்ததாக, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். 

வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக வாக்கிய மசாலாவில் சுண்டைக்காய் சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். பின்னர், புளிச்சாறு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். 

இதையும் படியுங்கள்:
மிக எளிதாக செய்யக்கூடிய குழம்பு வகைகள், மசியல் மற்றும் பச்சடி!
Sundaikai kuzhambu recipe

குழம்பு கொதித்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சமாக சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். இறுதியில், குழம்பு நன்றாக கொதித்து சுண்டைக்காய் வெந்த பிறகு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால், வேற லெவல் சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார். இதை செய்வது மிகவும் எளிது. 

சுண்டைக்காயில் நிறைய நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். எனவே, வாரம் ஒருமுறை சுண்டைக்காய் குழம்பு வைத்து சாப்பிடுவது நல்லது. 

logo
Kalki Online
kalkionline.com